Published:Updated:

`நாசா வெளியிட்ட புதிய புகைப்படம்'- விக்ரம் லேண்டர் விழுந்த இடம் தெரியவில்லை!

நாசா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தின் அகலப்பகுதியில் 87 கிலோ மீட்டர் வரை பதிவாகியுள்ளது. ஆனால், அதில் விக்ரம் லேண்டர் விழுந்ததற்கான அடையாளமே தெரியவில்லை.

நாசா வெளியிட்ட நிலவின் மேற்பரப்பு
நாசா வெளியிட்ட நிலவின் மேற்பரப்பு ( vikatan )

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் - 2, விண்கலத்திலிருந்து செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் இறங்க முயன்ற விக்ரம் லேண்டர், 2 கிலோமீட்டர் தொலைவில் இஸ்ரோவின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. மீண்டும் அதோடு தொடர்பை ஏற்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது.

நாசா வெளியிட்ட நிலவின் மேற்பரப்பு
நாசா வெளியிட்ட நிலவின் மேற்பரப்பு
vikatan

தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரைக் கண்டறியும் முயற்சியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமும் ஈடுபட்டது. ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. மீண்டும் கடந்த அக்டோபர் 14-ல், விக்ரம் லேண்டர் தரையிறங்க முயன்ற பகுதியைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்தது. அதிலும் விக்ரம் லேண்டரின் உருவம் தென்படவில்லை என்று நாசா அறிவித்துள்ளது.

விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் நாசாவின் லூனார் புலனாய்வு ஆர்பிட்டர் கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அந்தப் புகைப்படங்களை நாசா தனது இணையதளத்திலும் ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. அதிலுள்ள ஒரு புகைப்படத்தின் அகலப்பகுதியில் 87 கிலோ மீட்டர்வரை பதிவாகியுள்ளது. ஆனால், அதில் விக்ரம் லேண்டர் விழுந்ததற்கான அடையாளமே தெரியவில்லை.

நாசா
நாசா
vikatan

`ஒருவேளை விக்ரம் லேண்டரை மேகம் மறைத்திருக்கலாம் அல்லது நிலாவில் நிழலான பகுதியில் லேண்டர் விழுந்திருக்கலாம் அல்லது ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்த பகுதிக்கு அப்பால் விக்ரம் லேண்டர் விழுந்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.