Published:Updated:

`செவ்வாய்க் கிரகத்தில் பறந்த மர்ம பறவை!' - சர்ச்சையைக் கிளப்பும் நாசாவின் போட்டோ

செவ்வாயில் எடுக்கப்பட்ட இந்தப் போட்டோவில் பறவை ஒன்று பறப்பது பதிவாகியுள்ளது.

செவ்வாயில் கிரகத்தில் எடுக்கப்பட்ட போட்டோ
செவ்வாயில் கிரகத்தில் எடுக்கப்பட்ட போட்டோ ( நாசா )

நாசா அனுப்பி வைத்த கியூரியாசிட்டி என்ற ரோவர் 2012-ம் முதல் செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பு, காலநிலை போன்றவை மட்டுமின்றி அங்கே உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்துவருகிறது.

கியூரியாசிட்டி ரோவர்
கியூரியாசிட்டி ரோவர்
நாசா

கியூரியாசிட்டி ரோவர் எடுக்கும் படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவருகிறது நாசா.

அப்படி செவ்வாய்க் கிரகத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தில் பறவை போன்ற ஒன்று பறப்பது பதிவாகியுள்ளதாகச் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் வேற்றுக்கிரக வாசி ஆய்வாளரான ஸ்காட் சி வாரிங் (Scott C Waring).

அவருக்கு முன்பாக இதே கேள்வியை Sandra Elena Andrade என்பவர் அவரது யூடியூப் வீடியோ ஒன்றில் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

இவரைப் போன்ற வேற்றுக்கிரக வாசி ஆய்வாளர்கள் நாசாவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு விஷயம் சிக்கிவிட்டால் போதும் உடனே வேற்றுக் கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரம் இதோ எனக் கிளம்பி விடுவார்கள். அப்படித்தான் இதையும் கையில் எடுத்திருக்கிறார்கள்

செவ்வாயில் கிரகத்தில் எடுக்கப்பட்ட போட்டோ
செவ்வாயில் கிரகத்தில் எடுக்கப்பட்ட போட்டோ
நாசா

ஒரு வாரத்துக்கு முன்னால் இந்த போட்டோ எடுக்கப்பட்டிருக்கிறது. கறுப்பு வெள்ளை போட்டோவான அதில் வானத்தில் பறவை ஒன்று பறப்பது போலப் பதிவாகியுள்ளது.

போட்டோவான அதில் வானத்தில் பறவை ஒன்று பறப்பது போலப் பதிவாகியுள்ளது. ``அது நிச்சயமாக ஒரு அடையாளம் தெரியாத பொருள்தான். வேற்றுக் கிரகவாசிகள் இயற்கையில் இருக்கும் பொருள்களை அடிப்படையாக வைத்துக் கட்டமைப்புகளை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் ``அது பறக்கும் கழுகைப் போலத் தோற்றமளிக்கிறது, அதற்கு இரண்டு இறக்கைகள் இருக்கலாம் " எனவும் தெரிவித்துள்ளார்.

இங்கே ஆறு, கடல், மழை எல்லாமே மீத்தேன்தான்! - டைட்டனில் உயிர் தேடும் நாசா

அதே நேரம் இதில் அவருக்கு மாற்றுக் கருத்து ஒன்றும் உள்ளது. அது கனடாவில் இருக்கும் ஒரு தீவுப் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.