Published:Updated:

`முதலில் தண்ணீர் எடுப்போம்; பின்னர் குடியேறுவோம்!' நிலாவில் என்ன செய்யவிருக்கிறார் ஜெஃப்?

அமெரிக்காவில் நிலவுப்பயணம் தொடர்பான பேச்சு தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. நிலவுக்கு மனிதனை அனுப்ப நாசா திட்டமிட்டு வரும் வேளையில், அந்தப் போட்டியில் தற்போது புதிதாக இணைந்திருக்கிறது ஜெஃப் பெஸாஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம்.

`முதலில் தண்ணீர் எடுப்போம்; பின்னர் குடியேறுவோம்!' நிலாவில் என்ன செய்யவிருக்கிறார் ஜெஃப்?
`முதலில் தண்ணீர் எடுப்போம்; பின்னர் குடியேறுவோம்!' நிலாவில் என்ன செய்யவிருக்கிறார் ஜெஃப்?

`இது நிலவுக்கு மீண்டும் செல்லவேண்டிய தருணம்' அமெரிக்காவில் இருக்கும் விண்வெளி நிறுவனங்கள் தற்போது விடாமல் உச்சரித்து வரும் மந்திரம் இதுதான். நிலவுப் பயணத்துக்குக் கடந்த முறை அமெரிக்காவுக்குச் சோவியத் யூனியன்தான் முக்கியமான போட்டியாளராக இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே வேறு, அமெரிக்காவுக்குள்ளேயே போட்டியாளர்கள் இருக்கிறார்கள். சமீபகாலமாக நாசாவுக்கு இணையாக ஸ்பேஸ் எக்ஸ் வளர்ந்து நிற்கிறது. தற்போது அந்தப் போட்டியில் ப்ளூ ஆர்ஜின் நிறுவனமும் புதிதாக இணைந்திருக்கிறது. இவர்களுக்கெல்லாம் இப்போது இருக்கக் கூடிய ஒரே ஒரு குறிக்கோள் நிலவில் கால் வைப்பதுதான்.

நிலவில் தண்ணீர் கொட்டிக்கிடக்கிறது... அதுவே நமக்கு மூலதனம்

`முதலில் தண்ணீர் எடுப்போம்; பின்னர் குடியேறுவோம்!' நிலாவில் என்ன செய்யவிருக்கிறார் ஜெஃப்?

உலக மில்லியனர்களின் ஒருவரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸுக்கும் விண்வெளிப் பயணம் தொடர்பான ஆர்வம் இல்லாமலில்லை. எதிர்காலத்தில் விண்வெளித்துறை என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே கணித்திருந்தார் ஜெஃப். எனவே 2000-ல் ப்ளூ ஆர்ஜின் (Blue Origin) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்குப் பின்னர் தொடங்கப்பட்டு தற்போது முன்னிலையில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு முன்னரே ப்ளூ ஆர்ஜின் தொடங்கப்பட்டு விட்டாலும்கூட இதன் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லை. இந்நிலையில்தான் சில நாள்களுக்கு முன்னால் நியூயார்க்கில் நிலவுக்குச் செல்லும் விண்கலத்தின் மாதிரியை அறிமுகப்படுத்தியிருந்தார் ஜெஃப். இதன் மூலமாகப் போட்டியில் தானும் இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த ப்ளூ மூன் லேண்டர் (Blue Moon lunar lander) விண்கலம் 3.6 முதல் 6.5 மெட்ரிக் டன்கள் அளவு எடைகொண்ட பொருள்களை நிலவின் தரைக்குக் கொண்டு செல்லும் திறன்கொண்டது.

`முதலில் தண்ணீர் எடுப்போம்; பின்னர் குடியேறுவோம்!' நிலாவில் என்ன செய்யவிருக்கிறார் ஜெஃப்?

