Published:Updated:

`விண்ணுக்குச் செல்லத் தயார்!' ரஷ்யா உதவியுடன் பயிற்சி பெறும் இந்திய விண்வெளி வீரர்கள்

இப்போது இருக்கும் 10 பேரிலிருந்து 3 பேர் தேர்வுசெய்யப்படுவார்கள்!

விண்வெளி
விண்வெளி

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அடுத்த பெரிய விண்வெளித்திட்டமான ககன்யான் செயல்படுத்தப்பட இன்னும் சில காலமே உள்ள நிலையில், மூன்று விண்வெளி வீரர்களை பூமியின் சுற்று வட்டப்பாதையில் ஏழு நாள்கள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு திரும்புவதற்காகத் தயார் படுத்திக்கொண்டிருக்கிறது இஸ்ரோ. இதற்காக இந்திய விமானப்படை விமானிகள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு Glavkosmos என்ற ரஷ்ய விண்வெளி மையத்தின் கிளை ஒன்றில் பயிற்சி பெறுவதற்கு அனுப்பப்பட உள்ளனர். இதில் 3 பேர் இறுதியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

Glavkosmos
Glavkosmos

ரஷ்யா விண்வெளித்துறையில் 1960-லிருந்து தீவிரமாக இயங்கி வருகிறது. இதில் 3 பேர் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சி ரஷ்யா உடையது என்றாலும், இவர்கள் விண்ணில் அணியப்போகும் உடை பெங்களூரில் இருக்கும் DRDO ஆய்வகத்தில்தான் தயாராகி வருகிறது.

`ககன்யான் திட்டத்தில் முழுக்கவனம் செலுத்திவருகிறோம்!' - `இஸ்ரோ' தலைவர் சிவன்
GSLV Mk III ராக்கெட்
GSLV Mk III ராக்கெட்

ஏழு நாள்களில் உடலில் எலும்பு வலுவிழப்பது, தசை இழப்பு போன்ற எந்த பெரிய பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருக்காது என்றாலும் விண்வெளியில் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்குச் செயற்கையாக Zero Gravity உருவாக்கப்பட்டு அதில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயணத்தின்போது ஏற்படும் ஈர்ப்பு விசையின் மாற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கு இந்தப் பயிற்சி உதவும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. GSLV Mk-III ராக்கெட், 7,800 கிலோ எடை கொண்ட ககன்யானை விண்ணில் டிசம்பர், 2021-ல் கொண்டு செல்ல உள்ளது.