Published:Updated:

அடர் இருள், அதிவெளிச்சம்; நிலவுப் பயணத்துக்குத் தயாராகும் நாசா வீரர்கள்!

பயிற்சியின் போது நாசா வீரர்கள் ( instagram )

அடர் இருளில் நீச்சல் குளத்தின் அடியில் வீரர்கள் மிதப்பது போலான படங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

அடர் இருள், அதிவெளிச்சம்; நிலவுப் பயணத்துக்குத் தயாராகும் நாசா வீரர்கள்!

அடர் இருளில் நீச்சல் குளத்தின் அடியில் வீரர்கள் மிதப்பது போலான படங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

Published:Updated:
பயிற்சியின் போது நாசா வீரர்கள் ( instagram )

நாசா விண்வெளி ஆய்வு மையம், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் மிஷனில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அப்டேட்கள் நாசா சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வருகின்றன. இதற்காக வீரர்கள் சிலர் பயிற்சி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் சிலவற்றை சமீபத்தில் நாசா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அடர் இருளில் நீச்சல் குளத்தின் அடியில் வீரர்கள் மிதப்பது போலான படங்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றன.

நிலவின் தென் துருவத்திற்கு பயணிக்கவுள்ள விண்வெளி வீரர்கள் அங்கு கடும் இருளை சந்திக்க வேண்டி வரும். சூரியஒளி சில பாகை வரை மட்டுமே படும் என்பதால் இருள் அடர்த்தியாக இருக்கும். இந்தச் சூழ்நிலையை அப்படியே உருவாக்க நீச்சல் குளத்தில் ஒளி பிரதிபலிப்பைத் தடுக்கும் பொருட்டு கருப்பு துணி கொண்டு மூடப்பட்டுள்ளது. நீருக்கடியில் அதிவெளிச்ச விளக்குகளும் பயன்படுத்தப்படுகின்றன. மண், வழக்கமாக நீச்சல் குளங்களில் இருக்கும் சலிக்கப்பட்ட மண்ணோடு சில பொருட்கள் சேர்க்கப்பட்ட கலவை. தற்போது இந்த வீரர்கள் நீச்சல் உடையில் பயிற்சி மேற்கொள்கிறார்கள். விரைவில் விண்வெளி உடையிலும் பயிற்சி நடக்க இருப்பதாக நாசா தெரிவிக்கிறது. நாசா ஜான்சன் மையத்தில் உள்ள ஆய்வகத்தில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. புவியீர்ப்பு விசையற்ற விண்வெளியில் உடல் தகவமைப்பிற்காக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். புவியின் ஆறில் ஒரு பங்கு தான் நிலவில் ஈர்ப்பு விசை இருக்கும் என்பதால் அதற்கேற்ப வீரர்கள் தயாராக வேண்டும். இணையத்தில் வெளியாகியுள்ள இந்தப் புகைப்படங்கள் பலரின் விழிகளையும் ஆச்சரியத்தில் விரியச் செய்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism