Published:Updated:

JWST: நாசாவின் 20 ஆண்டு முயற்சி - விண்ணில் ஏவப்பட்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் எப்படிச் செயல்படும்?

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்
News
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்

இனி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் பிரபஞ்சத்தைப் பற்றிய அவதானிப்புகள் நமக்குப் பல ஆச்சரியங்களைத் தரவிருப்பதோடு நம்மிடம் இருக்கும் பல கேள்விகளுக்கும் விடையளிக்க உள்ளன.

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (JWST) பிரெஞ்சு கயானாவின் கௌரோவில் உள்ள கயானா விண்வெளி மையத்திலிருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ‘ஏரியன் 5’ ராக்கெட்டின் மூலம் இது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

நாசா விஞ்ஞானிகளின் 20 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு இன்று உச்சம் தொட்டது. இனி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் பிரபஞ்சத்தைப் பற்றிய அவதானிப்புகள் நமக்குப் பல ஆச்சரியங்களைத் தரவிருப்பதோடு நம்மிடம் இருக்கும் பல கேள்விகளுக்கும் விடையளிக்க உள்ளன.

அமெரிக்காவின் ‘தி பிளானட்டரி சொசைட்டி’ ஏற்கெனவே ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் பணி மற்றும் அதன் மூலம் எதிர்பார்க்கப்படும் அறிவியல் வருவாயை விவரிக்கும் ஆதாரப் பக்கத்தை உருவாக்கியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்-ன் முக்கிய அம்சங்கள்:

நாசாவின் படைப்பான இந்த JWST-தான் உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப். இந்த டெலஸ்கோப்பில் தங்கக் கண்ணாடி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதன் அகலம் சுமார் 21.32 அடி ஆகும். பெரிலியத்தால் செய்யப்பட்ட 18 அறுகோண துண்டுகளை இணைத்து இந்தக் கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துண்டிலும் 48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு, அது பிரதிபலிப்பானாகச் செயல்படுகிறது. இந்த டெலஸ்கோப் சுமார் 1.5 மில்லியன் கி.மீ உயரத்தில் விண்வெளியில் நிறுவப்படும்.

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்

சூரியன், பூமி மற்றும் சந்திரனின் வெப்பத்திலிருந்து JWSTயின் கண்ணாடியைப் பாதுகாக்கும் சூரியக் கவசமானது ஒரு டென்னிஸ் மைதானம் அளவிற்கு பெரியதாம். மிக முக்கியமாக, JWST முழுமையாகச் செயல்பட ஏவப்பட்ட பிறகு கண்ணாடி மற்றும் சன்ஷீல்ட் இரண்டும் வெற்றிகரமாக வெளிப்பட வேண்டும். இந்த JWST இன் இலக்கு 'பூமி-சூரியன் லாக்ரேஞ்ச் 2 புள்ளி' ஆகும். விண்ணில் ஏவப்பட்ட பிறகு இந்த டெலஸ்கோப் L2-ஐ அடைய 29 நாள்கள் ஆகும். இந்தக் காலகட்டத்தை NASA “29 Days on the Edge” என வகைப்படுத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேரிலாந்தில் அமைந்துள்ள 'Space Telescope Science Institute (STScI)' மிஷன் ஆபரேஷன்ஸ் சென்டரை அடிப்படையாகக் கொண்ட பொறியாளர்களின் குழு இந்த JWST ஐக் கட்டுப்படுத்திக் கண்காணிக்கும். மேலும் இது AURA-வால் நிர்வகிக்கப்படுகிறது.
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் | James Webb Space Telescope
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் | James Webb Space Telescope

பின்பு 300க்கும் அதிகமான தனித்துவமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவை 50 முக்கிய வகைகளாக வரிசைப்படுத்தி, 178 வழிமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதில் ஒன்று தோல்வியடைந்தாலும் இந்த டெலஸ்கோப் ஒரு செயலிழந்த கருவியாக மாறிவிடும். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த வழிமுறைகள், செயல்பாடுகள் மற்றும் வரிசைப்படுத்தல்கள் அனைத்தும் முன்பே பூமியில் கடுமையாகச் சோதிக்கப்பட்டன, மேலும் JWST இன்ஜினியரிங் குழு இதற்கான பேக்-அப் திட்டங்களையும் கொண்டுள்ளது.

JWST ன் முதல் படத்தைக் காண நாம் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டுமா?!

முதலில் இந்த டெலஸ்கோப்பில் பொருத்தப்பட்டுள்ள 18 கண்ணாடிப் பகுதிகளை மிக மெதுவாகவும், கவனமாகவும் சீரமைக்க JWST குழுவிற்கு மூன்று மாதங்கள் ஆகும். அதற்குக் காரணம், அந்த கண்ணாடி, 18 பிக்செல்களை ஒன்றிணைத்து ஒரு தெளிவான படத்தை உருவாக்கும்.

JWST ஏவப்பட்டு நான்கு மாதங்கள் ஆகும் போது அந்த டெலஸ்கோப் சீரமைக்கப்பட வேண்டும். அனைத்து கருவிகளும் விஞ்ஞானிகளால் சரிபார்க்கப்படும். அதன் பிறகு JWST குழு தனது கவனத்தை அறிவியல் கருவிகளின் பக்கம் திருப்புகிறது.

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்

இந்த JWST இன் செயல்பாட்டிற்கான இறுதிக் கட்டம், அதன் நான்கு அறிவியல் கருவிகளின் அனைத்து செயல்பாட்டு முறைகளையும் அளவீடு செய்து சோதனை செய்வதை உள்ளடக்கியது. அவை, The Mid-Infrared Instrument (MIRI), Near-Infrared Camera (NIRCam), Near-Infrared Imager and Slitless Spectrograph/Fine Guidance Sensor (NIRISS/FGS), and Near-Infrared Spectrograph (NIRSpec). ஒவ்வொரு கருவியிலும் பல செயல்பாட்டு முறைகள் உள்ளன. JWST அறிவியல் செயல்பாடுகளுக்குத் தயாராகும் முன் இவை அனைத்தையும் சரிபார்க்க வேண்டும்.

இந்தச் சோதனைகள் அனைத்தும் முடிந்தபின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (JWST) தனது முதல் அறிவியல் திட்டத்திற்கு விண்ணில் தயாராகிவிடும். ஆனால் அனைத்து சோதனைகளையும் முடித்து முதல் திட்டத்தைத் தொடங்க 6 மாதங்கள் ஆகலாம். அதாவது, ஜூலை அல்லது ஆகஸ்ட் 2022 வரை நாம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்கிறார் AURA அறிவியல் துணைத் தலைவர் ஹெய்டி ஹம்மெல்.

அதுவரைக் காத்திருப்போம் இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (JWSP) இன் செயல்திறனைக் காண!