Published:Updated:

'அக்னி II பிரைம்' ஏவுகணை சோதனை வெற்றி!

விகடன் விமர்சனக்குழு
'அக்னி II பிரைம்' ஏவுகணை சோதனை வெற்றி!
'அக்னி II பிரைம்' ஏவுகணை சோதனை வெற்றி!
'அக்னி II பிரைம்' ஏவுகணை சோதனை வெற்றி!

புவனேஸ்வர்: அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கவல்ல, அதிநவீன 'அக்னி II பிரைம்' ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

ஒடிஷாவில் உள்ள ஏவுதளத்தில் காலை 9 மணியளவில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஏவுகணை 'அக்னி-IV' என அழைக்கப்படும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள அக்னி-II ஏவுகணை 2000 கி.மீட்டர் தூரம் வரை சீறிச் சென்று இலக்கை தாக்கவல்லது.

இந்நிலையில், இதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி 'அக்னி II பிரைம்' ஏவுகணை வடிவமைக்கப்பட்டது.

இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 3000 கிலோமீட்டர் தூரம் வரை சீறிச் சென்று இலக்கை தாக்கவல்லது.

இது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோதனை செய்யப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சோதனை தோல்வியைத் தழுவியது.

இப்போது தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.