Published:Updated:

ராணுவப் பாதுகாப்பு; பேரிடர் முன்னெச்சரிக்கை! - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி 47

கார்டோசாட் - 3 செயற்கைக்கோளைத் தாங்கியபடி இன்று காலை விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி 47 ராக்கெட்.

பி.எஸ்.எல்.வி சி 47
பி.எஸ்.எல்.வி சி 47 ( ISRO )

எல்லை மற்றும் புவியைக் கண்காணிப்பதற்காக இந்தியாவின் கார்டோசாட் - 3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி 47 ராக்கெட் இன்று காலை 9:28 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பி.எஸ்.எல்.வி சி 47
பி.எஸ்.எல்.வி சி 47

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் ஏவுகணை மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. நேற்று காலை 7:28 மணிக்கு இந்த ராக்கெட்டின் கவுண்டன் தொடங்கியது. முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கார்டோசாட் -3 செயற்கைக்கோளில் பொருத்தப்பட்ட அதிநவீன கேமராக்கள் நாட்டின் எல்லைப் பகுதியை மிகவும் துல்லியமாகப் படம் எடுக்கும் திறன் கொண்டவை.

`நிலவில் ஆர்கான் 40 வாயு' - சந்திரயான்-2 புதிய கண்டுபிடிப்பு!

மேலும், இரவில் மிக தெளிவாகமும், மேகக் கூட்டங்கள் அதிகம் இருந்தாலும் அதனுள் ஊடுருவி துல்லியமாகப் புகைப்படம் எடுக்கும் என்பதுதான் இதன் முக்கிய சிறப்பம்சம். 1,625 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் 509 கி.மீ தொலைவில் புவி சுற்றுவட்ட பாதையில் 97.5 டிகிரி கோணத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

பி.எஸ்.எல்.வி சி 47
பி.எஸ்.எல்.வி சி 47

பேரிடர் பாதிப்பு முன்னெச்சரிக்கைகள், ராணுவ எல்லை பாதுகாப்பு, கிராமங்களின் வளர்ச்சி போன்றவற்றிற்கு இந்த செயற்கைக்கோள் உதவ உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இது செயல்பாட்டில் இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது ஏவியுள்ள பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் இஸ்ரோவின் 49-வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.