Published:Updated:

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் புகைப்படம்: இது ஃபர்ஸ்ட் லுக்தான், அடுத்து என்ன எதிர்பார்க்கலாம்?

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் புகைப்படம்

பல கேலக்ஸிகள் இருக்கும் இதே பகுதியை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிக்கு முன் உலகின் அதிநவீன தொலைநோக்கியாக இருந்த ஹப்பிள் தொலைநோக்கியும் ஏற்கெனவே புகைப்படம் எடுத்திருந்தது. இரண்டுக்குமான வித்தியாசத்தை நீங்களே கட்டுரையில் பாருங்கள்!

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் புகைப்படம்: இது ஃபர்ஸ்ட் லுக்தான், அடுத்து என்ன எதிர்பார்க்கலாம்?

பல கேலக்ஸிகள் இருக்கும் இதே பகுதியை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிக்கு முன் உலகின் அதிநவீன தொலைநோக்கியாக இருந்த ஹப்பிள் தொலைநோக்கியும் ஏற்கெனவே புகைப்படம் எடுத்திருந்தது. இரண்டுக்குமான வித்தியாசத்தை நீங்களே கட்டுரையில் பாருங்கள்!

Published:Updated:
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் புகைப்படம்
இரவு வானில் வீண்மின்கள் எண்ணுவதே பேரானந்தம். இனி நாம் கேலக்ஸிகளை எண்ணப்போகிறோம். நாம் என்றால் நாம் இல்லை. மனிதன் உருவாக்கிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதைச் செய்யப்போகிறது. ஆம், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் விண்வெளி புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது நாசா. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம், கனடிய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய இந்தத் தொலைநோக்கி டிசம்பர் முடிவில் விண்ணில் ஏவப்பட்டது. அனைத்து விஷயங்களும் திட்டமிட்டபடி நடந்து இப்போது முதல் படத்தையும் நமக்கு அனுப்பியிருக்கிறது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. பல கேலக்ஸிகள் மின்னும் இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல்.
James Webb Space Telescope | JWST
James Webb Space Telescope | JWST

வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இந்தப் புகைப்படத்தை நேற்று போட்டுக்காட்டியது நாசா. நம் பேரண்டத்தின் மிகத்துல்லியமான படம் இதுதான் என மெய்சிலிர்க்கிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இன்று மேலும் பல புகைப்படங்கள் வெளியிடப்படுமாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
"வெளியாகப்போகும் புகைப்படங்கள், மிகப்பெரிய விஷயங்களை சாதிக்கவல்லர்கள் அமெரிக்கர்கள் என மீண்டும் ஒருமுறை உலகத்துக்கு உரக்கச்சொல்லப்போகிறது. அமெரிக்க மக்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு 'நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை' என்பதை இது உணர்த்தும். இதுவரை யாரும் பார்க்காததைப் பார்க்கப்போகிறோம். இதுவரை போகமுடியாத இடங்களுக்குப் போகப்போகிறோம்" என இது குறித்து பெருமிதம் அடைந்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

இந்தத் தொலைநோக்கியின் சிறப்புகளைப் பற்றி விரிவாக கீழ்வரும் கட்டுரையில் படிக்கலாம்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முக்கிய இலக்குகள் இரண்டு. ஒன்று, இந்தப் பேரண்டத்தின் முதல் நட்சத்திரங்களை, அதாவது 13.5 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களைப் புகைப்படம் எடுப்பது. இன்னொன்று, வாழத்தகுதியான வேற்றுக்கிரகங்களைக் கண்டுபிடிப்பது. இந்தப் புகைப்படங்கள் மூலம் அதில் முதல் படியை எடுத்துவைத்திருக்கிறது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் படமானது SMACS 0723 என்ற நட்சத்திரக் கொத்தின் (Cluster) படம். பல கேலக்ஸிகள் அடங்கிய இந்த கிளஸ்ட்டர் பகுதியை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிக்கு முன் உலகின் அதிநவீன தொலைநோக்கியாக இருந்த ஹப்பிள் தொலைநோக்கியும் ஏற்கெனவே புகைப்படம் எடுத்திருந்தது. இரண்டுக்குமான வித்தியாசத்தை நீங்களே பாருங்கள்!

James Webb | Hubble
James Webb | Hubble

இந்த SMACS 0723, பூமியிலிருந்து 4.8 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இது வெறும் ஆரம்பம்தான். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, 13 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கேலக்ஸிகளைப் படமெடுத்து நமக்குக் காட்டப்போகிறது. சூரியனிலிருந்து பூமிக்கு ஒளி வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் ஆகும். அதாவது 8 நிமிடங்களுக்கு முந்தைய சூரியனைத்தான் அந்தச் சமயத்தில் பார்த்துக்கொண்டிருப்போம். அதே போலத்தான் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பிரபஞ்சத்தை இந்தத் தொலைநோக்கியின் மூலம் பார்க்கப்போகிறோம். Big Bang-க்கு அடுத்து உருவான முதல் நட்சத்திரங்களை நாம் பார்க்கப்போகிறோம்.

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் | James Webb Space Telescope
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் | James Webb Space Telescope
இது இல்லாமல் பூமியிலிருந்து 1000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் WASP-96 b என்ற பிரமாண்ட கிரகத்தின் வளிமண்டலம் எப்படி இருக்கப்போகிறது என்பதையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. இது மட்டுமல்லாமல் பல கிரகங்களையும் ஆராயப்போகிறது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. அதனால், இந்தப் புகைப்படங்களைத் திரைப்படங்களுக்கு விடும் ஃபர்ஸ்ட்லுக்காகவே நாம் கருதவேண்டும்.