Published:Updated:

செவ்வாயில் சத்தம் எப்படி இருக்கும்? Perseverance அனுப்பிய ஆடியோ ஃபைல்!

அடுத்த சில வாரங்களுக்குள் ரோவருடன் அனுப்பப்பட்டுள்ள ட்ரோனும் தன் வேலையைத் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது நாசா. அப்படி என்றால் இன்னும் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செவ்வாயில் சத்தம் எப்படி இருக்கும்? இதுவரை நாம் அதைப் பற்றிச் சிந்தித்ததில்லை. பூமியில் இருப்பதைப் போன்றே இருக்குமா, இல்லை எப்படி இருக்கும். அதற்கான விடையைப் பெர்ஸிவரன்ஸ் (Perseverance) ரோவர் கொடுத்திருக்கிறது. செவ்வாயில் கேட்கும் சத்தங்களைப் பதிவு செய்து அனுப்பியுள்ளது. தினமும் பெர்ஸிவரன்ஸ் ரோவர் செய்யும் பணிகளையும், எடுக்கும் படங்களையும் பெர்ஸிவரன்ஸ் ரோவர் மற்றும் நாசா என இரண்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது நாசா. பெர்ஸிவரன்ஸ் பதிவு செய்த செவ்வாயின் சத்தத்தையும் SoundCloud தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

பெர்ஸிவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள சூப்பர்கேமில் இருக்கும் மைக்ரோபோன் மூலம் இந்தச் சத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாயில் காற்று வீசும் சத்தமும், பெர்ஸிவரன்ஸ் ரோவரில் இருந்து லேசர் கதிர் செவ்வாயில் ஒரு கல்லைத் தாக்கும் சத்தமும் ரோவரின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமியில் சாதாரணமாக நாம் கேட்கும் ஒலியானது செவ்வாயில் மிகவும் மெதுவாகவே கேட்கும்.

Asus ROG Phone 5 சீரிஸ் மொபைல்கள்: 18 GB RAM, 512 GB மெமரி... கேமிங் ரசிகர்களே தயாரா?!

லேசர்கள் கல்லைத் தாக்கும்போது கேட்கும் ஒலியிலிருந்தே, அந்தக் கல்லானது எவ்வளவு கடினத்தன்மையுடையதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும். மேலும், "ரோவரில் இருக்கும் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் கேமராக்கள் அந்தக் கல் எதனால் ஆனது என்பதைத் தீர்மானிக்க உதவியாக இருக்கும்" என்று ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான நவோமி முர்டாக் (Naomi Murdach) பேட்டியளித்திருக்கிறார்.

அடுத்த சில வாரங்களுக்குள் ரோவருடன் அனுப்பப்பட்டுள்ள ட்ரோனும் தன் வேலையைத் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது நாசா. அப்படி என்றால் இன்னும் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு