Published:Updated:

குரங்குகள் பற்றாக்குறையால் தடைப்பட்ட தடுப்பூசி சோதனை... என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

குரங்கு
குரங்கு ( மாதிரி புகைப்படம் )

அமெரிக்காவில் சோதனை குரங்குகளின் பற்றாக்குறையால் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரிலிருந்து கடந்த ஜனவரி மாதம் முதல் பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது மொத்த உலக மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாகிவிட்டது. அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கையை விடுத்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 8 மாதங்களாக உலகம் முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அனைத்தும் சோதனை நிலையிலேயே உள்ளன. ரஷ்யா முழுமையாக மருந்து கண்டுபிடித்து வெளியிட்டிருப்பதாகக் கூறினாலும், அதன் மீது பல்வேறு சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான நாடுகள் 2021-ல் கொரோனாவுக்கான மருந்து வெளியிடப்படும் என அறிவித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் குரங்குகள் பற்றாக்குறையால் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rhesus வகை குரங்குகள்தாm ஆராய்ச்சிக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த வகை குரங்குகள் முற்றிலும் காணாமல் போய்விட்டதாகவும் அவற்றை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பயோக்வால் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். வைரஸ் பரவலால் சோதனைக்காக இந்த வகைக் குரங்குகளின் தேவை அதிகரித்ததோடு சீனாவிலிருந்து வரும் குரங்குகளின் இறக்குமதி எண்ணிக்கையும் குறைந்துவிட்டதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு
ஆய்வு
மாதிரி புகைப்படம்

கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 35,000 குரங்குகளில் 60% சீனாவிலிருந்து வந்தவை. Rhesus வகை குரங்குகளை எப்போதும் பயோ சேஃப்டி லெவல் 3 எனப்படும் ஆய்வகங்களில் மட்டுமே வைக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவில் இந்த ஆய்வகங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், தற்போது கைவசம் உள்ள குரங்குகளைக் கொரோனா ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு