Published:Updated:

`எந்த நாடும் செய்யாத முயற்சி; சந்திராயன் - 2 இந்தியாவின் கௌரவம்!' - இஸ்ரோ தலைவர் சிவன்

ராம் பிரசாத்

சந்திராயன் -2 விண்கலம் இந்தியாவின் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க பணி என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

 இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன்

`சந்திராயன் - 2’ உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் விண்கலம். நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய விஞ்ஞானிகள் இந்த விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்துக்கு அனுப்பியதில்லை என்பதால் மற்ற நாடுகளின் கவனம் சந்திரயான் -2 மீது உள்ளது. சந்திராயன் - 2 விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதியில் பேசியுள்ளார்.

சந்திராயன் - 2மாதிரிப்படம்
சந்திராயன் - 2மாதிரிப்படம்
ISRO

இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதியில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், ``சந்திராயன் -2 விண்கலம் திட்டமிட்டப்படி திங்கள்கிழமை விண்ணில் ஏவப்படும். இது இந்தியாவின் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க பணியாகும். ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இந்தப் பணிக்குப் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த ராக்கெட் வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்டதும் இரண்டு மாத பயணங்களுக்கும் பின் சந்திராயன் -2 நிலவின் தென் துருவப் பகுதியை அடையும்.

இதுவரை எந்த விண்கலமும் கால் பதிக்காத இடத்தில் சந்திராயன் - 2 தனது தடத்தை பதிக்கவுள்ளது. இதுவரை எந்த நாடும் இதற்காக முயற்சியில் இறங்கவில்லை. இந்த முயற்சியானது நிலவு குறித்த அறிவியலில் நிறைய புதிய வெளிப்பாடுகளை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

சந்திராயன் - 2மாதிரிப்படம்
சந்திராயன் - 2மாதிரிப்படம்
ISRO

எந்த இடையூறும் இல்லாமல் சந்திராயன் - 2 தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி விண்கலம் விண்ணில் ஏவப்படும்'' எனத் தெரிவித்தார்.