Published:Updated:

இஸ்ரோ: `எரிபொருள் மிச்சம்!’- குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்

`இத்தளம் ஶ்ரீஹரிகோட்டாவிலுள்ள நிலையத்தைவிட பல்வேறு மேம்பட்ட வசிகளைக்கொண்டது. எஸ்.எஸ்.எல்.வி வாகனங்கள் இந்தப் புதிய விண்வெளித் தளத்திலிருந்து நேரடியாக தென்துருவத்திற்குச் செல்ல முடியும்’.

இஸ்ரோ தமிழ்நாட்டில் விண்வெளித்தளம் அமைப்பதற்கான வேலையை நெருங்கிவிட்டது. இஸ்ரோ அதிகாரிகள் ஒதுக்கப்பட்ட நிலத்தில் வேலையைத் தொடங்க தமிழக அரசின் ஆணைக்காகக் காத்திருக்கிறார்கள். 2019 டிசம்பரிலிருந்தே விண்வெளிதளம் அமைக்க நிலங்களைக் கையகப்படுத்த ஆரம்பித்துவிட்டது தமிழக அரசு.

மதவன்குறிச்சி, படுக்கப்பத்து, பள்ளவங்குறிச்சி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 2,300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் இரண்டாவது விண்வெளி தளத்தை தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கவுள்ளது இஸ்ரோ. இத்தளம் ஶ்ரீஹரிகோட்டாவிலுள்ள நிலையத்தைவிட பல்வேறு மேம்பட்ட வசிகளைக் கொண்டது. எஸ்.எஸ்.எல்.வி வாகனங்கள் இந்தப் புதிய விண்வெளித் தளத்திலிருந்து நேரடியாக தென்துருவத்திற்குச் செல்ல முடியும். வழி தவறி இலங்கையைச் சுற்றத் தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

சிவன் - இஸ்ரோ மைய தலைவர்
சிவன் - இஸ்ரோ மைய தலைவர்

எனவே, எரிபொருளைச் சேமிக்க உதவுகிறது. இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் தற்போது குலசேகரபட்டினத்தில் மாநில அரசு தேவைக்குரிய நிலங்களைக் கையகப்படுத்திக்கொண்டிருப்பதாகவும் அதற்கு பின் மற்ற வேலைகள் தொடங்கும் என்றும் சமீபத்தில் கூறினார். மத்திய அரசு விண்வெளித்துறையில், இனி தனியார் பங்களிப்புக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவித்தபிறகு, அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆர்வத்துடன் முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரோ மையப் பொறியாளருக்குக் கொரோனா! -காரணம் தெரியாமல் கலங்கும் அதிகாரிகள்

ஏவுகணை வழித்தவறாமல் நேர்வழியில் செல்ல உதவும் கருவி அதிகமாக எரிபொருளைப் பயன்படுத்தும். இனி குலசேகரபட்டினத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏவுகணையைச் செலுத்தும்போது அந்தக் கருவி தேவையில்லை. எனவே, இது எரிபொருளைச் சேமிப்பதுடன் ஏவுகணையின் தாங்கும் சுமை திறனையும் இது அதிகரிக்கிறது.

இஸ்ரோ
இஸ்ரோ

இந்தியாவில் தற்போதைய ஒரே ஏவுகணை தளமான ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இரண்டு ராக்கெட் செலுத்தும் இடம் உள்ளது.

உலகின் விண்வெளிச் சந்தையின் மதிப்பு 350 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணக்கிடப்படுகிறது. அதில் இந்தியாவின் பங்கு 3 சதவிகிதம்தான். எனவேதான் இதைத் தனியார் துறைகளும் ஈடுபடும் வகையில் அரசு முடிவெடுத்துள்ளது என்றார் இஸ்ரோ தலைவர் சிவன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு