Published:Updated:

'நீல நிறத்தில் ஒளிர்ந்த பனி', ஆச்சரியத்தை ஏற்படுத்திய நுண்ணுயிரிகள்!

நீல நிறத்தில் ஒளிர்ந்த பனி
News
நீல நிறத்தில் ஒளிர்ந்த பனி

சென்னை கடற்கரை கூட இரவு நேரத்தில் நீல நிறத்தில் ஒரு முறை ஒளிர்ந்தது. அது நாக்டிலூகா எனப்படும் ஒரு வகை பாசி அல்லது ஆஸ்ட்ராகாட் எனப்படும் ஒரு வகை நுண்ணுயிரியால் நிகழ்ந்திருக்கலாம் என அப்போது ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

நாம் 'இரவில் ஒளிரும் தண்ணீர்' குறித்து அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். சில வருடங்களுக்கு முன்பு சென்னை கடற்கரை கூட இரவு நேரத்தில் ஒளிர்ந்தது. அது நாக்டிலூகா எனப்படும் ஒரு வகை பாசி அல்லது ஆஸ்ட்ராகாட் எனப்படும் ஒரு வகை நுண்ணுயிரியால் நிகழ்ந்திருக்கலாம் என அப்போது ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். அதுபோலவே ரஷ்யாவில் பனியானது நீல நிறத்தில் ஒளிர்ந்த நிகழ்வு ஆராய்ச்சியாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல்
சென்னையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல்

ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் 'வெள்ளைக் கடல்' (White sea) என்று அழைக்கப்படும் கடற்கரையை ஒட்டி ஒரு உயிரியல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து வரும் உயிரியலாளரான வெரா எமிலியானென்கோ (Vera Emelianenko) என்ற ஆராய்ச்சியாளர் தன் நாய்களுடனும் மற்றொரு ஆராய்ச்சியாளரின் மகனுமான மிக்கேய்ல் நெரிடின் ( Mikhail Neretin) என்பவரோடு கடற்கரையை ஒட்டி நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அவர்கள் நடந்து சென்ற தடத்தைக் கவனித்த போது பனியின் லேசான நீல நிறத்தில் வெளிச்சமாக இருப்பது போல் தெரிந்திருக்கிறது. இதனைப் பார்த்துப் பிரமித்து எமிலியானென்கோ அந்த ஒளிர்ந்த பனியைக் கையளவு எடுத்துக் கொண்டு ஆராய்ச்சி நிலையத்திற்கு விரைந்திருக்கிறார். கையில் இருந்த பனியைச் சற்று இறுக்கமாகப் பிடிக்க, அது இன்னும் நன்றாக ஒளிர்ந்திருக்கிறது. "அதனைப் பார்த்த போது இரவில் ஒளிரும் கிறிஸ்துமஸ் விளக்குகளைப் போல இருந்தது" என அந்த நிகழ்வு குறித்துத் தெரிவித்திருக்கிறார் எமிலியா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
White sea
White sea

நாம் 'இரவில் ஒளிரும் தண்ணீர்' குறித்து அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். சில வருடங்களுக்கு முன்பு சென்னை கடற்கரை கூட இரவு நேரத்தில் ஒளிர்ந்தது. அது நாக்டிலூகா எனப்படும் ஒரு வகை பாசி அல்லது ஆஸ்ட்ராகாட் எனப்படும் ஒரு வகை நுண்ணுயிரியால் நிகழ்ந்திருக்கலாம் என அப்போது ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். அதுபோலவே ரஷ்யாவில் பனியானது நீல நிறத்தில் ஒளிர்ந்த நிகழ்வு ஆராய்ச்சியாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.மறுநாள், ஏன் அந்தப் பனி ஒளிர்ந்தது எனக் கண்டறியும் நோக்கோடு, அதனை மைக்ரோஸ்கோப்பில் வைத்து ஆராய்ந்திருக்கிறார் எமிலியா. கொஞ்சம் கொஞ்சமாகப் பனி உருகி அதில் இருந்த கோபெபாட்ஸ் (Copepods) என்ற நுண்ணுயிரி மைக்ரோஸ்கோப்பின் வழி தெரிந்திருக்கிறது. அதனைத் தொட்டபோது லேசாக நீல நிற ஒலியை அந்த நுண்ணுயிரி உமிழ்ந்திருக்கிறது. இது வரை ஆர்டிக் பகுதியில் இப்படியான ஒளிரும் நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கும். ஆனால், அவற்றிற்கான காரணம் என்னவென்பதை ஆதாரப்பூர்வமாக இதுவரை யாரும் ஆவணப்படுத்தியதில்லை. ஆர்டிக் பகுதியில் பனி ஏன் ஒளிர்ந்தது எனக் கண்டறிந்து ஆவணப்படுத்துவது இது தான் முதல் முறை. சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலும் இது போல நிகழ்வு நடந்தது என மேலே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா. அப்போதும், இது தான் காரணம் என ஆராய்ந்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது காரணமாக இருக்கலாம் என யூகமாக மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இவற்றை 'Bugs of the sea' எனக் குறிப்பிடும் ஸ்டீவன் ஹாடாக் என்ற கடல் உயிரியலாளர் இவற்றைப் பற்றிக் கூறுப் போது, "இந்தக் குறிப்பிட்ட கோபெபாடானது 'Metridia longa' எனப் பெயர் கொண்டது. இவை மிகவும் சிறியதாக அளவில் அதிகமாக இருக்கும். இவற்றால் கடலின் நீரோட்டத்தை எதிர்த்து நீந்த முடியாது. கனடாவில் இருந்து ஆர்டிக் வரை கடலின் நீரோட்டத்தால் அடித்து வரப்பட்டிருக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிகழ்வு குறித்து ரஷ்யாவைச் சேர்ந்த அறிவியல் உயிரியல் ஆராய்ச்சியாளர் செனியா கோசோபகோவா (Ksenia kosobakova) கூறுகையில், "கரையில் இந்த கோபெபாட்களுக்கு எந்த வேலையும் இல்லை. இவை பொதுவாகக் கடற்கரையில் இருந்து தூரமாக, 80 முதல் 300 அடி வரையிலான ