Published:Updated:

Landsat திட்டத்தின் 9-வது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது நாசா... இதன் பணி என்ன தெரியுமா?

பூமியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் 8 லேண்ட்சேட் செயற்கைக் கோள்கள் இதுவரை விண்ணில் செலுத்தப்பட்டிருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லேண்ட்சேட் (Landsat) செயற்கைக் கோள்கள் வரிசையில் 9-வது செயற்கைக் கோளான 'லேண்ட்சேட் 9' நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Foggy Vandenberg Space Force Base-ல் இருந்து செப்.27-ல் (நேற்று) இந்திய நேரப்படி இரவு 11.42 மணிக்கு United Launch Alliance-ன் அட்லஸ் 5 (Atlas V) விண்கலம் மூலம் லேண்ட்சேட் 9 (Landsat 9) செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
லேண்ட்சேட் செயற்கைக்கோள் மூலம் பதிவு செய்யப்பட்ட புகைப்படம்
லேண்ட்சேட் செயற்கைக்கோள் மூலம் பதிவு செய்யப்பட்ட புகைப்படம்

காலநிலை மாற்றங்கள் பூமியில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என அறிந்து கொள்வதற்கும், நாம் பூமியின் மேற்பரப்பில் என்ன விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் பூமியின் மீது ஒரு 'கண்' வைக்க வேண்டியது அவசியம். அப்படி பூமியின் மீது நமது கண்ணாக 50 ஆண்டுகளாக பூமியைப் படமெடுத்து வந்திருக்கின்றன லேண்ட்சேட் (Landsat) செயற்கைக் கோள்கள். அமெரிக்காவின் நாசா மற்றும் U.S. Geological Survey (USGS) ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்படுத்தி வரும் திட்டம் இது. பூமியின் மேற்பரப்பைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று 1972-ல் ஜூலை 23-ல் Earth Resource Technology Satellite-1 என்ற செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர் அதுவே லேண்ட்சேர் 1 எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பூமியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் 8 லேண்ட்சேட் செயற்கைக் கோள்கள் இதுவரை விண்ணில் செலுத்தப்பட்டிருக்கின்றன. 1999-ல் 'லேண்ட்சேட் 7' செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. கடைசியாக 2013, பிப்ரவரி 11-ல் 'லேண்ட்சேட் 8' செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது இந்த வரிசையில் 9-வது செயற்கைக் கோளாக 'லேண்ட்சேட் 9' விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது.

LANDSAT 9
LANDSAT 9

லேண்ட்சேட் செயற்கைக் கோள்களின் பணி என்ன?

Land Remote-Sensing Satellite என்பதை LANDSAT என்று குறிப்பிடுகின்றனர். இயற்கையும் மனிதர்களும் தொடர்ந்து பூமியில் பல மாற்றங்களைச் செய்து கொண்டே இருக்கிறோம். எரிமலைகள் வெடிக்கின்றன, பனிப்பாறைகள் உருகுகின்றன, விளைநிலங்கள் அழிக்கப்படுகின்றன, பூமி தொடர்ந்து வெப்பமடைந்து கொண்டே வருகிறது. இவை அனைத்தையும் கண்காணிப்பது மிக முக்கியம். அப்போதுதான் நாம் ஏற்படுத்தும் ஆபத்துகளில் இருந்தும், இயற்கை பேரழிவுகளில் இருந்து ஓரளவுக்காவது நம்மையே நாம் தற்காத்துக் கொள்ள முடியும். தற்போது லேண்ட்சேட் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றி வந்து பூமியின் மேற்பரப்பு குறித்த தகவல்களை நமக்கு வழங்கி வருகின்றன. 'லேண்ட்சேட் 7' செயற்கைக் கோளின் சுற்றுவட்டப் பாதையில் 'லேண்ட்சேட் 9' நிலைநிறுத்தப்படும். 'லேண்ட்சேட் 7' அதன் சுற்று வட்டப் பாதையில் இருந்து நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கணிதம் படிக்கும் மாணவர்களுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் இருக்கின்றன? | Doubt of Common Man
நாசாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேண்ட்சேட் செயற்கைக் கோள்கள் பதிவு செய்த சில படங்களையும் பகிர்ந்திருக்கிறது நாசா.

லேண்ட்சேட் செயற்கைக் கோள்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

1972-ல் இருந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் லேண்டசேட் செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றி வந்து, பூமியின் மேற்பரப்புப் புகைப்படங்களையும், பூமியைக் குறித்த தகவல்களையும் நமக்கு வழங்கி வந்திருக்கின்றன.

இது குறித்து 'லேண்ட்சேட் 9' திட்டத்தில் செயலாற்றி வந்த விஞ்ஞானி ஜெஃப் மாஸேக் (Jeff Masek) பேசும் போது, "கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூமியைப் படமெடுத்து வரலாறு படைத்திருக்கிறது லேண்ட்சேட். இந்த 50 ஆண்டுகளில் பூமி எவ்வளவு மாறியிருக்கிறது, என்னென்ன காலநிலை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, சுற்றுச்சூழல் எந்தளவு மாறியிருக்கிறது, சூறாவளி, சுனாமி, காட்டுத்தீ ஆகியவை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன, நீர்நிலைகள் எந்தளவு சுருங்கியிருக்கின்றன போன்ற பல தரவுகளை லேண்ட்சேட் அளித்திருக்கிறது, இன்னும் அளித்துக் கொண்டிருக்கிறது" எனக் கூறினார். லேண்ட்சேட் செயற்கைக் கோள் மூலம் பெறப்படும் தரவுகள் அனைத்தையும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு