Published:Updated:

`பெட்டல்ஜியூஸ் நட்சத்திரம் வெடிக்கும் நிலையில் இருக்கிறதா?' -வானியலாளர்கள் சொல்வதென்ன?

Betelgeuse
Betelgeuse ( Space.com )

சமீபத்திய ஆய்வின்படி பெட்டல்ஜியூஸ் தற்போது 25 ஆண்டுக்கால ஒளியியல் அளவிலிருந்து அளவிடப்பட்ட மிகக் குறைந்த ஒளிரும் மற்றும் குளிரானதாக இருக்கும் என்று வானியலாளர்கள் கூறுகிறார்கள்.

விண்வெளி கணக்கற்ற வியப்புகள் நிறைந்தது. பல்வேறு நட்சத்திரங்கள், எரிகற்கள், வால் நட்சத்திரம் எனப் பட்டியல் நீளும். சூரிய நட்சத்திரத்தால் பூமியில் நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுபோல வான்வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இதில் நட்சத்திரங்கள் அதிக ஒளியுடன் உமிழக்கூடிய நட்சத்திரங்கள், மிகப் பெரிய நட்சத்திரங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வகைப்படுத்தப்பட்டவற்றில் அதிக ஒளி உமிழும் நட்சத்திரத்தில் பத்தாவது இடம் பெற்ற நட்சத்திரம், பெட்டல்ஜியூஸ் (Betelgeuse). பிரமாண்டமான சிவப்பு சூப்பர் ஜெயன்ட் நட்சத்திரம் இது.

space
space
atlantic

சமீபத்தில் 2019-ம் ஆண்டில் வானத்தில் 10-வது பிரகாசமான நட்சத்திரமாக இருந்த இந்த நட்சத்திரம் கடந்த சில மாதங்களாக மிகவும் மங்கலாகிவிட்டது. ஒளி உமிழ்வது குறைந்து இப்போது 24 வது இடத்தில் உள்ளது இந்த நட்சத்திரம். மேலும், இது வெடிக்கத் தயாராகிறதா என்று வானியலாளர்கள் ஆராய்கிறார்கள். இது வெடித்துச் சிதறினால் கண்கவரும் வெடிப்பாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

Vikatan

எட்வர்ட் கினன் மற்றும் வில்லனோவா பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் பெட்டல்ஜியூஸ் பற்றிய ஒரு சுருக்கமான கணிப்பைப் பகிர்ந்துகொண்டனர். 'இது செப்டம்பர் மாதத்தில் இருந்ததைவிட இப்போது மங்கலாக உள்ளது. அதிகளவு ஒளியை உமிழ்வதில்லை. இந்த அளவிலான மாற்றம் வியப்படையச் செய்கிறது. செப்டம்பர் மாதத்தில் பெட்டல்ஜியூஸ் இப்போது இருந்ததைவிட 2.5 மடங்கு பிரகாசமாக இருந்தது. ஆனால், தற்போது மங்கலாக உள்ளது' என்றனர்.

betelgeuse
betelgeuse

சமீபத்திய ஆய்வின்படி பெட்டல்ஜியூஸ் தற்போது 25 ஆண்டுக்கால ஒளியியல் அளவிலிருந்து அளவிடப்பட்ட மிகக் குறைந்த ஒளிரும் மற்றும் குளிரானதாக இருக்கும் என்று வானியலாளர்கள் கூறுகிறார்கள்.

பெட்டல்ஜியூஸ் அதன் வாழ்க்கையின் முடிவை நெருங்குகிறது. இது வெடித்தால் சந்திரனைவிடப் பிரகாசமாகவும் பகல் நேரத்தில்கூட புலப்படக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க அளவில் தெரியும். இது தன்னைத்தானே சுருக்கிக்கொள்வதன் மூலம் இது சூப்பர் நோவாவாக மாறக்கூடும். இது, சூப்பர் நோவாவாக மாற இன்னும்1,00,000 ஆண்டுகள் தேவைப்படும். அதற்கான தொடக்கத்தைத்தான் இப்போது நாம் காண்கிறோம்" என்று கணித்துக் கூறுகிறார்கள் வானியலாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு