Published:Updated:

`வானிலை ஆய்வு; 6 வருட உழைப்பு!’ -செவ்வாய்க்கிரகத்துக்கு UAE-யின் முதல் விண்கலம்

UAE-யின் முதல் விண்கலம்
News
UAE-யின் முதல் விண்கலம் ( Jon Gambrell )

இந்த விண்கலம் மூலம் செவ்வாய்க்கிரகத்தின் வானிலை மற்றும் காலநிலையைக் கணிக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

செவ்வாய்க்கிரகத்துக்கு தன்னுடைய முதல் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருக்கிறது ஐக்கிய அரபு நாடுகள். செவ்வாய்க்கிரக வானிலையை ஆராய்ச்சி செய்ய ஜப்பானிய நாட்டு ராக்கெட் துணையுடன் ஜப்பான் நாட்டிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது இந்த விண்கலம்.

UAE-யின் முதல் விண்கலம்
UAE-யின் முதல் விண்கலம்
山内大輝

செவ்வாய்க்கிரகத்தில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அரபு நாடும் தன்னுடைய முதல் விண்கலத்தை விண்ணில் செலுத்தியிருக்கிறது. இதுதான் பூமி தாண்டி பிற கோள்களுக்கு செல்வதில் அவர்களுடைய முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. `ஹோப்' (நம்பிக்கை) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், ஜப்பான் நாட்டின் 'டனேகாஷிமா' விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை H-II A ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. வரும் பிப்ரவரி 2021 அன்று செவ்வாய்க்கிரக சுற்றுப்பாதையை இது சென்றடையும். இந்த விண்கலம் மூலம் செவ்வாய்க்கிரகத்தின் வானிலை மற்றும் காலநிலையைக் கணிக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிகழ்வை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்ட ஆறு வருடங்கள் உழைத்திருக்கிறது UAE. இதை மேலும் மெருகேற்ற இவை அனைத்துக்கும் முன்னர் ஆழமான விண்வெளி ஆய்வுகளுக்கான அனுபவ வடிவமைப்பு கருவிகள் அல்லது உபகரணங்கள் முதலிய முன் அனுபவங்களைப் பெற்ற கொலராடோ பல்கலைக்கழகம், அரிசோனா மாநில பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் அவர்கள் கூட்டுச்சேர்ந்தனர். இதனால் ஐக்கிய அரபு நாடுகள் குழுவால் ஏற்கெனவே இருக்கும் சோதனை உள்கட்டமைப்பைப் பயன்படுத்தவும், அனுபவமிக்க விண்வெளி பொறியாளர்களிடமிருந்து அறிவைப் பெறவும் முடிந்தது.

செவ்வாய்க்கு கிளம்பியது UAE-யின் முதல் விண்கலம்!
செவ்வாய்க்கு கிளம்பியது UAE-யின் முதல் விண்கலம்!
Jon Gambrell

2014-ம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு இட்ட சிறிய வித்துதான், இன்று இந்த வெற்றிக்குக் காரணம் என்று UAE அரசு தெரிவித்திருக்கிறது. அடுத்த வருடம் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் ஐக்கிய அரபு அரசு, இந்த வெற்றியைப் புகழ்மாலையாய் சூட்டிக்கொள்ள அப்போதே திட்டமிட்டது. ஆனால், இதைச் செய்ய இன்றைய நாள்தான் உகந்த நாளாக அமைந்தது. ஏனென்றால், இன்றைய நாளை விட்டால் மீண்டும் இதே போன்று பூமியிலிருந்து செவ்வாய் மிகக் குறைந்த தூரத்தில் செல்ல 26 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இன்று ஏவப்பட்ட காரணத்தினால் இது அடுத்த வருடம் பிப்ரவரி மாதமே செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை அடைந்துவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செவ்வாய்க்கு கிளம்பியது UAE-யின் முதல் விண்கலம்!
செவ்வாய்க்கு கிளம்பியது UAE-யின் முதல் விண்கலம்!
Jon Gambrell

2014-ல் ஆரம்பித்த இந்தத் திட்டம் 200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில், சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு விண்கலமாகும். இந்த வெற்றிக்குப் பின்பு அமெரிக்காவுக்கு ஐக்கிய அரபு நாடு தூதரகர் யூசெப் அல் ஒடாய்பா நன்றி தெரிவித்தார். "6 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகளின் முதல் விண்கலம்' என்பது வெறும் ஒரு யோசனையாக மட்டுமே இருந்தது. இப்போது செவ்வாய் செல்லும் பயணமே தொடங்கிவிட்டது. இது மிகப்பெரிய சாதனை. இது வெறும் ஒரு ஆரம்பம்தான்" என்று அவர் தெரிவித்தார்.