Published:Updated:

பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பு - இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

பூமி (representational)

பூமி வழக்கத்தைவிட வேகமாகச் சுழன்று வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பு - இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

பூமி வழக்கத்தைவிட வேகமாகச் சுழன்று வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

Published:Updated:
பூமி (representational)

இந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. சூரியனைச் சுற்றியுள்ள 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 23 மணிநேரம் 56 நிமிடம் 4.09 நொடிகள் எடுத்துக்கொள்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது, பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பூமி வேகமாகச் சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் கடந்த ஜூலை 26 அன்று வழக்கமான நேரத்தை விட 1.59 மில்லி விநாடிகளுக்கு முன்னதாகவே பூமி தனது ஒரு நாள் சுழற்சியை நிறைவு செய்துள்ளது.

பூமி சுழற்சி குறித்த கிராப்
பூமி சுழற்சி குறித்த கிராப்

இதற்கு முன்பு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 19ம் தேதி அன்று பூமி மிகவும் வேகமாகச் சுழன்று, 1.47 மில்லி விநாடிகளுக்கு முன்னதாக தனது ஒரு நாள் சுழற்சியை நிறைவு செய்திருந்தது. தற்போது, அதைவிட வேகமாகச் சுழன்று 1.59 மில்லி விநாடிகளுக்கு முன்னதாகவே தனது ஒரு நாள் சுழற்சியை நிறைவு செய்துள்ளது. இதற்கான காரணங்கள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன.

பனிப்பாறைகள் உருகுவது, பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள், வளிமண்டலத்தின் இயக்கம் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆகிய பல்வேறு காரணங்களால் பூமியின் சுழலும் வேகத்தில் மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம் என்று இது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூமி (representational)
பூமி (representational)

இவ்வாறு பூமியின் சுழலும் வேகத்தில் ஒரு விநாடி அதிகரித்தாலும் அது கால அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் தொலைத்தொடர்பு அமைப்புகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், பூமியின் சுழற்சி அதிகரித்தால், அணு கடிகாரத்தில் (Atomic Clock) விநாடிகளைக் குறைக்க வேண்டியிருக்கும் என்றும் இதனை சரிக்கட்ட ஒருங்கிணைந்த யூனிவர்சல் நேரத்தை (யூடிசி) மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.