Published:Updated:

பெட்ரோல்: `பாபிலோன் தொடங்கி தற்போதுவரை!' - மனிதனுக்குப் பயன்பட்ட வரலாறு! ஒரு பார்வை

பெட்ரோல் gasoline bunk ( pixabay )

கச்சா எண்ணெயைக் கட்டுமானத்துக்கு சிமென்ட் பசைபோலவும், கரையான் அரிக்காமல் தடுக்க மரத்தூண்களில் தடவியும், கப்பல் ஓட்டைகளை அடைக்கவும் பாபிலோனியர்கள் பயன்படுத்தினர்.

பெட்ரோல்: `பாபிலோன் தொடங்கி தற்போதுவரை!' - மனிதனுக்குப் பயன்பட்ட வரலாறு! ஒரு பார்வை

கச்சா எண்ணெயைக் கட்டுமானத்துக்கு சிமென்ட் பசைபோலவும், கரையான் அரிக்காமல் தடுக்க மரத்தூண்களில் தடவியும், கப்பல் ஓட்டைகளை அடைக்கவும் பாபிலோனியர்கள் பயன்படுத்தினர்.

Published:Updated:
பெட்ரோல் gasoline bunk ( pixabay )

``வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்வு. விண்ணை முட்டும் அளவுக்கு, இந்தியாவின் பெட்ரோல் டீசல் விற்பனை. வரலாற்றில் இல்லாத அளவுக்குத் தொடர்ந்து அதிகரிக்கக் காரணம் என்ன? மௌனம் கலைக்குமா மத்திய மாநில அரசுகள்" - இவையெல்லாம் நாள்தோறும் நாம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகப் பார்த்து வருபவை. காரணம், இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதபடி 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுவதுதான். இப்படி வார்த்தைக்கு வார்த்தை "வரலாறு காணாத அளவு..." என குறிப்பிடப்படும் வழக்கம், பெட்ரோல் 50 ரூபாய் தொடங்கி ரூ.70, ரூ.90 என தற்போது 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படும்போதும் `வரலாறு’ என்ற ஒரு விஷயம் மட்டும் ஆழமாகப் பதிக்கப்படுகிறது.

ஆயில் ரிக்
ஆயில் ரிக்

அப்படி என்ன பெட்ரோலின் வரலாறு? வாருங்கள் பெட்ரோலின் சுவாரஸ்யமான வரலாற்றைத் தேடிச் செல்வோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

4,000 ஆண்டுகளுக்கு முன்பு - பாபிலோனியா:

இன்றைய நவீன பெட்ரோலின் ஆரம்பகால வரலாறு என்பது ஒரு நூற்றாண்டு கடந்தது அல்ல; சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக்கொண்டது. பண்டையகால ஏழு அதிசயங்களில் ஒன்றான 'பாபிலோன் தொங்கும் தோட்டம்' அமைந்திருந்த பாபிலோனில் (Babylon) கண்டுபிடிக்கப்பட்டதுதான் பெட்ரோல். இன்றைய இராக் என்று சொல்லப்படும் பாபிலோனின், யூப்ரடீஸ் (Euphrates) நதிக்கரை அருகே, பாபிலோனியர்கள் மிகப்பெரிய கோட்டை ஒன்றைக் கட்டத் திட்டமிட்டிருந்தனர். விண்நோக்கிய பெரிய கட்டடம் என்பதால், அதன் அஸ்திவாரத்தின் ஆழமும் பூமியை நோக்கி நீண்டது. ஆற்றின் கரை என்பதால் உள்ளுர நீர்கூட ஊறலாம். ஆனால், அந்த மண்ணில் ஊறியதோ இதுவரையில் கண்டிராத ஒரு கறுப்பு திரவம். ஆனால், அது செல்வத்தை வாரி இறைக்கும் `கறுப்புத் தங்கம்’ என்பதை அப்போதைய பாபிலோனிய மக்கள் உணர்ந்திருக்கவில்லை. விளைவு, கிடைத்த அந்த கறுப்பு திரவ (Asphalt or Bitumen) கச்சா எண்ணெயைக் கட்டுமானத்துக்கு சிமென்ட் பசைபோலவும், கரையான் அரிக்காமல் தடுக்க மரத்தூண்களில் தடவியும் பயன்படுத்திவந்தனர். பின்னர் அதைக் காய்ச்சியும், வற்றவைத்து உருக்கியும் சிறிது சிறிதாக பயன்பாட்டைப் பெருக்கி கப்பல் கட்டுமானம் மற்றும் அதன் ஓட்டைகளை அடைக்கவும் பயன்படுத்தினார்கள் பாபிலோனியர்கள். அவர்களைத் தொடர்ந்து, மெசபடோமியர்கள் நகைகள், அணிகலன்கள் செய்யவும், எகிப்தியர்கள் பிரமீடு கட்டுமானத்திலும், மம்மிக்கள் என்று சொல்லப்படும் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தவும் பயன்படுத்தத் தொடங்கினர்.

பாபிலோன்
பாபிலோன்

நாளடைவில், இதன் எரியும் தன்மையை அறிந்துகொண்ட பாபிலோனிய மக்கள், தங்கள் வீடுகளுக்கும், வீதிகளுக்கும் வெளிச்சம் கொடுக்கும் தீப்பந்தத்துக்கு எண்ணெயாக மாற்றினர். இந்த வரலாற்றை, கிரேக்க நாட்டின் பழம்பெரும் வரலாற்று அறிஞர்களான `ஹீரோடோடஸ்' (Herodotus), `டியோடோரஸ் சிக்குலஸ்' (Diodorus Siculus) இருவரும் தங்களின் ஆய்வுக் குறிப்புகளில் தெரிவிக்கின்றனர். இப்படித்தான், மண்ணுக்குள் தவழ்ந்துகிடந்த பெட்ரோலின் மூதாதையர்களை, தன் கைகளில் வாரி எடுத்துக்கொண்டான் மனிதன். ஆம், அவர்கள் கண்டுபிடித்தது பெட்ரோலின் மூலப்பொருளான கச்சா எண்ணெயை! அதாவது, கச்சா எண்ணெயின் மாறுபட்ட வடிவமாக திரவ மற்றும் கூழ்ம நிலையில் இருக்கும் நிலக்கீல் (Asphalt). அதன் பின்னர்தான் இந்த கச்சா எண்ணெயை மூலமாக வைத்து, தார் (Tar), மண்ணெண்ணெய் (Kerosene), டீசல் (Diesel), பெட்ரோல் (Petrol) எனப் பல சந்ததிகளை அதாவது, பல்வேறு உப பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக உருவாக்கினான் மனிதன். இந்த வரலாற்றைப் பற்றியும் இடையிடையே சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு - சீனா:

கி.பி. 347-ம் ஆண்டு முதன்முதலில் நவீன முறையில் கச்சா எண்ணெய் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்கள் சீனர்கள். அதாவது, மூங்கில் கம்புகளைத் துளையிட்டு, அதை பூமிக்கடியில் குழாய்களைப்போல பயன்படுத்தி கச்சா எண்ணெயை வெளிக்கொண்டுவந்தனர். கிட்டத்தட்ட 800 அடி ஆழமுள்ள அந்த எண்ணெய்க் கிணறுதான் பண்டைய காலத்தின் முதல் எண்ணெய்க் கிணறாக இருந்திருக்கும் என கருத்து தெரிவிக்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். இப்படி எடுக்கப்பட்ட கச்சா என்ணெயை எரித்து ஆவியாக்கி, அதிலிருந்து உப்பு உற்பத்தி செய்தனர். பின்னர், அந்தக் கச்சா எண்ணெயை வெளிச்சத்துக்கு விளக்கு எண்ணெயாகவும், எரிப்பதற்கும் பயன்படுத்தத் தொடங்கினர்.

சீனா - ரஷ்யா எல்லை
சீனா - ரஷ்யா எல்லை
Map Credit : Jeff Blossom

பின்னர் 7-ம் நூற்றாண்டில் சீனர்களும் ஜப்பானியர்களும் கச்சா எண்ணெயை 'எரியும் தண்ணீர்' (Burning Water) என்று அழைத்தார்கள் என சீன அறிவியலாளர் ஷென் குவோ (Shen Kuo) தனது `Dream Pool Essays’ என்ற புத்தகத்தில் விவரிக்கிறார்.

