Published:Updated:

`ககன்யான்’ திட்டத்துக்கு ரஷ்யாவில் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் இஸ்ரோ!

ISRO
ISRO

`ககன்யான்' திட்டத்தின் மூலம்தான் மனிதர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்புகிறது இந்தியா.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் `ககன்யான்' திட்டத்துக்காக நான்கு விண்வெளி வீரர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து 11 மாதம் பயிற்சியளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார். விண்வெளி வீரர்கள் இந்தப் பயிற்சியை ரஷ்யாவில் பெற உள்ளனர். இந்தப் பயிற்சிக்குப் பிறகு இஸ்ரோ தயாரித்துள்ள Module-ஐ இயக்குவது மற்றும் அதைச் சுற்றி எப்படி வேலை பார்ப்பது உள்ளிட்ட பயிற்சியை விண்வெளி வீரர்கள் பெறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

sivan gaganyan
sivan gaganyan

10,000 கோடி ரூபாயில் மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டமானது 2022-ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக `Baahubali GSLV Mark-III' ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த `ககன்யான்' திட்டத்தின் மூலம்தான் மனிதர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்புகிறது இந்தியா.

`இனி அமெரிக்க GPS வேண்டாம்... இந்தியாவின் NavIC ரெடி!' இஸ்ரோ அதிரடி
isro sivan
isro sivan

மேலும், இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக் கோளான `GSAT-30' இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பிரென்ச் கயானாவில் (French Guiana) இருந்து இந்திய நேரப்படி அதிகாலை 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. சரியாக 38 நிமிடங்கள் 25 விநாடிகளில் ராக்கெட்டிலிருந்து பிரிந்து விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. DTH சேவை முதல், e-Governance சேவை வரையிலான தகவல் தொடர்பு சேவைகளுக்கு இந்தச் செயற்கைகோள் பயன்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு