Published:Updated:

`லண்டன் சக்கரத்தைவிட பெரியது; பூமியைக் கடக்கும் ராட்சத சிறுகோள்!’ - நாசா எச்சரிக்கை

ராட்சத கோள்
ராட்சத கோள் ( மாதிரி புகைப்படம் )

வரும் ஜுலை 24-ம் தேதி பெரும் அபாயகரமான ராட்சத சிறு கோள் ஒன்று பூமியைக் கடந்து செல்லவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

சிறுகோள்

விண்வெளியிலிருந்து வரும் சிறுகோள்கள் அவ்வப்போது பூமியைக் கடந்து செல்வது வழக்கம். இவ்வாறு கடந்து செல்லும் சிறுகோள்களைக் காண்பதற்கே விண்வெளி ஆர்வலர்கள் பலர் காத்துக்கொண்டிருப்பர். அந்த வகையில் வருகின்ற ஜூலை 24-ம் தேதி பெரிய சிறுகோள் ஒன்று பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது. இது அளவில் பெரியதாகவும், அபயாகரமானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

லண்டன் ராட்சத சக்கரம்
லண்டன் ராட்சத சக்கரம்

இந்தச் சிறுகோள் லண்டன் ராட்சத சக்கரத்தின் உயரமான 443 அடியைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் 2020 என்டி (2020ND) என்று பெயரிட்டுள்ளனர். மேலும், இது பூமிக்கு அருகில் 0.03 ஆஸ்ட்ரானாமிக்கல் யூனிட்டில் (AU) வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு AU என்பது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் (149598000 km) ஆகும். இந்த ராட்சத சிறுகோள் நொடிக்கு 13.5 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைக் கடக்க உள்ளது. இதோடு பூமியிலிருந்து 5,086,327 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். அதாவது, வானியல் முறையில் இது ஒரு மயிரிழை அளவே ஆகும்.

சூரிய குடும்ப உருவாக்கத்திலிருந்து சிதறிய துகள்கள்

இது பற்றி பிர்மிஹ்ங்காம் லைவ் விண்வெளி நிறுவனம் கூறுகையில், பூமியைக் கடக்கும் சிறுகோள்களை மிகவும் அபாயகரமான சிறுகோள் என சில அளவுகோல்களை வைத்தே சொல்கிறோம். குறிப்பாக, பூமியின் வட்டப்பாதையைச் சுற்றி வரும்போது அதன் தூரமானது 0.005 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் அவை அபாயகரமான சிறுகோள்களே ஆகும்.

மேலும், இது குறித்து நாசா தனது ஜேபிஎல் (Jet Propulsion Laboratory) இணையதளத்தில் கூறுகையில், ``பூமிக்கு அருகில் வரும் வால் நட்சத்திரம் மற்றும் சிறுகோள்கள், அருகில் இருக்கும் கோள்களின் ஈர்ப்பு விசையால்தான் பூமியின் சுற்று வட்டப்பாதையைக் கடந்து செல்கின்றன. இவ்வாறு வால் நட்சத்திரங்கள் மற்றும் சிறுகோள்கள் மீது மக்களுக்கு அதிக ஆர்வம் இருக்க ஒரே காரணம்தான் உள்ளது. அவை 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நடந்த சூரிய குடும்ப உருவாக்கத்திலிருந்து சிதறிய துகள்கள் என்பதே ஆகும்" என்றது.

ராட்சத கோள்
ராட்சத கோள்
மாதிரி புகைப்படம்

``இப்போது நாம் காணும் வால்நட்சத்திரங்கள் எல்லாம் முன்னர் பெரிய கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் நெப்டியூன் போன்றவற்றிலிருந்து சிதறிய துகள்களே ஆகும். அதே போல் நாம் தற்போது காணும் சிறுகோள்கள் எல்லாம் செவ்வாய், புதன், பூமி, வெள்ளி ஆகிய உள் கிரகங்களின் சேர்க்கையின்போது ஏற்பட்ட துகள்களே ஆகும்" என பிர்மிஹ்ங்காம் லைவ் விண்வெளி நிறுவனம் தெரிவித்தது.

அடுத்த கட்டுரைக்கு