Published:Updated:

சந்திரயான-2: இறுதி நிமிடங்களில் லேண்டருடனான தொடர்பு அறுந்தது!#LiveUpdates

நீங்கள் நாட்டுக்கு மிகப்பெரிய, சேவையை ஆற்றியுள்ளீர்கள். தைரியமாக இருங்கள் என பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.

08 Sep 2019 12 AM

'இஸ்ரோவின் முயற்சிகளை மனமார பாராட்டுகிறோம்' நாசா புகழாரம்

'விண்வெளி ஆராய்ச்சி சிக்கலானது, 'இஸ்ரோவின் முயற்சிகளை மனமார பாராட்டுகிறோம்' என நாசா ட்வீட் செய்துள்ளது.

07 Sep 2019 9 AM

கலங்கிய சிவன், கட்டியணைத்த மோடி!

சற்றுமுன் இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளிடையே உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. "அறிவியலில் தோல்விகள் என்பதே இல்லை, சோதனைகள் மட்டுமே உண்டு" என்று விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்தும் நோக்கில் அமைந்தது அவர் பேச்சு. இறுதியாக புறப்படும்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தமுடியாமல் இஸ்ரோ தலைவர் சிவன் கலங்கிநிற்க, கட்டியணைத்து ஆறுதல் கூறி விடைபெற்றார் மோடி.

07 Sep 2019 9 AM

பூட்டான் பிரதமர் வாழ்த்து!

"நாங்கள் இந்தியா மற்றும் அதன் விஞ்ஞானிகளை நினைத்துப் பெருமைகொள்கிறோம். சந்திரயான் 2 இறுதி நேரத்தில் சில சவால்களைச் சந்தித்தது, ஆனால் உங்கள் உழைப்பு வரலாற்றுப் பெருமைமிக்கது. பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி நன்கு அறிவேன். அவரும் இந்த குழுவும் இதை ஒரு நாள் இந்த இலக்கை நிச்சயம் சாதிப்பார்கள்."

-பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங் (Lotay Tshering)

07 Sep 2019 6 AM

நாட்டு மக்களிடம் உரையாற்றும் மோடி!

நிலவின் தென் துருவத்தை நெருங்கும் வேளையில் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் லேண்டருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனினும் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சந்திரயான் 2 நிகழ்வுகளை நேரடியாக பார்வையிட வந்த பிரதமர் மோடி, இன்று காலை 8 மணிக்கு சந்திரயான் 2 திட்டம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

07 Sep 2019 2 AM

தைரியமாக இருங்க!

'உங்களது உழைப்பு சாதாரணமானது அல்ல, தைரியமாக இருங்கள்' என துவண்டு போன இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி!

07 Sep 2019 2 AM

லேண்டருடன் தொடர்பு இல்லை!

Lander has lost communication with Ground Station
Lander has lost communication with Ground Station

"நிலவின் மேற்பரப்பிலிருந்து 2.1 கிலோமீட்டர் உயரம்வரை எதிர்பார்த்ததைபோலவே லேண்டர் பயணித்திருக்கிறது. அதற்குபின் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல்களை ஆராயவுள்ளோம்" என தெரிவித்தார் இஸ்ரோ தலைவர் சிவன்.

07 Sep 2019 2 AM

பதற்றநிலையில் இஸ்ரோ மையம்!

Tensions rise at ISRO centre!
Tensions rise at ISRO centre!

Rough braking வெற்றிகரமாக முடிந்து Fine braking தொடங்கியது. இதற்குப்பின் சரியான சிக்னல்கள் கிடைக்கப்பெறாததால் இஸ்ரோ கண்காணிப்பு மையத்தில் பதற்றம் நிலவுகிறது.

07 Sep 2019 1 AM
07 Sep 2019 1 AM

சவாலான தரையிறங்கும் பணிகள் தொடங்கியது!

Challenging Landing process starts
Challenging Landing process starts

அடுத்த 15 நிமிடங்களில்தான் சந்திரயான் 2-வின் வெற்றி தீர்மானிக்கப்படும்.

07 Sep 2019 1 AM

இஸ்ரோ கண்காணிப்பு மையம் வந்துசேர்ந்தார் பிரதமர் மோடி!

இஸ்ரோ கண்காணிப்பு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார் இஸ்ரோ தலைவர் சிவன்.

Modi with ISRO Sivan
Modi with ISRO Sivan
DD News
07 Sep 2019 1 AM

இஸ்ரோ கண்காணிப்பு மையத்தில் சூடுபிடிக்கும் இறுதி பணிகள்!

பெங்களூரு இஸ்ரோ கண்காணிப்பு மையத்தில் இறுதி சோதனை பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகிறது. Quiz போட்டியில் வென்ற மாணவர்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க தரையிறங்குதலை காண ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

07 Sep 2019 1 AM

நேரலை தொடங்கியது!

The soft landing of Chandrayaan-2 Vikram lander on lunar surface is scheduled between 1:30 am to 2:30 am on Saturday, September 07, 2019

Posted by Vikatan EMagazine on Friday, September 6, 2019
07 Sep 2019 12 AM

'இந்தியா அனுப்பும் செயற்கைக்கோள்களால் சாமானியனுக்கு என்ன நன்மை?'

"இன்று பெரும்பாலானோர் நினைப்பதுபோல, வெறும் சாதனைகளுக்காக மட்டுமே செயற்கைகோள்கள் ஏவப்படுவதில்லை. எங்களோட நோக்கமெல்லாம் வெறும் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விடுவதோ செயற்கைக்கோள்களை அனுப்புவதோ அல்ல; அதன்மூலமாகப் பூமியில் இருக்கும் மக்களுக்கு உதவுவதுதான் உண்மையான நோக்கம். ஆனால், செய்திகளில் ராக்கெட் வெற்றியடைந்த விஷயத்தை மட்டுமே மக்கள் கவனிப்பதால், இவற்றை மறந்துடுறாங்க. இன்று விண்ணில் நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு செயற்கைக்கோளும் நம்முடைய அன்றாடப் பயன்பாட்டில் ஏதோ ஒரு விஷயத்துடன் தொடர்புகொண்டதாகத்தான் இருக்கும். நேவிகேஷன், பேரிடர் முன்னறிவிப்பு, இயற்கை வளங்களைக் கண்டறிதல் என எத்தனையோ பணிகளை அவை மேற்கொள்கின்றன. இவற்றுக்காக நம் நாடு இதுவரை செலவு செய்ததைவிடவும், இவற்றின்மூலம் தேசம் அடைந்த நன்மைகள் அதிகம். செயற்கைக்கோள்கள் மட்டுமல்ல; சந்திரயான், ககன்யான் போன்ற திட்டங்களும்; எல்லாமே எதிர்காலத் தேவையை மனதில் வைத்துதான் ஏவப்படுகின்றன. உதாரணமாக, நம்முடைய பூமியில் நாம் பயன்படுத்தும் எரிபொருள்கள் அனைத்தும் மிக வேகமாகத் தீர்ந்துவருகின்றன. இன்னும் சில நூறு ஆண்டுகள் போனால் இந்த எரிபொருள்கள் மொத்தமும் முழுமையாகத் தீர்ந்துபோகலாம்; அதற்காக மாற்று என்ன செய்யலாம் என ஆராய்ச்சிகள் நடந்துவருது. இதற்காக நிலவில் இருந்து ஹீலியம் 3-ஐ எடுத்து வந்து பயன்படுத்த முடியுமா என்று பார்ப்பதற்காகத்தான் சந்திரயான் 2-வையும் அனுப்புகிறோம். இப்படி நம்முடைய எல்லா திட்டங்களும் எதிர்காலத் தேவைகளோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையதுதான்."

