Published:Updated:

`நொடிக்கு 18 கிலோமீட்டர் வேகம்' - பூமியை நெருங்கிவரும் சிறுகோள்

கி.நிவேதிகா

இன்னும் சில தினங்களில் இது பூமிக்கு அருகில் வந்துசெல்லும்.

Asteroid (Represent image)
Asteroid (Represent image)

விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்கற்கள், சிறுகோள்கள் அவ்வப்போது பூமிக்கு அருகில் வருவது வழக்கம். பெரும்பாலும் அவை எந்த சிக்கலையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றுவிடும். கடந்த சில நாள்களுக்கு முன்னால்கூட 569 மீட்டர் குறுக்களவுகொண்ட 2006QQ23 என்ற சிறுகோள், பூமிக்கு அருகே கடந்துசென்றது.

Vikatan
Asteroids (Represent image)
Asteroids (Represent image)

அதை நினைத்து, விஞ்ஞானிகள் பெருமூச்சு விடுவதற்குள் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அருகே மற்றுமொரு சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'Asteroid 2019 OU1' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் சிறுகோள், நொடிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் பூமியிலிருந்து 6,39,000 மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எனினும், இதனால் எந்தவித தீங்கும் பூமிக்கு நேராது என கணிக்கப்பட்டுள்ளதால், நாம் நிம்மதியடையலாம். வரும் 28-ம் தேதி, இச்சிறுகோள் பூமியைக் கடந்துசெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Asteroid (Represent image)
Asteroid (Represent image)

பிற கோள்களைப் போலவே இவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன. பெரும்பாலும் சிறுகோள்கள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் உள்ள நீள் வட்டப்பாதையிலேயே காணப்படும். சில நேரங்களில், மற்ற கோள்களின் ஈர்ப்பு விசையால் இதன் பாதை மாற்றியமைக்கப்பட்டு, வேறு திசையில் பயணிக்கத் தொடங்குகின்றன.

Vikatan