நாசா(NASA), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் (CSA) இணைந்து விண்ணில் செலுத்திய ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டரைக் கடந்து தன் இறுதி இலக்கை எட்டியுள்ளது.

இந்தத் தொலைநோக்கி பற்றிய விரிவான கட்டுரையை கீழுள்ள லிங்கில் படிக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பிரபஞ்சம் உருவானது எப்படி என்ற தேடலில் டிசம்பர் 25-ல் விண்ணில் ஏவப்பட்டது இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி. கிட்டத்தட்ட ஒரு மாத கால பயணத்திற்குப் பிறகு அதன் இலக்கான Lagrange Point 2-வை சென்றடைந்திருக்கிறது. சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட, 6 ஆயிரம் கிலோ எடையுள்ள இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி (JWST) சுற்றுவட்டப்பாதையில் பூமியை போன்றே சூரியனை சுற்றிவரும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅடுத்த கட்டமாக இந்தத் தொலைநோக்கியின் அறிவியல் கருவிகள் ஒவ்வொன்றாகக் கவனமாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். நாசா விஞ்ஞானிகள் கணக்குப்படி, இந்தக் கருவிகள் மொத்தமாக செயல்படுத்தப்பட தோராயமாக இரண்டு முதல் மூன்று மாதங்களாகும். இந்தத் தொலைநோக்கியானது நான்கு முக்கிய கருவிகளைக் கொண்டுள்ளது. அவை Near Infrared Camera, Mid Infrared Instrument, Fine Guidance Sensor) மற்றும் இரண்டு Near InfraRed Spectrograph. இந்த இடைப்பட்ட மாதங்களில், தொலைநோக்கியின் ஒளியியல் கருவிகள் அனைத்தும் துல்லியமாக செயல்படும் வண்ணம் சீரமைக்கப்படும்.
இந்தக் கருவிகள் செயல்படுத்தப்பட்டதும், செயல்பாடுகள் தொடங்கும் முன் பொறியாளர்கள் அதன் திறன்களை முதலில் சோதிப்பார்கள். இந்தச் செயல்முறை தொடங்கப்பட்ட நான்கு முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு அறிவியல் ஆராய்ச்சிகள் முழுவீச்சில் தொடங்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி தன் இறுதி இலக்கை எட்டியுள்ள நிலையில் நாசா நிர்வாகத் தலைவர் பில் நெல்சன் (Bill Nelson) ட்விட்டரில் "Webb, welcome home!" என்று பதிவிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
"பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிக்கொண்டிருக்கும் இந்த அபார பயணத்தில் இன்னும் ஒரு முக்கிய படியை கடந்துள்ளோம். இந்தத் தொலைநோக்கிமூலம் கிடைக்கப் போகும் பிரபஞ்சத்தின் புதிய காட்சிகளைப் பார்க்க காத்திருக்க முடியவில்லை. மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்!" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொலைநோக்கி மூலம் விரைவில் கருந்துளை (Black Hole) போன்ற பல அறியப்படாத ஆச்சர்யங்களை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி பிரபஞ்சத்தை ஆராய்ந்து தனது முதல் விண்வெளி புகைப்படத்தை வரும் ஜூன் மாதத்தில் அனுப்பும் என்று விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்படுகிறது.