Published:Updated:

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 சி செயற்கைகோள் கவுன்ட் டவுன் தொடங்கியது!

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 சி செயற்கைகோள் கவுன்ட் டவுன் தொடங்கியது!
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 சி செயற்கைகோள் கவுன்ட் டவுன் தொடங்கியது!
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 சி செயற்கைகோள் கவுன்ட் டவுன் தொடங்கியது!

ஸ்ரீஹரிகோட்டா: ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 சி செயற்கைகோள் கவுன்ட் டவுன் இன்று காலை தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 சி செயற்கை கோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை 6.32 மணிக்கு தொடங்கியது. இந்த செயற்கை கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் செயற்கை கோளில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 சி செயற்கைகோள் வருகின்ற 16 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.

இந்நிலையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 சி செயற்கை கோளை விண்ணில் செலுத்துவதற்கான 67 மணி நேரம் கவுண்ட் டவுன் இன்று காலை 6.32 மணிக்கு தொடங்கியது. இந்திய கடற்பகுதிகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 சி செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு தொழில்நுட்ப தேவைகளுக்கு பயன்படும் வகையில் 7 செயற்கை கோள்களை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி, புவி இருப்பிட அமைப்பை அறிந்து கொள்வதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1 ஏ மற்றும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1 பி ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை ஏற்கனவே இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பி உள்ளது.

தற்போது 3வதாக, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1 சி செயற்கை கோள், பி.எஸ்.எல்.வி. சி 26 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.