9-ம் நூற்றாண்டுக்கு பின்பு அஸர்பைஜான் மற்றும் ஐரோப்பா:

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில், பாபிலோனியர்கள் (தற்போதைய இராக்கைச் சேர்ந்தவர்கள்) தங்கள் தலைநகரான பாக்தாத் (Baghdad) முழுவதும், கச்சா எண்ணெயை உருமாற்றி (Asphalt மற்றும் Tar) போக்குவரத்துக்கான சாலைகள் அமைத்தனர். இராக்கின் தாக்கம், சுற்றியுள்ள பிற அரபுநாடுகளிலும் பிரதிபலித்தது. கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பதற்கான ஆர்வத்தை வெகுவாகத் தூண்டியது. அதன் விளைவாக, கி.பி. பத்தாம் நூற்றாண்டில் அஸர்பைஜான் நாட்டின் பாகு (Baku, Azerbaijan) பகுதியில் எங்கும் இல்லாத வகையில் மிக அதிக அளவிலான எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிகழ்வைப் புகழ்பெற்ற வெனிஸ் நகர பயணி, மார்கோ போலோ (Marco Polo) `ஜார்ஜிய எல்லைக்கு அருகே ஒரு நீரூற்று இருக்கிறது. அதிலிருந்து எண்ணெய்கள் ஓடுகின்றன. அவற்றை ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கப்பல்களைக் கொண்டு அள்ளி ஏற்றலாம்" என அஸர்பைஜானின் எண்ணெய் வளத்தைப் பற்றிக் கூறுகிறார்.

``ஜார்ஜிய எல்லைக்கு அருகே ஒரு நீரூற்று இருக்கிறது. அதில் இருந்து எண்ணெய்கள் ஓடுகின்றன. அவற்றை ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கப்பல்களைக் கொண்டு அள்ளி ஏற்றலாம்."
வெனிஸ் நகர பயணி - மார்கோ போலோ
அஸர்பைஜான்
அஸர்பைஜான்
AP | AZERBIJAN'S EMERGENCY MINISTRY PRESS SERVICE

இப்படியாக எண்ணெய் தேடும் படலம் நீண்டு சென்று, பன்னிரண்டாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவிலும், பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமானியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கி.பி. 1745-ல் ரஷ்யாவின் உக்தாவிலும் (Ukhta), பிரான்ஸின் அல்சேவிலும் (Alsace) என அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. (1889-ம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் அஸ்ஸாம் மாநிலத்தில்தான் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது).

இப்படியாக, ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை விளக்கு எரிப்பதற்காகவும் இதர பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டுவந்த கச்சா எண்ணெய், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து புதிய அத்தியாயத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அதற்குக் காரணம் கச்சா எண்ணெயைப் பிரித்தும் அதை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் நிகழ்த்தியதும்தான்.

19-ம் நூற்றாண்டு: புதிய பெட்ரோலிய எரிபொருள்கள் கண்டுபிடிப்பு

1847-ம் ஆண்டு, ஸ்காட்டிஷ் வேதியலாளர் ஜேம்ஸ் யங் (Scottish chemist James Young) என்பவர் பிரிட்டிஷ் நாட்டின் ஆல்ஃபிரெடன் (Alfreton) பகுதியிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் கச்சா எண்ணெய் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதை எடுத்து ஆய்வு செய்தவர், அந்த எண்ணெயிலிருந்து விளக்கு எரிக்கும் திரவம், இயந்திரங்களுக்குப் பயன்படுத்தும் கிரீஸ் போன்றவற்றை உருவாக்கினார். பின்னர் அந்த எண்ணெய்களுக்கு பாராஃபின் எண்ணெய் (Paraffin Oil) எனப் பெயர்வைத்து காப்புரிமையும் (Patent Right) பெற்றார். பின், எட்வர்டு வில்லியம் பின்னி (Edward William Binney) எனும் புவியியலாளருடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கியவர், தனது எண்ணெய்க் கண்டுபிடிப்புகளை விற்பனை செய்யத் தொடங்கினார்.

ஜேம்ஸ் யங்
ஜேம்ஸ் யங்
wiki

மண்ணெண்ணெய் கண்டுபிடிப்பு:

1853-ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த புவியியலாளர் ஆபிரஹாம் பினியோ ஜெஸ்னர் (Abraham Pineo Gesner) என்பவர் நிலக்கரியிலிருந்தும், நிலக்கீலிலிருந்தும் (Asphalt or Bitumen) ஒரு புதிய வகையான எரிபொருளைக் கண்டுபிடித்தார். அந்தப் புதிய கண்டுபிடிப்புதான் நாம் மண்ணெண்ணெய் என்று அழைக்கும் கெரோசின் (Kerosene). ஆபிரகாம் கெஸ்னர், தான் கண்டுபிடித்த எரிபொருளுக்கு `கெரோசின்’ எனப் பெயரிட்டார்.

