Election bannerElection banner
Published:Updated:

Perseverance: நாசாவின் ரோவரை வொர்க் ஃப்ரம் ஹோமில் இருந்தே இயக்கும் இந்தியர்!

Sanjeev Gupta | சஞ்சீவ் குப்தா | Perseverance controller
Sanjeev Gupta | சஞ்சீவ் குப்தா | Perseverance controller

3 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள, 222.45 மில்லியன் கி.மீ.களுக்கு அப்பால் இருக்கும் அந்த ரோவரை, லண்டனில் தன் குட்டி வீட்டில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் சஞ்சீவ் குப்தா.

கடந்த பிப்ரவரி 19-ல் வரலாற்று நிகழ்வாக நாசாவின் பெர்சவரன்ஸ் (Perseverance) ரோவர் பூமியில் இருந்து ஏழு மாதங்கள் பயணம் செய்து செவ்வாயில் வெற்றிகரமாகக் கால்பதித்தது. 3 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள, 222.45 மில்லியன் கி.மீ.களுக்கு அப்பால் இருக்கும் அந்த ரோவரை, லண்டனில் தன் குட்டி வீட்டில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் சஞ்சீவ் குப்தா.

நாசா விஞ்ஞானியான பேராசிரியர் சஞ்சீவ் குப்தா இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கலிபோர்னியாவில் பணிக்கட்டுப்பாட்டு அறையில் இருக்க வேண்டிய அவர், கொரோனா காரணமாக வீட்டில் இருந்தே வேலை பார்க்க வேண்டிய சூழல் அமைந்துவிட்டது.

`அமேசான் காட்டில் நிலங்கள் விற்பனைக்கு...'- ஃபேஸ்புக்கில் விளம்பரம்! பின்னணி என்ன?

"கலிபோர்னியாவில் நூற்றுக்கணக்கான பொறியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது இங்கே இருக்கிறேன்" எனக் கூறும் சஞ்சீவ் குப்தா, வீட்டிலிருந்தே வேலை பார்க்க வேண்டும் என்றவுடன், வேலைக்காக லண்டனிலேயே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதேயே மினி கட்டுப்பாட்டு அறையாக மாற்றி வேலை செய்து வருகிறார். நாசாவில் இருக்கும் தன் சக விஞ்ஞானிகளுடன் வீடியோ காண்பரன்ஸிங்கில் இணைந்து கொண்டே செவ்வாயில் இருக்கும் பெர்சவரன்ஸ் ரோவரை இயக்கி வருகிறார் சஞ்சீவ் குப்தா.

இவர் இயக்கும் பெர்சவரன்ஸ் ரோவர் சேகரிக்கும் மண் மாதிரிகள் 2031-ல் பூமிக்குக் கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு