Published:Updated:

70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு அருகில் வரும் வால் நட்சத்திரம்!

லியோனார்டு வால் நட்சத்திரம்
News
லியோனார்டு வால் நட்சத்திரம்

டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை இந்த வால் நட்சத்திரம் வானில் தென்பட வாய்ப்பிருக்கிறது.

டிசம்பர் மாதம் பொதுவாகவே வானியல் நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் மாதமாகத் திகழ்கிறது. கடந்த டிசம்பர் 4-ம் தேதி கங்கண சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இப்படியான சூரிய கிரகணம் நடைபெறும் நேரத்தில் நிலவு அதனை மறைத்திருப்பதால் அது ஒரு நெருப்பு வளையம் போலக் காட்சியளிக்குமாம். ஆனால், அன்டார்டிகாவில் இருந்திருந்தால் மட்டுமே இந்த சூரிய கிரகணத்தை முழுமையாகக் கண்டு களித்திருக்க முடியும். மற்ற இடங்களில் இருப்பவர்களுக்குப் பகுதியாக இந்த சூரிய கிரகணம் தெரிந்திருக்கும் எனத் தெரிவித்திருந்தது நாசா. அந்த வானியல் நிகழ்வைத் தொடர்ந்து மற்றொரு வானியல் நிகழ்வும் இந்த மாதம் நிகழவிருக்கிறது. நம் பூமிக்கு மிக அருகில் ஒரு வெளிச்சமான விருந்தினர் ஒருவர் வரப்போகிறார்.

லியோனார்டு வால் நட்சத்திரம்
லியோனார்டு வால் நட்சத்திரம்

அவர் வேறு யாரும் இல்லை C/2021 A1 என அழைக்கப்படும் 'லியனார்டு' (Leonard) வால் நட்சத்திரம் (Comet) தான். இந்த ஆண்டின் மிகவும் வெளிச்சமான வால் நட்சத்திரம் என்று அழைக்கப்படும் இந்த லியோனார்டு எனும் வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரப்போகிறது. இந்த வால் நட்சத்திரமானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 3-ம் தேதி அமெரிக்காவில் உள்ள மவுன்ட் லெம்மான் அப்சர்வேட்டரியில் கிரிகோரி ஜெ.லியோனார்டு (Gregory J.Leonard) என்பவரால் கண்டறியப்பட்டது. 70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு மிக அருகில் வரவிருக்கிறது இந்த வால் நட்சத்திரம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த வால் நட்சத்திரத்தின் பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கையும் திறந்திருக்கிறார்கள். அந்த வால் நட்சத்திரமானது எந்த இடத்தில் இருக்கிறது எப்போது நம் கண்களுக்குத் தெரிய வாய்ப்பிருக்கிறது என்பதனை அவ்வப்போது பதிவு செய்கிறார்கள். டிசம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை இந்த வால் நட்சத்திரம் வானில் தென்பட வாய்ப்புள்ளது. சூரியனை நோக்கிய தன்னுடைய பயணத்தில் லியோனார்ட் பூமியைக் கடக்க உள்ளது. டிசம்பர் 12-ம் தேதி வரை இந்த வால் நட்சத்திரம் அதிகாலையில் தெரிய வாய்ப்புள்ளது.

சூரியன் உதிப்பதற்கு 90 நிமிடங்கள் முன்பாக வானத்தின் கிழக்குப் பகுதியில் இந்த வால் நட்சத்திரம் தென்படும். டிசம்பர் 12 -ம் தேதிதான் இது பூமிக்கு மிக மிக அருகில் வரும் நாள். அன்றைக்கு நம் கண்களுக்கு தென்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். டிசம்பர் 14-ம் தேதிக்கு மேல் மாலையில் இந்த வால் நட்சத்திரம் வானில் தென்படலாம். இந்த வால் நட்சத்திரம் மிக வெளிச்சமானது என்பதால் உலகின் பல இடங்களில் இதை வெறும் கண்களாலே காணும் வாய்ப்புகள் கூட கிடைக்கலாம் என நாசா கூறியுள்ளது. ஜனவரி மாதத் தொடக்கத்தில் இந்த வால் நட்சத்திரம் சூரியனுக்கு மிக அருகில் சென்று விடுமாம்.

இப்போது கடந்து செல்லும் இந்த வால் நட்சத்திரத்தை இப்போது விட்டுவிட்டால் நம்மால் மறுபடி காணமுடியாது. ஏனெனில் அது திரும்பி வரப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகுமாம். எனவே மறக்காமல் லியோனார்ட்டை பார்த்து ஒரு ஹாய் சொல்லி விடுங்கள்.