Published:Updated:

பூமிக்கு மிக அருகில் உள்ள கருந்துளை கண்டுபிடிப்பு... எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா?

Super massive black hole
Super massive black hole ( Futurism )

பால்வெளியில் மட்டும் 100 மில்லியன் கருந்துளைகளுக்கும் மேல் இருக்கக் கூடும். அவற்றுள் சில நம் அருகில் கூட இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

பூமிக்கு மிகவும் நெருக்கமான கருந்துளை ஒன்றை வானியலாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இது 1000 ஒளியாண்டுகள் தூரத்துக்கு அப்பால் உள்ளது. இதை காண்ஸடலேசன் டெலஸ்கோப்பிலிருந்து 9.5 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்றும் சொல்லலாம். இதைக் கேட்பதற்கு இது பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது போன்றே தோன்றும். ஆனால் உண்மையில் பிரபஞ்சம் முழுவதும் உள்ள கருந்துளைகளில் இதுதான் பூமிக்கு மிக நெருக்கமானதாகும். இதுவரை வானியலாளர்களால் பால்வெளி மண்டலத்தில் 24-க்கும் மேற்பட்ட கருந்துளைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், பால்வெளியில் மட்டும் 100 மில்லியன் கருந்துளைகளுக்கும் மேல் இருக்கக் கூடும். அவற்றுள் சில நம் அருகில் கூட இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

கருந்துளை
கருந்துளை

ஒரு நட்சத்திரம் கருந்துளையின் உள்வட்டப் பாதையில் சுற்றி வரும் வேளையில் மற்றொரு நட்சத்திரமானது அதன் வெளி வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இந்தக் கருந்துளையானது இந்த இரு நட்சத்திரங்களின் இயக்கம் மூலமாகவே கண்டறியப்பட்டுள்ளது. இவை மூன்றும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 'ஹெச் ஆர் 6819' (HR 6819) என்று அழைக்கப்படுகிறது. இந்த 'ஹெச் ஆர் 6819' பற்றிய ஆய்வானது பல வருடங்களுக்கு முன்னர், ஆரம்பகட்டத்தில் இது 'ஃபீ ஸ்டார்' (Be Star) என்று அழைக்கப்படும் போதே தொடங்கிவிட்டது. இது மிகவும் வேகமாகச் சுற்றக்கூடிய நட்சத்திரமாகும். தற்போது சிலியில் உள்ள 'லா சிலா'(La Silla) கண்காணிப்பு மையத்தில் 2.2 மீட்டர் அளவு கொண்ட தொலைநோக்கி மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இதில் இரண்டு நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரியாத பொருள் ஒன்றை நாற்பது நாள்களுக்கு ஒரு முறை சுற்றிவருகிறது. அது கருந்துளையாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டது. இந்தக் கருந்துளையின் எடையானது சூரியனை விட நான்கு மடங்கு அதிகமாக இருக்கக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் தட்டு பூமிக்கு வந்தது உண்மை... உறுதிசெய்த பென்டகன்! அப்போ ஏலியன்கள் இருப்பதும் உண்மைதானா?
Black Hole
Black Hole

இதுகுறித்து ஜெர்மனியில் உள்ள தெற்கு ஐரோப்பிய கண்காணிப்பு (European southern observatory) மையத்தின் வானியலாளர் கார்சிங்க் கூறுகையில், ``உண்மையிலேயே கருப்பு நிறத்தில் இருக்கும் கருந்துளை இதுதான். இந்த முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் கருந்துளை இதுவே. பூமிக்கு மிக அருகில் இருக்கும் கருந்துளையாகவும் இது இருக்கக் கூடும்" என்றார்.

இதுப்பற்றி தெற்கு ஐரோப்பியக் கண்காணிப்பு மையத்தின் மற்றொரு ஆராய்ச்சியாளரான மரியான்னே ஹெய்டா கூறுகையில்,``நமது பால்வெளி மண்டலத்தில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட கருந்துளைகள் இருக்கக் கூடும் . இதனால் இதைவிட மிக அருகில் இருக்கும் கருந்துளைகளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு