Published:Updated:

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட்!

விகடன் விமர்சனக்குழு
வெற்றிகரமாக  விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட்!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட்!
வெற்றிகரமாக  விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட்!

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட் இன்று மாலை 5.14 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைகோள்களையும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

கடந்த ஜூலை 1 ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து அதை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது.

இதை தொடர்ந்து, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1பி என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு, அது பி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.14 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதற்கான 58½ மணிநேர 'கவுண்ட்டவுன்' கடந்த 2 ஆம் தேதி காலை 6.44 மணிக்கு தொடங்கியது.

இந்த செயற்கைகோள் கடல் வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்த செயற்கைகோள் மூலம் 1,500 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். அதேபோல், தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.