Published:Updated:

"வருங்கால விண்வெளி ஆய்வில் தனியார் பங்களிப்பு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்!"- ராகேஷ் ஷர்மா

ராகேஷ் ஷர்மா

"மேற்கத்திய நாடுகளிலிருந்து எதிர்பார்த்த தொழில்நுட்பம் நமக்குக் கிடைக்காமல் இருந்தது. தற்போது நவீனத் தொழில்நுட்ப விரிவாக்கத்தில் இந்தியா இருக்கிறது." - ராகேஷ் ஷர்மா

"வருங்கால விண்வெளி ஆய்வில் தனியார் பங்களிப்பு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்!"- ராகேஷ் ஷர்மா

"மேற்கத்திய நாடுகளிலிருந்து எதிர்பார்த்த தொழில்நுட்பம் நமக்குக் கிடைக்காமல் இருந்தது. தற்போது நவீனத் தொழில்நுட்ப விரிவாக்கத்தில் இந்தியா இருக்கிறது." - ராகேஷ் ஷர்மா

Published:Updated:
ராகேஷ் ஷர்மா

தேசிய மாணவர் படையின் இந்திய அளவிலான மாணவிகளின் மலையேற்றப் பயிற்சி நீலகிரியில் நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மலையேற்றப் பயிற்சி நடத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வெலிங்டன் ஹவாய் ஹில் பகுதியில் தற்போது மலையேற்றப் பயிற்சி முகாம் நடைபெற்றுவருகிறது. இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் ஷர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ராகேஷ் ஷர்மா
ராகேஷ் ஷர்மா

மாணவிகள் மத்தியில் உரை நிகழ்த்திய ராகேஷ் ஷர்மா, "நமது ராணுவம் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாகவும் பொறுப்புடனும் செயல்பட்டுவருகிறது. ராணுவப் பணியில் இருந்தாலும், பணி முடித்து வெளியே வந்தாலும் அதற்கென்று தனி மரியாதை என்றும் இருக்கிறது. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களையே சாதித்தவர்களாக மீடியாக்கள் காண்பிக்கின்றன. அதைப் பார்க்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சாதிக்க முடியாது என நினைக்க வேண்டாம். தங்களாலும் சாதிக்க முடியும் என்ற முயற்சி மிக அவசியம். மதிப்பெண்கள் மட்டுமே ஒருவரது வாழ்வைத் தீர்மானிக்காது. கனவுகளும் திறமைகளுமே தீர்மானிக்கும்" என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகேஷ் ஷர்மா, ”மேற்கத்திய நாடுகளிலிருந்து எதிர்பார்த்த தொழில்நுட்பம் நமக்குக் கிடைக்காமல் இருந்தது. தற்போது நவீனத் தொழில்நுட்ப விரிவாக்கத்தில் இந்தியா இருக்கிறது.

ராகேஷ் ஷர்மா
ராகேஷ் ஷர்மா

உலகமே வியந்து பார்க்கும் வகையில் மிகப்பெரிய சாதனையை நம் தேசம் நிகழ்த்திவருகிறது. வருங்காலத்தில் தனியார் பங்களிப்பு இருக்கும் பட்சத்தில் விண்வெளி சாதனைக்கு மேலும் உதவிகரமாக இருக்கும்" எனப் பேட்டி அளித்தார்.