Published:Updated:

``நிலாவும் நீல் ஆம்ஸ்ட்ராங்கும்!” - தொலைந்துபோன டேப்புகள் திரும்பக் கிடைத்த கதை

``நிலாவும் நீல் ஆம்ஸ்ட்ராங்கும்!” - தொலைந்துபோன டேப்புகள் திரும்பக் கிடைத்த கதை
``நிலாவும் நீல் ஆம்ஸ்ட்ராங்கும்!” - தொலைந்துபோன டேப்புகள் திரும்பக் கிடைத்த கதை
``நிலாவும் நீல் ஆம்ஸ்ட்ராங்கும்!” - தொலைந்துபோன டேப்புகள் திரும்பக் கிடைத்த கதை

கடந்த நூற்றாண்டில்தான் அதிகப்படியான விண்வெளி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் முக்கியமானது, நிலாவில் காலடி வைத்தது.1969-ல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவில் காலடி வைத்த அந்த அற்புத தருணத்தை நாசா வீடியோ எடுத்திருந்தது. அந்த டேப்புகளைப் பத்திரமாக வைத்திருந்தது நாசா.ஆனால், 7 ஆண்டுகள் மட்டுமே அந்த ‘பத்திரமாக’ என்ற சொல் பொருந்தும். 1976-ல் நாசாவுக்கு இன்டெர்ஷிப்புக்காக வந்த மாணவர் ஜார்ஜ், சில முக்கியமான டேப்புகளை ஏலத்தில் எடுத்தார். அந்த டேப்புகளில், நிலாவில் காலடி வைத்த வீடியோக்களின் ஒரிஜினல் டேப்பும் கலந்திருந்தது. இதை நாசாவும் அறியவில்லை. அந்த மாணவரும் அறியவில்லை. 

65 வீடியோ டேப்புகளை வெறும் 218 டாலர்களுக்கு வாங்கிக்கொண்ட அந்த மாணவர், அதில் சிலவற்றை லோக்கல் தொலைக்காட்சி சேனல்களுக்கு விற்றுவிட்டார். அதில், அவருக்கு நல்ல லாபம். மற்ற டேப்புகளைப் பத்திரமாக வைத்துக்கொண்டார்.  இந்த ஆண்டு நிலாவில் காலடிவைத்து 40 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாட நினைத்த நாசா, அந்த டேப்புகள் பற்றி வெளியிட்டது. உடனே உஷாரான ஜார்ஜ், தன்னிடமிருந்த டேப்புகளை எடுத்து ஆராய்ந்தார். அதில், நீல் ஆர்ம்ஸ்ட்ராங் செய்த சாகசம் இருந்ததைக் கண்டு நிலாவுக்கே பறந்துவிட்டார் ஜார்ஜ். 

இப்போது அந்த டேப்புகள் ஏலத்துக்கு வரவிருக்கின்றன. ஆரம்ப விலையே 7 லட்சம் டாலர்கள். ஏலத்தில் 200 மில்லியன் டாலர் விலைபோகும் என கணிக்கப்பட்டிருக்கிறது. 200 டாலரில் வாங்கிய டேப்புகள் 33 ஆண்டில் 200 மில்லியன் ஆகியிருக்கிறது.

ஜார்ஜிடமிருக்கும் டேப்புகளை Sotheby இணையதளம் பார்த்து உறுதிசெய்து, செய்தி வெளியிட்டிருக்கிறது. ஜார்ஜுக்கு அடித்த அதிர்ஷ்டம் அடுத்து யாருக்கு அடிக்கப்போகிறதோ!