இதுதவிர மனிதர்களைச் சுமந்து செல்லும் விண்கலமும் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் BE-4 என்ற புதிய இன்ஜின் பயன்படுத்தப்படவுள்ளது. திரவ ஹைட்ரஜனை இந்த இன்ஜின் எரிபொருளாகப் பயன்படுத்தும். இந்த இன்ஜின் 3.85 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு உந்து விசையை உருவாக்கும். இதன் மூலமாக அதிக எடையை ராக்கெட் சுமந்து செல்லும்.

`முதலில் தண்ணீர் எடுப்போம்; பின்னர் குடியேறுவோம்!' நிலாவில் என்ன செய்யவிருக்கிறார் ஜெஃப்?

``நிலவைப் பற்றி நாம் இன்று அறிந்து வைத்திருக்கும் மிக முக்கியமான விஷயம் அங்கே தண்ணீர் இருப்பதுதான். அது பனிக்கட்டி வடிவில் துருவப்பகுதிகளில் மறைந்திருக்கிறது. அதுவே நிலவில் மதிப்பில்லாத வளமாக இருக்கும் என ஜெஃப் பெஸாஸ் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் பூமியில் மனிதனுக்குத் தேவையான ஆதாரங்கள் வேகமாகக் குறைந்து வரும் வேளையில், அதைச் சமாளிக்க நிலவில் குடியேறுவது ஒரு நல்ல தீர்வாக அமையக் கூடும் என்பது கருத்தாக இருக்கிறது. மேலும் விண்கலம் திரவ ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் என்பதால் எரிபொருள் தேவைப்படும் போது நிலவில் இருக்கும் தண்ணீர் அதற்கு உதவும். எதிர்காலத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கு ப்ளூ ஆர்ஜினின் திட்டம் முதல்படியாக இருக்கும் எனவும் ஜெஃப் பெஸாஸ் தெரிவித்துள்ளார். 

அள்ளிக் கொடுக்கும் அமெரிக்க அரசு

`முதலில் தண்ணீர் எடுப்போம்; பின்னர் குடியேறுவோம்!' நிலாவில் என்ன செய்யவிருக்கிறார் ஜெஃப்?

நிலவுக்கு மீண்டும் செல்லும் திட்டத்திற்கு ஏற்கெனவே குறிப்பிட்ட அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில். தற்போது நாசாவுக்கு மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கூடுதல் நிதியாக அள்ளிக் கொடுத்திருக்கிறார் அதிபர் டொனால்டு டிரம்ப். ``என்னுடைய நிர்வாகத்தின் கீழ் நாம் மீண்டெழப்போகிறோம். அதன் மூலமாக மீண்டும் நிலவில் சென்ற பிறகு செவ்வாய்க் கிரகத்திலும் கால் பதிக்கப்போகிறோம். அதற்காகவே 1.6 பில்லியன் டாலர்களைக் கூடுதல் நிதியாக ஒதுக்கியிருக்கிறேன் இதன் மூலமாக நாம் மீண்டும் பெரிய அளவில் விண்வெளியில் சாதனை படைக்கப் போகிறோம்" என நாசாவைக் குறிப்பிட்டு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நிலவுப் பயணம் என்பது அமெரிக்காவுக்குப் புதிய விஷயமில்லை. நாசா ஆனால் இப்போது அதன் விண்வெளி ஓடங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டது. எனவே விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள பிற நிறுவனங்களையே நம்பியிருக்கிறது. 2024-ம் ஆண்டுதான் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தாலும். அதற்கான பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. விண்வெளிப் பயணத்துக்குத் தனியார் நிறுவனங்கள்தான் ஒரே வழி என்பது முடிவாகி விட்டதால் அது யார் என்பதைத் தேர்வு செய்யும் பணியில் இன்னும் சில மாதங்களில் நாசா இறங்கும் எனத் தெரிகிறது. அதே நேரம் பல விண்வெளி நிறுவனங்கள் களத்தில் இருக்கின்றன. அதில் முன்னணி நிறுவனங்கள் என்று பார்த்தால் ஸ்பேஸ் எக்ஸ் அல்லது ப்ளூ ஆர்ஜின் ஆகிய இரண்டும்தான் இருக்கின்றன, இவர்களில் யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறதோ? 

Vikatan