Published:Updated:

`இதுதான் உண்மையில் சந்திரயான்-2 எடுத்த புகைப்படங்கள்!'- வைரல் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ

பிரபாகரன் செ

சந்திரயான்-2 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ!

சந்திரயான்-2 எடுத்த புகைப்படம்
சந்திரயான்-2 எடுத்த புகைப்படம்

இஸ்ரோவின் விஞ்ஞானிகளின் கடும் உழைப்புக்குப் பிறகு ஜூலை 15-ம் தேதி ராக்கெட் GSLV MK III மூலம் விண்ணில் ஏவத் தயார் நிலையிலிருந்தது சந்திரயான்-2. இறுதிக் கட்டத்தில் ராக்கெட் GSLV MK III-ல் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட சந்திரயான்-2 விண்ணில் ஏவும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. பின்பு இந்தச் சிறிய தடைகளைத் தகர்த்து ஜூலை 22-ம் தேதி விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2.

`இதுதான் உண்மையில் சந்திரயான்-2 எடுத்த புகைப்படங்கள்!'- வைரல் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ
ISRO

சில நாள்களுக்கு முன்பு சந்திரயான்-2 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்கள் என நெட்டிசன்கள் போலியான படங்களை வைரலாக்கினர். இது குறித்து இஸ்ரோவும் எந்த ஓர் அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், உண்மையில் சந்திரயான்-2 விண்கலம் எடுத்த படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. வியக்கவைக்கும் அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சந்திரயான்-2 எடுத்த புகைப்படங்கள்
சந்திரயான்-2 எடுத்த புகைப்படங்கள்
ISRO
சந்திரயான்-2 எடுத்த புகைப்படங்கள்
சந்திரயான்-2 எடுத்த புகைப்படங்கள்
ISRO
சந்திரயான்-2 எடுத்த புகைப்படங்கள்
சந்திரயான்-2 எடுத்த புகைப்படங்கள்
ISRO
சந்திரயான்-2 எடுத்த புகைப்படங்கள்
சந்திரயான்-2 எடுத்த புகைப்படங்கள்
ISRO

இது குறித்து இஸ்ரோ தெரிவித்திருப்பதாவது, ``இந்த படங்களானது சந்திரயான்-2 விண்கலத்திலுள்ள L14 கேமரா மூலம் ஆகஸ்ட் 3-ம் தேதி படம்பிடிக்கப்பட்டது. ரூ.978 கோடி செலவிலான இத்திட்டமானது (சந்திரயான்-2) சந்திரனின் தென் துருவத்தில் மென்மையான தரையிறக்கத்தை (Soft Landing) இலக்காகக் கொண்டது. நிலவின் சுற்றுவட்டப் பாதையை நோக்கிப் பயணிக்கும் விண்கலம் ஆகஸ்ட் 6-ல் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குச் செல்லும். பின்னர் செப்டம்பர் 7-ம் தேதியன்றே நிலவின் பரப்பை அடையும்" என்பதாகும்.

நிலவில் யாருமே செல்லாத இடத்துக்குச் செல்லும் சந்திரயான் 2... சாதிக்க இருப்பது என்ன?
4-வது பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான் II
4-வது பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான் II

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட 5 சுற்றுப்பாதைகளில் தற்போது 4-வது பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.