Crude Oil
Crude Oil

பின், கெரோசின் கேஸ்லைட் (Kerosene gaslight company) எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கி விற்பனை செய்யத் தொடங்கினார். முந்தைய கண்டுபிடிப்புகளைக் காட்டிலும், கெஸ்னர் கண்டுபிடித்த கெரோசின், குறைந்த செலவில் மிக அதிக அளவிலான வெளிச்சத்தைக் கொடுத்ததால், மக்கள் கெரோசின் பயன்பாட்டை நோக்கி நகர்ந்தனர். மண்ணெண்ணெய் உற்பத்திக்காக பல்வேறு இடங்களில் புதிதாக எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டு, கெரோசின் தேவையும் உற்பத்தியும் அதிகரித்தன.

முதல் நவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்:

1859-ம் ஆண்டு, எட்வின் டிரேக் (Edwin Drake) என்பவர், அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா (Pennsylvania) பகுதியில் பூமியைத் தோண்டாமல், கச்சா எண்ணெய் எடுக்கும் நவீன முறையைக் கண்டுபிடித்தார். இவரால் தோண்டப்பட்ட கச்சா எண்ணெய்க் கிணறுதான், உலகின் முதல் நவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாகக் கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 1876-ம் ஆண்டு, நிக்கோலஸ் ஓட்டோ (Nicolaus August Otto) சோதனை முயற்சியாக பெட்ரோலில் இயங்கும் இன்ஜினைக் (Petrol Engine) கண்டுபிடித்தார். அதன் நீட்சியாக, 1879-ம் ஆண்டு கார்ல் பென்ஸ் (Carl Benz) என்பவர், பெட்ரோலில் இன்ஜினில் இயங்கும் காரை (One-cylinder Two-stroke) வெற்றிகரமாக உருவாக்கினார்.

எண்ணெய்
எண்ணெய்
Photo by Robin Sommer on Unsplash

டீசல் கண்டுபிடிப்பு :

1893-ம் ஆண்டு, ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர் ஒருவர், கச்சா எண்ணெயிலிருந்து ஒரு புதிய எரிபொருளைக் கண்டுபிடித்தார். அந்த எரிபொருள் கண்டுபிடிப்புக்குப் பின்னர் இயந்திரவியல் துறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்னர், நிலக்கரியால் இயங்கும் இயந்திரங்களைக் கொண்டு (Engine) தான் அனைத்து தொழிற்சாலைகளும் இயங்கிவந்தன. அதிக அளவு நச்சுப்புகையை வெளியிட்டு, பெரும் பொருட்செலவும், மனித உழைப்பும் கொண்டு இயங்கிவந்த தொழில்நுட்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அமைந்தது அவரின் கண்டுபிடிப்பு.

ருடால்ஃப் டீசல்
ருடால்ஃப் டீசல்
wiki

முதலில், நிலக்கரி கொண்டு இயங்கும் பெரிய இயந்திரத்துக்கு மாற்றாக, சிறிய இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அந்த இயந்திரத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்த அவர் கண்டுபிடித்ததுதான் டீசல். அதைக் கண்டுபிடித்தவரின் பெயர் ருடால்ஃப் டீசல் (Rudolf Diesel). ஆம், தான் கண்டுபிடித்த நவீன இயந்திரத்துக்கு டீசல் (Diesel Engine) எனவும், புதிய எரிபொருளுக்கு டீசல் (Diesel) எனவும் தன் பெயரையே வைத்துக்கொண்டார் ருடால்ஃப் டீசல்.

20-ம் நூற்றாண்டு முதல் தற்போது வரை:

இப்படியாக கச்சா எண்ணெயிலிருந்து தோற்றம் பெற்ற பெட்ரோலியப் பொருள்கள், 20-ம் நூற்றாண்டிலிருந்து தற்போது வரை உலக வணிகம் மற்றும் உலக அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக விளங்குகின்றன. BP, Shell என பன்னாட்டு பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிறுவனங்கள், அதன் நாடுகள் மற்றும் OPEC போன்ற பெட்ரோலிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள், பெட்ரோல் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் அதன் வரிகள்... எனத் தற்கால பெட்ரோலின் வரலாறு எழுதப்பட்டுவருகிறது.

Oil Rig
Oil Rig

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி முதல் அழிவு தரும் போர்கள் வரை பெட்ரோலின் எல்லையும் வரலாறும் இன்றளவும் நீண்டுகொண்டேதான் செல்கின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism