Published:Updated:

`1549 நாள்கள் தேடியாச்சு... இனிமே முடியாது!' - முடிவுக்கு வந்த MH370 தேடல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`1549 நாள்கள் தேடியாச்சு... இனிமே முடியாது!' - முடிவுக்கு வந்த MH370 தேடல்
`1549 நாள்கள் தேடியாச்சு... இனிமே முடியாது!' - முடிவுக்கு வந்த MH370 தேடல்

'35,000 அடியில் பறந்து கொண்டிருக்கிறோம் என தொடர்ந்து இரண்டு முறை விமானத்தில் இருந்து  தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு பதில் வர, அவர்கள் மறுமுனையில் விமானத்தை தொடர்புகொள்ள பதில் ஏதும் வரவில்லை. தரை கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரிகள் ``நீங்கள் தற்போது வியட்நாம் நாட்டின் எல்லைக்குள் நுழைந்திருப்பதால் உடனே ஹோ சி மின் நகரத்தை தொடர்புகொள்ளுங்கள்" கூறியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மார்ச் 8, 2014 சனிக்கிழமை அதிகாலை 12.40 மணிக்கு விமானம் ஒன்று கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங்குக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தது. முதன்மை பைலட் ஜஹாரி அஹ்மத் ஷாவும், துணை பைலட் ஃபாரிக் அப்துல் அமிதும் தயாராக இருந்தனர். வழக்கம் போல் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து அறிவிப்பு வர ``குட் மார்னிங் ATC (AIR TRAFFIC CONTROL), இது MH 370" என பதிலளித்து விட்டு , 239 பயணிகளுடன் விமானம் பறக்கத் தொடங்கியது. '35,000 அடியில் பறந்து கொண்டிருக்கிறோம் என தொடர்ந்து இரண்டு முறை MH370 விமானத்தில் இருந்து தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்குப் பதில் வர, அவர்கள் மறுமுனையில் விமானத்தை தொடர்புகொள்ள பதில் ஏதும் வரவில்லை. தரை கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரிகள் ``நீங்கள் தற்போது வியட்நாம் நாட்டின் எல்லைக்குள் நுழைந்திருப்பதால் உடனே ஹோ சி மின் நகரத்தைத் தொடர்புகொள்ளுங்கள்" எனக் கூறினர்.

அதற்கு விமானத்தில் இருந்து ``ஆல் ரைட், குட் நைட்" என்று பதில் வர ஒட்டுமொத்த மலேசிய விமான தரைக் கட்டுப்பாட்டு மையமும் அதிர்ச்சிக்குள்ளானது. பின்னர் ரேடார் சிக்னலில் இருந்து முற்றிலும் விலகியது 'MH370'. அடுத்த நாள் காலை உலகின் தலைப்புச் செய்தி இந்த விமானம்தான். அதன் பிறகு MH370 பற்றி எழுந்த பல கேள்விகளுக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் மலேசிய விமானமான MH370யை தேடும் பணியை கைவிட்டுள்ளதாக மலேசிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது,


 
விமானத்தில் இருந்த பயணிகள் 

மொத்தம் 239 பயணிகள் இவ்விமானத்தில் பயணித்தனர். நீண்ட விசாரணைக்கு பிறகு, 2 நபர்கள் போலி பாஸ்போர்ட்டுடன் பயணித்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. பிறகு அதில் ஒருவர் Pouria Nour Mohammed , மற்றொருவர் Christian Kozel என்பதும், இருவரும் தீய நோக்கத்துக்காக பயணம் மேற்கொள்ளவில்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது.

1. சீனா/தைவான் - 152 + 1 குழந்தை
2. மலேசியா - 38
3. இந்தோனேசியா - 7 
4. ஆஸ்திரேலியா - 6
5. இந்தியா - 5
6. அமெரிக்கா - 3 + 1 குழந்தை
7. ஃப்ரான்ஸ் - 4 
8. கனடா - 2
9. நியூசிலாந்து - 2 
10. உக்ரைன் - 2
11. இத்தாலி - 1
12. நெதர்லாந்து - 1
13. ஆஸ்திரியா - 1 
14. ரஷ்யா - 1  

பைலட்தான் காரணமா ?

பைலட் ஜஹாரி அஹ்மத் ஷா , விமானம் ஓட்டுவதில் 33 வருட அனுபவம் பெற்றவர். மற்றவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் முக்கியமானவரும் கூட. ஃபாக்கர் F50, ஏர்பஸ் A300, போயிங் 737 ரக விமானங்களை எளிதில் கையாள்பவரும் ஆவார். காணாமல் போன இந்த விமானத்தை ஓட்டுவதற்கு முன்பு வரை கூட இவர் மகிழ்ச்சியாகதான் இருந்தார், துணை பைலட் ஆன  ஃபாரிக் அப்துல் அமிதும் இதே மனநிலையில் தான் இருந்துள்ளார். எனவே, பைலட்கள் இதற்கு எந்த விதத்திலும் காரணமில்லை என விசாரணையில் தெளிவாகத் தெரியவந்தது.

கடைசியாக விமானம் எங்கு சென்றது ?

விமானம் மலேசியாவில் இருந்து வியட்நாமுக்குச் செல்லும் வழியில் தென்சீனக் கடல் பகுதியில் சென்றது, திடீரென இடதுபுறமாக திரும்பி இந்தியப் பெருங்கடலை நோக்கிச் சென்றது என்றும் கூறப்படுகிறது. தெற்கு சீனக் கடல் பகுதியில்தான் கடைசியாக 1.30 மணி அளவில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சிவிலியன் ரேடாரில் பதிவாகி இருக்கும் இடத்துக்கும், மிலிட்டரி ரேடாரில் பதிவாகி இருக்கும் இடத்துக்கும் இடையேயுள்ள வித்தியாசம் கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் ஆகும். இதுகுறித்து பேசிய மலேசியன் சிவில் அவியேசன் துறைத்தலைவர் அசாருதீன் அப்துல் ரஹ்மான், ' உங்களிடம் சில விஷயங்களைதான் சொல்ல முடியும், எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடியாது ' என்று கூறினார். 

தரமற்ற விமானமா எம் ஹச் 370 ?

2002-ல் `மலேசியன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் இந்த எம் ஹச் 370 விமானத்தை வாங்கியது. காணாமல் போகும் வரை 53,465.21 மணி நேரம் பறந்துள்ளதாக அதன் சி.இ .ஒ அஹ்மத் ஜெளஹாரி யாயா கூறினார். உலகின் மிக பாதுகாப்பான விமான வகைகளுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தாழ்வாகப் பறந்தது!

அலிஃப் பாதி அப்துல் ஹாதி என்பவர் விமானம் மாயமான அன்று நள்ளிரவு 1.45 மணிக்கு தன் வீட்டின் மேல் பகுதியில் வெளிச்சம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாகவும், விமானம்  'பச்சோக்' என்ற கடலை ஒட்டிச் சென்றதாகவும் கூறினார். அதனருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆசிக் இப்ராஹிம் என்ற மீனவர் 1.30 மணியளவில் மிகவும் தாழ்வாக விமானம் பறந்ததாக அப்போது தெரிவித்திருந்தார். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

அதேபோல், விமானம் தொலைந்த சனிக்கிழமையில் இருந்து திங்கள் கிழமை வரை ஏறக்குறைய 3 நாள்கள் வரை சில சீனப் பயணிகளின் செல்போன்கள் செயல்பாட்டில் இருந்ததாக 'சீனா சோஷியல் நெட்வொர்க்கிங் வலைதளம்' தெரிவித்தது. அதன் பிறகு அந்த சிக்னல் நின்றுவிட்டது. கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோதே விமானம் தன்னுடைய சிக்னலை இழந்தது. அவ்வாறு இருப்பின், எப்படி செல்போன் மூன்று நாள் வரை செயல்பட்டிருக்க முடியும் ? இதுபோன்ற சந்தேகங்களும் எழுந்தன.

தொடர் தேடுதல் வேட்டை

மாயமான இந்த விமானத்தைப் பற்றி வெளியில் தெரிந்தவுடன் அனைத்து நாடுகளும் தேடுதல் பணியை முடுக்கிவிட்டன.  சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், சிங்கப்பூர், ஃபிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மலேசியாவுடன் இணைந்து தேடுகின்றன. இதுக்காக சீனா தன்னிடம் உள்ள  ஹை-ரெசல்யூஷன் சேட்டிலைட்டுகளை இந்த விமானம் தேடுதல் பணிக்காக கொடுத்தது. தென் சீனக் கடல் பகுதியில் 222 கிலோ மீட்டர்  கிழக்கில் உள்ள பகுதியில் கேபிள் போன்ற உதிரிபாகம் கிடைத்ததாக  சீனாவும், அங்கிருந்து 387 கிலோ மீட்டர் தொலைவில் எண்ணெய் படலம் உள்ளதாக வியட்நாம் அரசும் தெரிவித்தது. முடிவில் இவ்விரு பொருள்களும் தொலைந்துபோன விமானத்தைச் சேர்ந்தது இல்லை என்று உறுதியானது.

2015 ஜூலையில் இந்தியப் பெருங்கடலில், பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரீ-யூனியன் தீவில் உள்ள கடற்கரையில் விமானத்தின் இறக்கைப் பகுதி கிடைத்தாக கூறப்பட்டது. இதை மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் அதை உறுதி செய்தார். தொடர்ந்த தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்பட, ஒவ்வொரு நாடாக விலகியது.

மலேசிய அரசு மீது வழக்கு 

காணாமல் போன அந்த விமானத்தில் பயணித்த ஜீ ஜிங் ஹாங்க் என்பவரின் மகன்கள் இருவர் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் கவனக் குறைவாக செயல்பட்ட விமான நிறுவனத்தின் மீதும், மலேசிய விமானப்படை தளபதி மீதும் குற்றம் சாட்டிருந்தனர். மேலும் தங்களுக்கு நஷ்ட ஈடு வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்திருந்தனர். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

2017-ல் ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள், `` நவீன காலகட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போனது வருத்தம்" என்றும் கூறினார். இந்தத் தேடுதல் பணியானது, பெரிய பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும். 1046 நாள்களுக்குப் பிறகு இத்திட்டத்தை ஆஸ்திரேலியா அதிகாரிகள் கைவிட்டனர்.


தனியார் நிறுவனத்துடன்  ஒப்பந்தம் 

நீண்ட இடைவெளிக்குப் (4 ஆண்டுகளுக்கு) பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த 'ஒசன் இன்ஃபினிட்டி' நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டது மலேசியா அரசு. அதன்படி, 90 நாள்களுக்குள் விமானம் தொடர்புடைய கறுப்பு பெட்டியையோ அல்லது எதாவது ஒரு பாகத்தையோ கண்டுபிடித்தால் மலேசிய அரசு அந்நிறுவனத்துக்கு 70 மில்லியன் டாலரை தரவேண்டும் என்று  ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கண்டுபிடிக்காத பட்சத்தில் எந்த ஒரு பணமும் தரப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. அதிநவீன கப்பலுடன் AUV என்ற கருவியை இது பெற்றுள்ளது. இதன் மூலம் 6,000 அடி வரை தெளிவான டேட்டாக்களைப் பெறமுடியும். இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் 25,000 சதுர கிலோமீட்டரில் விழுந்திருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு அங்கும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இதுவரை எதுவும் கிடைக்காததால், கடைசியாக ஓசன் இன்பினிட்டி நிறுவனம் தற்போது இத்திட்டத்தைக் கைவிட்டுள்ளது.

தொடரும் மர்மம்...!

தொலைந்து போன எம் ஹச் 370 விமானமானது எங்காவது விபத்தில் சிக்கியிருந்தால் தடயம் எதாவது கிடைத்திருக்கும், தொலைந்து போன விமானமானது 7 மணி நேரம் செல்லக் கூடிய எரிபொருளைக் கொண்டது, அது என்ன ஆயிற்று? , பைலட் வேண்டுமென்று எதாவது செய்தாரா, வேறு யாரோ கடத்தினார்களா எனப் பல்வேறு மர்மங்கள் என பல்வேறு வாதங்கள் எழுந்தன. ஆனால், இதையெல்லாம், நம்புவதா, இல்லை வேண்டாமா என்றே தெரியவில்லை. தொழில்நுட்பத்தில் மனிதன் எத்தனையோ அடிகள் முன்னேறிவிட்டாலும் கூட, இன்னும்கூட பல்வேறு மர்மங்களுக்கு அவனால் விடை கண்டறிய முடியவில்லை. தற்போது MH 370-ம் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு