Published:Updated:

Geminid Meteor Shower: இந்திய வானில் எங்கு தென்படும் எரிகற்கள் மழை?!

Geminid Meteor Shower
News
Geminid Meteor Shower

Geminid Meteor Shower: இந்த எரிகற்கள் எறிந்து விழுவதற்கு முன்பு 29 மைல் வரை பூமிக்கு அருகில் வருவதால் மிகவும் பிரகாசமாக தெரியும். இந்த ஜெமினிட் மெடியார்கள் எப்படி உருவானவை என்பது குறித்து பல கருத்துக்கள் உள்ளன.

நாம் எரிகற்கள் வானத்தில் இருந்து விழுவதை எப்போதாவது கண்டிருப்போம். ஆனால் பல எரிகற்கள் ஒரே சமயத்தில் விழுவது `மெடியார் ஷவர்' என்று அழைக்கப்படும். அந்த எரிகற்கள் மழை சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறது. இந்த மெடியார் ஷவர் அடிக்கடி நிகழும் என்றாலும் இப்போது நடந்த மெடியார் ஷவர் மிகவும் விசேஷமானது. ஜெமினிட் மெடியார் ஷவர் ( Geminid Meteor Shower ) என்றழைக்கப்படும் இந்த மெடியார் ஷவர் மற்ற மெடியார் ஷவர்களை ஒப்பிடும்போது அதிக எரிகற்களைக் கொண்டது. இந்த மெடியார் ஷவர் ஏற்படும் சமயத்தில் ஒரு மணி நேரத்தில் 150 எரிகற்கள் வரை தென்படும். இந்த எரிகற்கள் எறிந்து விழுவதற்கு முன்பு 29 மைல் வரை பூமிக்கு அருகில் வருவதால் மிகவும் பிரகாசமாக தெரியும். இந்த ஜெமினிட் மெடியார்கள் எப்படி உருவானவை என்பது குறித்து பல கருத்துக்கள் உள்ளன. இவை பான்தியான் 3200 (pantheon 3200) என்னும் வான்வெளிப் பொருளின் மிச்சம் என்று கூறப்படுகிறது.

மெடியார் ஷவர்
மெடியார் ஷவர்

சில வானவியலாளர்கள் இவற்றை பழைய கோல்களின் கழிவுகள் என்றும் கூறுகிறார்கள். இந்த ஜெமினிட் மெடியார்கள் வருடாவருடம் டிசம்பர் மாதம் தென்படும். 1800 களின் மத்தியில் இருந்தே இவை தென்பட்டு வந்தாலும் அப்போது இதன் அடர்த்தி குறைவு. அப்போதெல்லாம் ஒரு மணிநேரத்திற்கே 10 முதல் 20 தான் தென்படுமாம். இந்த எண்ணிக்கை இப்போது மிகவும் அதிகம். இந்த வருடத்திற்கான மெடியார் ஷவர் டிசம்பர் 13 மற்றும் 14 -ம் தேதி இரவு தென்பட்டது. டிசம்பர் 17 -ம் தேதி வரை இது தென்படும் என்கின்றனர். இந்த மெடியார் ஷவர் இந்தியாவிலும் தென்படும். ஆனால் வெளிச்சம் குறைவான பகுதியில் இது தெளிவாகப் புலப்படும் என்கின்றனர் அறிவியலாளர்கள். நம் நகரத்தின் விளக்கு வெளிச்சத்தில் இதைத் தெளிவாக பார்க்க முடியாது என்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz