Published:Updated:

Parker Solar Probe: சூரியனின் வளிமண்டலத்திற்குள் பூமியின் விண்கலம்... நாசா சாதித்தது எப்படி?!

Parker Solar Probe
News
Parker Solar Probe ( உருவகம் செய்யப்பட்ட படம் )

இந்த விண்கலத்தில் WISPR (Wide-Field Imager for Parker Solar Probe) என்ற புகைப்படக்கருவி உள்ளது. இது சோலார் ப்ரோபுக்கென்று தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட புகைப்படக்கருவி.

உலகில் உள்ள பல்வேறு நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன. இந்த விண்வெளி ஆராய்ச்சியில் சூரியனுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் வெகு சிலவே. சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியில் நாசா தன்னை முன்னிலைப்படுத்தும் விதமாக 2018 ஆம் ஆண்டு 'பார்க்கர் சோலார் ப்ரோப்' என்ற ஒரு விண்கலனை சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பியது.

இந்த ஆய்வானது பல்கலைக்கழகப் பேராசிரியர் யூஜீன் நியூமென் பார்க்கர் என்பவரின் குழுவால் 1958-இல் உருவாக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி உருவானது. மேலும், 1960-ஆம் ஆண்டு முதல் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்ததாகவும் தற்போதுதான் அதனை செயல்படுத்த முடிந்திருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 12 ஆகஸ்ட் 2018-இல் ஏவப்பட்ட இந்த விண்கலம், 19 ஜூன் 2025 அன்று தனது இலக்கை அடையும் என்றும் கணித்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள். டெல்டா 4 ஹெவி ராக்கெட் (Launching vehicle) உதவியுடன் கேப் கனாவெரல் விமானப்படை நிலையத்திலிருந்து இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

சூரியன்
சூரியன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாசா முதன்முறையாக ஒரு விண்கலத்திற்கு உயிருள்ள மனிதரின் பெயரை வைத்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முக்கியக் காரணமாக இருந்த யூஜீன் நியூமென் பார்க்கரின் பெயரில் பார்க்கர் என்ற பெயரையே சோலார் ப்ரோபுக்கு சூட்டியிருக்கிறது நாசா. மேலும் 1.1 மில்லியனுக்கு அதிகமான மக்களின் பெயர்களைக் கொண்ட மெமரி கார்டு ஒரு தகட்டில் பொருத்தப்பட்டு விண்கலத்தில் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பார்க்கரின் ஆய்வறிக்கையும் விண்கலத்தில் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விண்கலத்தில் WISPR (Wide-Field Imager for Parker Solar Probe) என்ற புகைப்படக்கருவி உள்ளது. இது சோலார் ப்ரோபுக்கென்று தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட புகைப்படக்கருவி. இதோடு, பூமிக்கும் விண்கலத்திற்கும் இருக்கும் தொடர்பில் பிரச்னை ஏற்படும் பட்சத்தில் அந்த பிரச்னையைத் தானே சரிசெய்து கொள்ளும் வகையில் 'Fault Management System'-ம் இந்த விண்கலத்தில் இருப்பது சிறப்புக்குரியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சூரியனை நோக்கிய சோலார் பார்க்கர் ப்ரோபின் பயணம்:

இந்த ஆய்வானது, 60 ஆண்டுகாலமாக அறிஞர்களால் தேடப்படும் சூரியனின் வளிமண்டலமான கொரோனாவின் வெப்பம், சூரியனின் மேற்பரப்பைக் காட்டிலும் நூற்றுக்கணக்கான மடங்கு அதிகமாக இருப்பது எப்படி? (கொரோனாவின் சராசரி வெப்பநிலை 1.4 - 2.8 மில்லியன் டிகிரி செல்சியஸ்) என்ற கேள்விக்கு பதில் சொல்லும் என்றும், மேலும் சூரியனைப் பற்றிய நமக்குத் தெரியாத தகவல்களை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்றும் கூறுகிறது நாசா.

இந்த விண்கலங்கள் ஏவப்பட்டத்திலிருந்து 43 நிமிடத்திற்கு பின் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சூரியனை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. மேலும் இந்த பயணத்தில் சோலார் ப்ரோப் சூரியனுக்கு அருகில் செல்ல, 24 முறை சூரியனைச் சுற்றிவந்து கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குவதுதான் திட்டம். இந்தாண்டு கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி 8-வது முறை பார்க்கர் ப்ரோப் சூரியனைச் சுற்றி வந்தபோதுதான் சூரியனின் வளிமண்டலத்திற்குள் முதன் முறையாக நம்முடைய விண்கலம் ஒன்று நுழைந்து விட்டதைக் கண்டறிந்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

