Published:Updated:

`சூரியக் கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா?' - அறிவியலாளர் விளக்கம்!

சூரியனைப் பார்க்கக்கூடிய தரச்சான்றிதழ் பெற்ற கண்ணாடிகள் இருந்தால் வீட்டில் இருந்தபடியே கண்டுகளிக்கலாம்.

Solar Eclipse
Solar Eclipse

கடந்த சில நாள்களாகவே எங்கு பார்த்தாலும் சூரிய கிரகணத்தைப் (Solar Eclipse) பற்றிய பேச்சுதான். அறிவியல் விளக்கத்தைப் பார்க்கலாமா?

'பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வருவதையே சூரிய கிரகணம் என்கிறோம். நாளை நடக்கப்போகிற சூரிய கிரகணம் பார்ப்பதற்கு ஒரு நெருப்பு வளையத்தைப்போல் இருக்கும்' என்கிறார்கள் அறிவியலாளர்கள். பூமி சூரியனை நீள் வட்டப் பாதையில்தான் சுற்றி வருகிறது. சந்திரனும் பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில்தான் சுற்றி வருகிறது. பூமி, சூரியனிடமிருந்து தொலைவில் இருக்கும்போது அது பார்ப்பதற்குச் சின்னதாக இருக்கும். அந்த நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்ந்தால் சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியும். அதுதான் முழு சூரிய கிரகணம். நாளை நடக்கவிருக்கிற சூரிய கிரகணத்தின்போது பூமி சூரியனுக்கு அருகில் வரும். எனவே, சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. அதனால்தான் நாளை நடக்கவிருக்கிற சூரிய கிரகணம் பார்ப்பதற்கு நெருப்பு வளையத்தைப் போலிருக்கும்.

நாளை காலை 8 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை சூரிய கிரகணம் இருக்கும். காலை 10.47 மணியளவில் முழுமையான சூரிய கிரகணத்தைக் காணலாம்
சூரிய கிரகணத்தைக் காண முடியாமல் சென்னை மக்கள் ஏமாற்றம்!
சூரிய கிரகணத்தைக் காண முடியாமல் சென்னை மக்கள் ஏமாற்றம்!
சூரிய கிரகணத்தில் வெளியே செல்லலாமா, சாப்பிடலாமா, கர்ப்பிணிகளுக்கு பாதிப்பா?'- மருத்துவரின் பதில்கள்

சராசரியாகச் சூரிய கிரகணங்கள் வருடத்துக்கு மூன்று முறை ஏற்படும். அதிகபட்சமாக ஐந்து முறை ஏற்படும். இதற்கு முன்னர் 1935-ஆம் ஆண்டு ஐந்து முறை ஏற்பட்டுள்ளது. இனி 2206 ஆண்டு ஐந்து முறை சூரிய கிரகணம் ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை நடக்கவிருக்கும் சூரிய கிரகணம் 2019-ம் ஆண்டின் மூன்றாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம். நாளை காலை 8 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை சூரிய கிரகணம் இருக்கும். காலை 10.47 மணியளவில் முழுமையான சூரிய கிரகணத்தைக் காணலாம். 10.47-லிருந்து 10.50 வரை சந்திரன் முழுமையாகச் சூரியன் மேலே இருக்கும்.

சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் வெளியே செல்லக் கூடாது, அந்த வேளையில் எதுவும் சாப்பிடக் கூடாது என்பவற்றுக்கு அறிவியல் ரீதியான நிரூபனங்கள் எதுவும் இல்லை.
Solar Eclipse
Solar Eclipse

சூரிய கிரகணத்தைத் தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திருச்சி, ஊட்டி மற்றும் சென்னை ஆகிய நகரங்களிலிருந்தும் கேரளாவின் கண்ணூர், கொச்சி, கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஊர்களிலிருந்தும் கர்நாடகாவில் மங்களூரு மற்றும் பெங்களூரிலிருந்தும் முழுமையாகப் பார்க்க முடியும். இந்தியாவைத் தவிர்த்து நடுகிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்கா, ஆசியா (வடக்கு ஆசியாவைத் தவிர்த்து), கிழக்கு ரஷ்யா, வடக்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் சாலமன் தீவுகள் ஆகிய இடங்களிலிருந்தும் காணலாம்.

சூரிய கிரகணம் குறித்து சாஸ்திரங்கள் சொல்வது என்ன? - பயனுள்ள 10 தகவல்கள்!
solar eclipse
solar eclipse
nasa.gov

இதைப் பற்றி முதுநிலை விஞ்ஞானியான வெங்கடேஸ்வரன் கூறுகையில், "சூரிய கிரகணத்தை அந்தந்த ஊர்களின் கோளரங்கத்திலிருந்து காணலாம். அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டிருக்கும். சூரிய கிரகணத்தின்போது எந்த விதமான பாதிப்பு தரக்கூடிய கதிர் வீச்சும் நம்மைத் தாக்காது. சாதாரணமாகவே, சூரியனை வெறும் கண்களால் பார்த்தால் கண்கள் பாதிக்கும். அதனால்தான் சூரிய கிரகணத்தினபோதும் பார்க்க வேண்டாம் என்கின்றனர். சூரியனைப் பார்க்கக்கூடிய தரச்சான்றிதழ் பெற்ற கண்ணாடிகள் இருந்தால் வீட்டில் இருந்தபடியே கண்டுகளிக்கலாம். சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் வெளியே செல்லக் கூடாது, அந்த வேளையில் எதுவும் சாப்பிடக் கூடாது என்பதெல்லாம் வெறும் கட்டுக் கதைகளே. அதற்கு அறிவியல் ரீதியான நிரூபனங்கள் எதுவும் இல்லை" என்றார்.

"மேலும், மதுரை தெப்பக்குளம், கோவை மற்றும் திருச்சியில் 'ரீஜியனல் ஸ்பேஸ் சென்டர்', ஊட்டியில் ஊட்டி தொலைநோக்கி மற்றும் சென்னையில் பிர்லா கோளரங்கம் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகிய இடங்களில் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.