Published:Updated:

`மற்ற மாவட்டங்களைவிட கரூரில் தெளிவாகத் தெரியும்!’-நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை எப்போது பார்க்கலாம்?

மற்ற மாவட்டங்களைவிட, கரூர் மாவட்டத்தில் மிகத் தெளிவான வகையில், வானத்தில் நெருப்பு சூரிய வளையம் நன்றாகத் தெரியும்.

ஜெயமுருகன் பேட்டி
ஜெயமுருகன் பேட்டி

``நாளை (26-ம் தேதி) தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களின் வழியாக மிக அரிதான சூரிய கிரகணம் என்ற நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிய உள்ளது. மற்ற மாவட்டங்களைவிட, அந்த சூரிய கிரகணம் கரூரில் நன்றாகவும், மிகத்தெளிவாகவும் தெரியும்" என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயமுருகன் தெரிவித்தார்.

ஜெயமுருகன் பேட்டி
ஜெயமுருகன் பேட்டி
Vikatan

நாளை தமிழகத்தில் மிகவும் அரிதான சூரிய கிரகணம் தெரிய உள்ளது. இதுசம்பந்தமாக, கரூர் மாவட்டத்தில் அந்த சூரிய கிரகணத்தை, ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்போடு பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக, கரூருக்கு வருகை தந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ஜெயமுருகன் பேட்டி
ஜெயமுருகன் பேட்டி

அப்போது அவர் கூறுகையில், ``26-ம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள 10 மாவட்டங்கள் வழியாக, மிக அரிதான சூரிய கிரகணம் என்ற நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிய உள்ளது. இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க, தமிழகம் முழுவதும் அறிவியல் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, தகுந்த பாதுகாப்போடு தமிழகம் முழுக்க ஒரு கோடி மக்கள் பார்க்கும் வகையில் பாதுகாப்புக் கருவி (லென்ஸ் ) வழங்கப்பட்டுள்ளது. கரூரில் மட்டும் ஒரு லட்சம் மக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூர் காந்திகிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் பொதுமக்கள் பார்வையிடும் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களைவிட, கரூர் மாவட்டத்தில் மிகத் தெளிவான வகையில், வானத்தில் நெருப்பு சூரிய வளையம் நன்றாகத் தெரியும்.

அதனால், கரூர் மக்கள் அதை நன்றாகப் பார்த்து, ரசிக்க முடியும். சூரியன், நிலா, பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் அமைவதே இந்த சூரிய கிரகணம். 26-ம் தேதி காலை 8.05 மணி முதல் 11. 16 மணிவரை, சுமார் 3.30 மணி நேரம் வரைக்கும் இந்த கிரகணம் நடைபெறுகிறது. இந்த அரிய வகையை சூரிய கிரகண நிகழ்வை காண ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வானவியலாளர்கள் தமிழ்நாட்டில் குவிந்துள்ளனர்.

ஜெயமுருகன் பேட்டி
ஜெயமுருகன் பேட்டி

இப்போதுவிட்டால், இனி வரும் 2031-ம் ஆண்டு, மே மாதம்தான் இதுபோன்ற ஒரு சூரிய கிரகணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு லென்ஸ் கருவி மூலம் இந்த சூரிய கிரகணத்தை 10 விநாடிகள் மட்டுமே தொடர்ந்து பார்க்க வேண்டும். அதன் பிறகு, கொஞ்சநேரம் இடைவெளி விட்டு, மறுபடியும் பார்க்க வேண்டும்" என்றார்.