Parker Solar Probe சூரியனை சுற்றி வரும் பாதை
Parker Solar Probe சூரியனை சுற்றி வரும் பாதை

சூரியன் என்பது திடமான பொருள்களால் ஆன ஒன்று கிடையாது. அது முழுவதும் வாயுவால் ஆன ஒரு நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு வளிமண்டலம் இருக்கிறது. இந்த வளிமண்டலத்தின் பெயர் கொரோனா, சூரியனின் மேற்பரப்பை விட இந்த வளிமண்டலத்தின் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று மேலே கூறியிருந்தோம். இந்த வளிமண்டலம் முழுவதும் சூரிய துகள்களால் நிறைந்திருக்கும். சூரியனில் இருக்கும் அதீத வெப்பம் மற்றும் அழுத்தத்தால் இந்த சூரிய துகள்கள் வளிமண்டலத்துக்கு வெளியே உந்தித் தள்ளப்படும். ஆனால், சூரியனின் புவியீர்ப்பு விசை மற்றும் காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டுக் குறிப்பிட்ட தூரம் வரை சூரியனின் வளிமண்டலத்திலேயே இந்த சூரிய துகள்கள் சுற்றிவந்து கொண்டிருக்கும். ஆனால், ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு மேல் சூரியனின் புவியீர்ப்பு விசை மற்றும் காந்தப்புலம் குறையச் சூரிய துகள்கள் சூரியனின் வளிமண்டலத்தைக் கடந்து வெளியேறிவிடும். இந்த புள்ளியைத்தான் Alfven Critical Surface என்று குறிப்பிடுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த Alfven Critical Surface தான் சூரிய வளிமண்டலம் முடிவுறும் பகுதி என்றும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்தப் புள்ளி குறிப்பிட்டு எந்தத் தூரத்தில் இருக்கிறது என்று விஞ்ஞானிகளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. சூரியனின் மேற்பரப்பிலிருந்து 4.3 முதல் 8.6 மில்லியன் மைல்கள் தொலைவுக்குள் எங்காவது ஒரு இடத்தில் சூரியனின் வளிமண்டலமான கொரோனா முடிவுறும் என்று மட்டும் முன்னர் கிடைத்த புகைப்படங்களின் மூலம் கணித்திருந்தனர். ஏப்ரல் 28-ஆம் தேதி நாசாவின் பார்க்கர் ப்ரோப் சூரியனைச் சுற்றி வந்த போது அது 8.1 மில்லியன் மைல் தொலைவில் இருந்திருக்கிறது. அப்போதுதான் குறிப்பிட்ட நிலையை வைத்து பார்க்கர் ப்ரோப் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

சூரியனை நெருங்கும்போது இந்த விண்கலம் உருகிவிடாதா?

சூரியனின் கொரோனா பகுதி என்னதான் பல மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் குறைவே. காரணம், கொரோனா பகுதியின் அடர்த்தி குறைவு. அடர்த்தி குறைவான பகுதி குறைவான வெப்பத்தையே வெளிப்படுத்தும் என்பது அறிவியல் உலகம் அறிந்த உண்மை. பார்க்கர் ப்ரோப் சூரியனின் கொரோனா பகுதியை நெருங்கும்போது 2.8 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எதிர்கொண்டாலும், அப்பகுதியை எதிர்கொள்ளும் வெப்பக் கவசத்தின் மேற்பரப்பு சுமார் 1,400 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெப்பமடையும்.

பார்க்கர் ப்ரோப் அனுப்பிய சூரியனின் படங்கள்
பார்க்கர் ப்ரோப் அனுப்பிய சூரியனின் படங்கள்

இந்த 1400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலிருந்து விண்கலம் பாதுகாக்க 73 கி.கி எடை கொண்ட வெப்பநிலை பாதுகாப்பு அமைப்பு (Thermal Protection System) உள்ளது. இந்த அமைப்பு 2.4 விட்டத்தையும் 4.5 அங்குல அடர்த்தியையும் கொண்டுள்ளது. இந்த அமைப்பு 1650 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை சோதிக்கப்பட்ட பின்னரே விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த வெப்பநிலை பாதுகாப்பு அமைப்பு விண்கலனின் வெப்பநிலையை 30 டிகிரி செல்சியஸ் ஆகவே வைத்திருக்கும் என்று நாசா கூறியிருக்கிறது.

கடந்த நவம்பர் 21-ல் சூரியனைப் 10-வது முறை சுற்றி வந்தபோது சூரியனில் இருந்து 5.3 மில்லியன் மைல்கள் தூரம் என்ற அளவிற்கு நெருங்கியிருக்கிறது பார்க்கர் ப்ரோப்.