(முன்பு விகடனுக்கு அளித்த பேட்டியில் இஸ்ரோ சிவன்.)

07 Sep 2019 12 AM

ஜெஃப் பெஸாஸின் வாழ்த்து!

07 Sep 2019 12 AM

சந்திரயான்-2 தரையிறங்கும் தென்துருவம்!

Chandrayaan 2 Landing site
Chandrayaan 2 Landing site
06 Sep 2019 11 PM

1.15 மணி முதல் நேரலை!

06 Sep 2019 11 PM

சந்திரயான் 2-விற்கு பின்னிருக்கும் பங்களிப்பு!

முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளாலேயே உருவாக்கப்பட்ட சந்திரயான் 2-வில் இந்தியாவின் 620 தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு இருக்கிறது

06 Sep 2019 11 PM

சந்திரயான்-2 முன்னிருக்கும் சவால்கள்

8 Challenges for Chandrayaan-2
8 Challenges for Chandrayaan-2
06 Sep 2019 10 PM

இஸ்ரேல் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்ற இஸ்ரோ!

கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேலின் பேரேசீட் என்னும் விண்கலமும் நிலவில் இதே போன்ற Soft landing-ஐ முயற்சி செய்தது. ஆனால் தரையிறங்கும் கடைசி நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்து நிலவின் பரப்பில் மோதியது பேரேசீட். இன்று விக்ரம் லேண்டருக்கும் இந்த தரையிறங்கும் படலம்தான் சவாலாக இருக்கப்போகிறது. இஸ்ரேல் செய்த தவறுகளிலிருந்து இஸ்ரோ பாடம் கற்றுள்ளதாகத் தெரிவித்தார் சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.

Vikatan
06 Sep 2019 10 PM

விறுவிறுப்பாக இயங்கும் பெங்களூரு இஸ்ரோ கண்காணிப்பு மையம்!

06 Sep 2019 10 PM

சந்திரயான்-2 தரையிறங்குதலை பார்க்க பெங்களூரு வந்தடைந்த பிரதமர் மோடி!

சந்திரயான்-2 தரையிறங்குதலை பார்க்க பெங்களூரு வந்தடைந்தார் பிரதமர் மோடி. கர்நாடக முதல்வர் எடியூரப்பா வரவேற்றார். இஸ்ரோ மையத்தில் தரையிறங்குதலை நேரலையாக பார்க்கிறார்.

06 Sep 2019 10 PM

நிலவில் என்ன செய்யவிருக்கிறது சந்திரயான் 2?

What will Chandrayaan 2 do on Moon?
What will Chandrayaan 2 do on Moon?
06 Sep 2019 10 PM

ட்விட்டரில் இந்திய அளவில் நம்பர் 1 டிரெண்டிங்கில் #Chandrayaan2 ஹேஷ்டெக்!

#Chandrayaan2 trending
#Chandrayaan2 trending
06 Sep 2019 10 PM

நேரலை விவரம்

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை தூர்தர்ஷன், நேஷனல் ஜியோகிராபிக் சேனல்களில் பார்க்கமுடியும். இஸ்ரோவின் யூடியூப் பக்கம் மற்றும் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யவும் முடியும்.

06 Sep 2019 9 PM

டிக்...டிக்...டிக் திகில் கிளப்பப்போகும் அந்த 15 நிமிடங்கள்! #Chandrayaan2

டிக்...டிக்...டிக்
திகில் கிளப்பப்போகும் அந்த 15 நிமிடங்கள்! #Chandrayaan2
06 Sep 2019 9 PM

சந்திரயான் 2 திட்ட விவரங்கள்

Chandrayaan 2 Mission details
Chandrayaan 2 Mission details
06 Sep 2019 7 PM

பிரக்யான் - சந்திரயான் 2 -வின் ரோவர்

06 Sep 2019 7 PM

விக்ரம் - சந்திரயான் 2-வின் லேண்டர்

சந்திரயான் 2 முன் இருக்கும் சவால்!

இன்னும் சில மணி நேரம்தான், இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தென் துருவத்தைத் தொட்டுவிட காத்துக் கொண்டிருக்கிறது, சந்திரயான்-2. பல்வேறு தடைகளைத் தாண்டி, கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட நாளிலிருந்தே இஸ்ரோ காத்துக்கொண்டிருப்பது இந்த நாளுக்காகத்தான். சொல்லப்போனால், இந்த நீண்ட பயணத்தில் பெரிய சவாலாக இருக்கப்போகும் படலம் இதுதான்.

Chandrayaan 2 landing
Chandrayaan 2 landing

இந்தியாவின் இரண்டாவது நிலவு மிஷனான இந்த சந்திரயான் 2-வின் பட்ஜெட், 978 கோடி ரூபாய். இது வெற்றிகரமாக நடந்தால் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்குப் பின் நிலவில் பாதுகாப்பான தரையிறங்குதல் செய்யும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா அடையும். ஏற்கெனவே, சந்திரயான் 1 நிலவில் crash landing செய்திருக்கிறது என்றாலும் இது சற்றே சவாலானது.

06 Sep 2019 7 PM

கடந்த செப்டம்பர் 2-ம் தேதி, விக்ரம் எனப்படும் லேண்டர் சந்திரயான் -2 ஆர்பிட்டரிலிருந்து பிரிந்தது. இதற்குப் பின், விக்ரம் லேண்டர் இரண்டு சுற்றுப்பாதைகள் சுற்றி, சந்திரனின் தென் துருவப் பகுதியில் இன்று நள்ளிரவு (7.9.2019) தரையிறங்க உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் ஏற்கெனவே செய்திருந்தாலும் இந்த சாஃப்ட் லேண்டிங் சவாலான பணிதான். சமீபத்தில், இஸ்ரேலின் beresheet எல்லாம் சரியாகச் செய்து இதில்தான் தோல்வியைச் சந்தித்தது. இதுமட்டுமல்லாமல், விக்ரம் லேண்டர் யாரும் செல்லாத அளவுக்கு தெற்குப் பகுதியில் தரையிறங்க உள்ளது. இங்குதான் South Pole-Aitken basin இருக்கிறது. விண்கல் தாக்கத்தால் மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த கரடுமுரடான பகுதி இது. இதனால் தரையிறங்கும்முன் அந்தப் பகுதியை ஆராய்ந்து, அதன்பின்தான் எங்கே தரையிறங்கலாம் என்பது முடிவெடுக்கப்படும்.

தரையிறங்கிய பின், ப்ரக்யான் என்னும் ரோவர், லேண்டரிலிருந்து வெளிவந்து நிலவின் பரப்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும். இதுவும், தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் மற்றும் அங்கிருக்கும் கனிமவளங்களை ஆராய்ச்சி செய்யும். ஒரு நிலவு நாள் (14 நாள்கள்) ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இந்த ரோவர். ஆனால், லேண்டர் தரையிறங்கியவுடன் ரோவர் வெளிவந்துவிடாது. இதற்குக் காரணம், தரையிறங்கும்போது அவை ஏற்படுத்தும் புழுதிதான். நிலவின் புவிஈர்ப்பு குறைவு என்பதால், இவை தனிய சில மணி நேரம் ஆகலாம். எனவே, ரோவர் வெளிவர அதிகாலை 6 மணி ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சரியாக நடந்துவிட்டால், விண்வெளி துறையில் வரலாற்றுச் சாதனை படைக்கும் இந்தியா.

Vikram Lander
Vikram Lander

சவாலான இந்த திக்..திக்...நிமிடங்களைப் பார்க்க இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே ஆர்வமாகக் காத்துக் கொண்டிருக்கிறது. சந்திரயான்-2 தொடர்பான லைவ் அப்டேட்களை இனி இங்கே பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு