Published:Updated:

`நிலவை நெருங்கும் சந்திரயான் -2' - ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டரைப் பிரிக்கும் பணிகள் தொடக்கம்!

ச.கிருத்திகா

இன்னும் நிலவில் தரையிறங்க ஒரு வாரமே இருக்கும் நிலையில் சந்திரயான் 2 திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Vikram lander
Vikram lander ( ISRO )

நேற்று ஞாயிற்றுக்கிழமை, சந்திரயான் -2 அதன் final manoeuvre-ஐ முடித்து 119 கி.மீ x 127 கி.மீ சுற்றுப்பாதையை அடைந்தது. இது குறித்து இஸ்ரோ கூறியதாவது: "சந்திரயான்-2 விண்கலத்துக்கான இறுதி மற்றும் ஐந்தாவது சந்திர-சுற்றுப்பாதை இயக்கம் நேற்று (செப்டம்பர் 1, 2019) திட்டமிட்டபடி இந்திய நேரப்படி18.21 மணிக்கு உள்நோக்கி உந்துவிசை (onboard propulsion system) முறையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது."

சந்திரயான் 2
சந்திரயான் 2
ISRO

சந்திரயான் 2-வின் அடுத்த நடவடிக்கை, விக்ரம் லேண்டரை சந்திரயான் -2 ஆர்பிட்டரிலிருந்து பிரிப்பது, இன்று (செப்டம்பர் 02, 2019) 12.45 - 13.45 மணிக்கு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டர் இரண்டு சுற்றுப்பாதைகள் சுற்றி சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்குவதற்கு ஆயத்தமாக்கப்பட்டுள்ளது" என்று இஸ்ரோ கூறியுள்ளது.

Chandrayaan 2 final schedule
Chandrayaan 2 final schedule

இதற்கிடையில், பிரதமர் மோடி செப்டம்பர் 7-ம் தேதி பெங்களூருவிலிருந்து சந்திரயான் 2 தரையிறங்குவதை நேரலையில் பார்ப்பார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் செப்டம்பர் 7-ம் தேதி பெங்களூரிலிருக்கும் இஸ்ரோவின் டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்குக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரோவுக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புத் தருணமாக இருக்கும், ஏனெனில், ஒரு இந்திய விண்வெளி நிறுவனம் சரியாகச் சந்திரனின் தென் துருவத்தில் ஒரு ரோவரை தரையிறக்குதல் என்பது இதுவே முதல் முறையாகும். இந்தியா முழுவதும் 75 - 80 பள்ளி மாணவர்களும் இந்த நிகழ்வின் அங்கமாக இருப்பர். இஸ்ரோ நடத்திய விநாடி வினா போட்டியின் அடிப்படையில் இந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒரு வாரமாக முக்கிய பணிகள் நடந்துவருவதால், இஸ்ரோவில் உள்ள அனைவரும் மன அழுத்தத்தைச் சந்தித்துவருகின்றனர் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியிருக்கிறார். செப்டம்பர் 7 இவர்களது உழைப்புக்குப் பலன் கிடைக்கும் என்று நம்புவோம்.

நிலவில் யாருமே செல்லாத இடத்துக்குச் செல்லும் சந்திரயான் 2... சாதிக்க இருப்பது என்ன?