Published:Updated:

நோபல் பரிசு 2020: பால்வீதி மண்டலத்தின் இருண்டப் பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஆய்வுகள்!

ரோஜர்  பென்ரோஸ், ரெய்ன்ஹார்டு கென்ஸல், ஆன்ட்ரியா கெஸ்
ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்டு கென்ஸல், ஆன்ட்ரியா கெஸ்

ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்டு கென்ஸல், ஆன்ட்ரியா கெஸ் ஆகிய மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் கருந்துளைகள் பற்றிய ஆய்வுக்காக இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் மற்றும் பொருளாதார அறிவியல் ஆகிய ஆறு பிரிவுகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. இன்று இயற்பியல் துறைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்டு கென்ஸல், ஆன்ட்ரியா கெஸ் ஆகிய மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் கருந்துளைகள் பற்றிய ஆய்வுக்காக இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பால்வீதி மண்டலம்
பால்வீதி மண்டலம்

ரோஜர் பென்ரோஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கோட்பாடின் (General Theory of Relativity) அடிப்படையில் கருந்துளைகள் உருவாகும் விதம் குறித்த ஆராய்ச்சியை முன்னெடுத்தவர். இந்த ஆய்வுக்காக இந்த ஆண்டு விருதைப் பெறுகிறார். ஸ்டீபன் ஹாக்கிங் உடன் இணைந்து கருந்துளைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர் ரோஜர் பென்ரோஸ். அவருடன் இணைந்து 'எடிங்க்டன் மெடல்' உள்ளிட்ட சில விருதுகளையும் வென்றிருக்கிறார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நோபல் விருதுகளை வென்ற நூற்றாண்டு நெருங்கும் வேளையில் அவரின் 'பொதுச் சார்பியல் தத்துவம்' குறித்த ஆய்வுகள் இந்த ஆண்டு விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசு: ஹெப்படைட்டிஸ் சி வைரஸைக் கண்டறிந்த மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு கௌரவம்!
பால்வீதி மண்டலம்
பால்வீதி மண்டலம்

ரெய்ன்ஹார்டு கென்ஸல் மற்றும் ஆன்ட்ரியா கெஸ் இருவரும் இரண்டு ஆராய்ச்சிக் குழுக்கள் மூலமாக நமது பால்வீதி மண்டலத்தின் (Milky Way) மையப் பகுதி குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அதிகத் திறன் வாய்ந்த தொலைநோக்கிகள் மூலமாக பால்வீதி மண்டலத்தின் மையத்தை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர். இவ்வாராய்ச்சியின் முடிவில் நமது பால்வீதி மண்டலத்தின் Sagittarius A* எனும் மையப்பகுதியில் மிக அதிக நிறை கொண்ட, புலனாகாத பருப்பொருளின் - (THE SUPERMASSIVE COMPACT OBJECT) இருப்பைக் கண்டறிந்தனர்.

கருந்துளைகள் குறித்த இந்த ஆய்வுகள் அடுத்தடுத்த ஆய்வுகளுக்கான கதவுகளைத் திறந்துவைத்திருக்கிறது.
அடுத்த கட்டுரைக்கு