Published:Updated:

`மூன்று பறக்கும் தட்டு வீடியோக்களை உறுதிப்படுத்திய அமெரிக்கா..!’ -மீண்டும் `ஏலியன்ஸ்’ விவாதங்கள்

UFO | பறக்கும் தட்டு
News
UFO | பறக்கும் தட்டு ( US Navy )

பல மர்மங்களும் கட்டுக்கதைகளும் வலம்வந்தாலும், ஏலியன்கள் இருப்பதற்காக உறுதிப்படுத்தப்பட்ட தெளிவான ஆதாரங்கள் என்பது இதுவரை கிடைக்கப்பெறாமலேயே இருக்கிறது.

ஏலியன்... அறிவியல் உலகின் பல கால தேடல். இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் நாம் மட்டும் இருக்க வாய்ப்பில்லை, நிச்சயம் மற்ற கிரக வாசிகளும் இருக்க வேண்டும். ஒன்று நம்மைத் தொடர்புகொள்ளும் தூரத்தில் அவை இல்லை அல்லது அவை இங்கும் வந்துசெல்கின்றன, நமக்குத்தான் அதன் இருப்பு தெரிவதில்லை என்பதே பொதுவான கூற்றாக இருக்கிறது. ஏலியன்கள் மீது மனித குலத்திற்குத் தீராத பற்று என்றுமே உண்டு. ஹாலிவுட்டில் மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான ஏலியன் படங்கள் வந்திருக்கும். ஆனால் ஏலியன்கள் இருப்பதற்காக உறுதிப்படுத்தப்பட்ட தெளிவான ஆதாரங்கள் என்பது இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

ஏலியன்கள் (சித்திரிப்பு)
ஏலியன்கள் (சித்திரிப்பு)
Pixabay

ஏலியன்கள் பயணம் செய்ய விண்வெளி வாகனங்களைப் பயன்படுத்துகின்றன என்பது பொதுவான நம்பிக்கை. இவற்றை UFO (unidentified flying objects) என்று அழைக்கிறார்கள். அதாவது, நம்மால் அடையாளம் காணமுடியாத வானியல் விமானங்கள். அதற்கு, நம்மூரில் “பறக்கும் தட்டு” என்று அழகுத்தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள். இவை வானில் தென்பட்டதாக இதுவரை பல வீடியோக்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவற்றின் உண்மைத்தன்மை பற்றித் தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் நேற்று பறக்கும் தட்டுகள் தென்படும் மூன்று வீடியோக்கள் உண்மையானவைதான் என உறுதிசெய்து அவற்றை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது பென்டகன் (அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைப்பு). மீண்டும் இதனால் ஏலியன்கள் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அமெரிக்காவின் விமானப்படை விமானிகள் வானில் பார்த்த விசித்திரமான வடிவங்களைக் காட்டும் இந்த வீடியோக்களை வெளியிட்ட பென்டகன், இவற்றைச் சுற்றிப் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில்தான் தற்போது இவை வெளியிடப்பட்டுள்ளன எனத் தெரிவித்திருக்கிறது. இந்த வீடியோக்கள் ஏற்கெனவே 2007 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "இன்னும் இந்த வீடியோக்களில் இருப்பது என்னவென்பது தெளிவாக தெரியவில்லை" என்று பென்டகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றை UFO எனக் குறிப்பிடாமல் 'unidentified aerial phenomena' என்றே குறிப்பிட்டிருக்கிறது பென்டகன்.

இவற்றைப் பற்றி விரிவாகப் படிக்க கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்!

2017-ல் இதுகுறித்து பேசும்போது, பென்டகனின் UFO ஆராய்ச்சியின் தலைவரான லூயிஸ் எல்சாண்டோ ஒன்று கூறியிருந்தார்.

“இந்த ஆராய்ச்சியில் பல விஷயங்களை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம். அரசாங்கத்தைப் பற்றியோ, அது நடத்தும் ஆய்வைப் பற்றியோ நான் பேசப்போவதில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்தாக இதைக் கூறுகிறேன். நிச்சயமாக நாம் இங்கே தனியாக இல்லை”.

இந்த வீடியோக்கள் உண்மைதான் என்றாலும் அவற்றை உறுதிசெய்து இந்நேரத்தில் வெளியிடுவதற்கான காரணம் என்ன, இதெல்லாம் கொரோனாவில் அமெரிக்கா கோட்டைவிட்டதை பற்றிய விவாதங்களைத் திசைதிருப்புவதற்கான செயலா எனப் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.