Published:Updated:

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்குப் போக நம் மொபைலே போதும் தெரியுமா?

பூமியிலிருந்து நிலவிற்குத் தகவல்களை மிக அதிக வேகத்தில் அனுப்ப இயலும். தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் விண்கலத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களைப் பரிமாற இயலும். இதற்காக தொடர்பியல் துறை மற்றும் கேமரா துறையில் ஏற்பட்ட வளர்ச்சிக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

நிலா
நிலா
"மனிதன் எடுத்து வைக்கும் இந்த ஒரு அடி, மனிதக் குலத்திற்கே ஒரு மிகப்பெரிய ஏற்றம்!"
நீல் ஆம்ஸ்ட்ராங்

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் சென்று முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் கடந்து சென்று விட்டன. அப்பல்லோ 11 விண்கலத்தின் உதவியோடு மனித குலத்தின் இந்த மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டது. ஆனால், நாம் தற்போது பயன்படுத்தும் மொபைல் போன்கள் அந்த அப்பல்லோ 11-ல் இருந்த ப்ராசஸர்களை விட அதிவேகமானவை என்பது உங்களுக்குத் தெரியுமா?

Mobile phone
Mobile phone
Pixabay

அப்பல்லோ 11 விண்கலத்தில் அப்பல்லோ கைடன்ஸ் கம்ப்யூட்டர் (Apollo Guidance Computer) என்ற ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டு வந்தது. அது 2048 வார்த்தைகளைச் சேமித்து வைக்கும் நினைவுத்திறன் உடையது. ஆற்றல் இல்லையென்றால் சேமித்து வைக்கப்பட்ட அத்தனை தகவல்களும் தானாகவே அழிந்துவிடக்கூடிய வகையில் அது வடிவமைக்கப்பட்டிருந்தது. இதைச் சுருக்கமாக RAM என்று அழைக்கலாம். ஒவ்வொரு வார்த்தையிலும் எட்டு பிட்களை சேமித்து வைக்க இயலும். அப்பல்லோவில் பயன்படுத்தப்பட்ட ப்ராசஸரின் RAM 32,768 பிட்களை சேமிக்கும் சக்தி உடையது.

இது தவிர 72 KB ROM வசதியும் அந்த ப்ராசஸரில் செய்யப்பட்டிருந்தது. இதில் 589,824 பிட்களை சேமித்து வைக்க இயலும். நாமே புரோகிராமிங் செய்யும் அளவுக்கு இந்த ரோம் உருவாக்கப்பட்டிருந்தது. அப்பல்லோ 11 விண்கலத்திலிருந்த ப்ராசஸரில் இந்தக் கட்டுரையைக் கூட முழுவதுமாகச் சேமிக்க இயலாது. அதன் நினைவுத் திறன் அவ்வளவு குறைவு. நீங்கள் கையில் வைத்திருக்கும் மொபைல் போன் அல்லது MP3 பிளேயரில் அப்பல்லோவில் இருந்த RAM-ஐ விட பல மடங்கு தகவல்களைச் சேமித்து வைக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன் முதலில் சந்திரனில் இறங்கிய வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்!
முதன் முதலில் சந்திரனில் இறங்கிய வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்!

துல்லியமாகச் சொல்லவேண்டும் என்றால் 4GB RAM என்பது 34,359,738,368 பிட்களைத் தற்காலிகமாக சேமித்து வைக்க உதவும். இந்த 4GB RAM அப்பல்லோவில் பயன்படுத்தப்பட்ட RAM-ஐ விட ஒரு மில்லியன் மடங்கு அதிக தகவல்களைத் தற்காலிகமாக சேமித்து வைக்க வல்லது. ஐபோனில் இருக்கும் 512 GB ROM என்பது 4,398,046,511,104 பிட்களை நிலையாக சேமிக்க வல்லது. இது அப்பல்லோவில் பயன்படுத்தப்பட்ட RAM-ஐ விட ஏழு மில்லியன் மடங்கு அதிக அளவில் தகவல்களை சேமிக்கும்.

நினைவுத்திறன் மட்டுமல்ல, செயல்படும் வேகமும் மிக முக்கியப், பங்காற்றுகிறது. அப்பல்லோ 11 ல் இருந்த கம்ப்யூட்டரில் உள்ள இந்த பிராசஸர் 0.043 MHz வேகத்தில் தகவல்களைப் பரிமாறும். ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன் ஆன ஐபோன் 2490 MHz வேகத்தில் தகவல்களைப் பரிமாற்றம் செய்யும். அப்போலோ 11 இல் இருந்த ப்ராசஸரின் வேகத்தோடு ஒப்பிட்டால் இது 1,00,000 மடங்கு அதிக வேகத்தில் தகவல்களைப் பரிமாறுகிறது.

அப்போலோ 11 இல் ப்ராசஸரை கால்குலேட்டருடன் கூட நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க இயலும். கால்குலேட்டர்களை உற்பத்தி செய்யக்கூடிய புகழ்பெற்ற நிறுவனமான டெக்சாஸ் நிறுவனம் 1998 ஆம் ஆண்டில் TI 73 மற்றும் 2004 ஆம் ஆண்டில் TI 84 ஆகிய கால்குலேட்டர்களை அறிமுகம் செய்தது. TI 73 அப்பல்லோவில் பயன்படுத்தப்பட்ட ப்ராசஸரை விட குறைந்த அளவு RAM ஐயும் 8 மடங்கு அளவு ரோமையும் கொண்டிருந்தது. TI 84 அப்பல்லோவின் ப்ராசஸரை விட 32 மடங்கு அதிக RAM ஐயும் 14700 மடங்கு அதிக ROM ஐயும் கொண்டிருந்தது.

செயல்படும் வேகத்தோடு ஒப்பிடுகையில் அப்பல்லோ 11 விண்கலத்திலிருந்த பிராசஸரை விட 140 மடங்கு அதிக வேகத்தில் TI 73 - உம் 350 மடங்கு அதிக வேகத்தில் TI 84-உம் தகவல்களைப் பரிமாற்றம் செய்யக்கூடியவை!

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தபோதுதான் அப்பல்லோ 11 வழியாக மனிதனின் முதல் நிலவுப் பயணம் சாத்தியம் ஆனது. தற்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து இன்னும் நாம் எட்ட முடியாத இலக்குகளைக் கூட அடைய முடியும் என்பதுதான் நிதர்சனம்.

கம்ப்யூட்டர் புரோகிராம் எழுதுவது முன்பைவிட பல மடங்கு வளர்ச்சி பெற்று இருப்பதால் மிகக் கடினமான கோடிங்-களையும் மிக எளிதாக, மிக வேகமாக நம்மால் எழுத, செயல்படுத்த முடியும்!

அப்பல்லோ 11 விண்கலத்தில் பழைய டிஸ்ப்ளே இன்டர்பேஸ் பயன்படுத்தப்பட்டது. தற்போதைய வளர்ச்சியின் உதவியால் அதை இன்னும் பல மடங்கு மேம்படுத்த இயலும். ஆனால் தொடுதிரை வழியாக அதைச் செய்வது மிகவும் கடினமானதாக இருக்கக்கூடும்! கையில் உறை அணிந்து கொண்டு தொடுதிரை இயக்குவது என்பது மிகக் கடினமான காரியம் என்பதால் கண்களை நகர்த்துவது, அசைப்பது உள்ளிட்ட செயல்களின் மூலம் நம்மால் கட்டளைகளைப் பிறப்பிக்கவும் பரிமாறவும் இயலும்.

எல்லாவற்றையும் விட, பூமியிலிருந்து நிலவிற்குத் தகவல்களை 1969 ஆண்டைக் காட்டிலும் மிக அதிக வேகத்தில் இப்போது நம்மால் அனுப்ப இயலும். தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் மிகப்பெரிய கோப்புகளையும் மிக அதிக தொலைவிற்கு விண்கலத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களைப் பரிமாற இயலும். இதற்காக தொடர்பியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சிக்கும் கேமரா துறையில் ஏற்பட்ட வளர்ச்சிக்கும் நன்றி தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

முதன்முதலில் நிலவில் கால் பதித்த நிகழ்வுகள்! - மீண்டும் ஏலத்துக்கு வருகிறது நீல் ஆம்ஸ்ட்ராங் வீடியோ

மென்தொழில்நுட்பத்தில் இன்னும் அபரிமிதமான வளர்ச்சி வருவதற்கு அறிகுறிகள் அனைத்தும் தென்படுகின்றன. இந்த வளர்ச்சியை வைத்து விண்வெளித்துறையில் நம்மால் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த இயலும். நிலவிற்குச் செல்லும் பயணத்தை முதல் முறையை விட மிகவும் சிறப்பாகவும் செய்து முடிக்க இயலும். ஆனால், அப்போதிருந்த தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து அவர்கள் நடத்திய அந்த சாதனை நிச்சயமாகப் பாராட்டத்தக்கது!