Published:Updated:

Perseverance: செவ்வாய்க்கு ரவுண்டு ட்ரிப் அடிக்கும் நாசா - ஜூலை 30-ல் விண்ணில் பாய்கிறது!

Perseverance: செவ்வாய்க்கு ரவுண்டு ட்ரிப் அடிக்கும் நாசா
Perseverance: செவ்வாய்க்கு ரவுண்டு ட்ரிப் அடிக்கும் நாசா ( Nasa )

ஏற்கெனவே செவ்வாய்க்கிரகத்தில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுவரும் 'Curiosity' ரோவர் போலவே இருக்கும் இது, தொழில்நுட்ப அளவில் அதைவிட நன்கு மேம்பட்டிருக்கிறது.

செவ்வாய்க்கிரகத்தில் அடுத்த விண்கலத்தை வரும் வியாழன் அன்று ஏவத் திட்டமிட்டுள்ளது நாசா. `Perseverance' (தமிழில் `விடாமுயற்சி' என அர்த்தம்) என்று அழைக்கப்படும் இந்த செவ்வாய்க்கிரக விண்கல ஊர்தி (Rover) ஏற்கெனவே செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஊர்திகளைவிட அதிக தொழில்நுட்பத் திறன் வாய்ந்தது.

Perseverance
Perseverance
Nasa

கடந்த வாரம் சீனாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளும் செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலத்தை ஏவியதைத் தொடர்ந்து, வரும் வியாழன் அன்று `Perseverance' என்றழைக்கப்படும் இந்த ஊர்தியை அனுப்ப முடிவு செய்துள்ளது நாசா. ஏற்கெனவே செவ்வாய்க்கிரகத்தில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுவரும் 'Curiosity' ரோவர் போலவே இருக்கும் இது தொழில்நுட்ப அளவில் அதைவிட நன்கு மேம்பட்டிருக்கிறது.

`விண்வெளியிலும் விடாத சண்டை!’ - ஒரேநேரத்தில் விண்கலத்தை அனுப்பும் அமெரிக்கா - சீனா

ஒரு சராசரி கார் அளவில், ஆறு சக்கரில் ஓடும் `Perseverance' ரோவர் முன்பு சொன்னது போலவே அப்படியே "Curiosity" ரோவரின் ஜெராக்ஸ். இதன் 7-அடி (2-மீட்டர்) ரோபோ பாறையைத் துளைத்து, மாதிரிகளைச் சேகரிப்பதற்கான திறன் படைத்தது. மேலும், இதில் மொத்தம் 23 கேமராக்கள் உள்ளன. இதில் பல கேமராக்கள் கலர் புகைப்படங்கள் எடுக்கும் திறன் கொண்டவை. வியாழன் விண்ணில் ஏவப்படும் இது அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் செவ்வாய்க்கிரகத்தைச் சென்றடையும் எனத் தெரிவிக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

Perseverance
Perseverance
Nasa

பூமியைப்போல அதன் வரலாற்றை மண்ணில் புதைத்து வைத்திருக்கும் செவ்வாய்க்கிரகம். அதை ஆராயும் பட்சத்தில் நம்மால் செவ்வாய்க்கிரகம் எப்படி இருந்தது எனக் கணிக்க முடியும். அதனால் அதன் மாதிரிகளைச் சேமித்து பூமிக்கு அனுப்ப இந்த ரோவரில் 43 மாதிரி குழாய்கள் உள்ளன, ஒவ்வொன்றும் பூமியிலிருக்கும் நுண்ணுயிர்களை அகற்றுவதற்காகக் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தி அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு குழாயிலும் 15 கிராம் எடையுள்ள மாதிரிகள் வைத்திருக்க முடியும். பூமிக்குத் திரும்புவதற்குள் 0.5 கிலோ கிராம் எடையுள்ள மாதிரிகளைச் சேகரிப்பதே இதன் குறிக்கோள். 2026-ம் ஆண்டில் மீண்டும் இந்த மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டு வரும் மிஷனைத் தொடங்கப்படும் என்றும் 2031-க்குள் மாதிரிகள் பூமிக்கு வந்துவிடும் என்றும் நாசா நம்புகிறது.

அடுத்த கட்டுரைக்கு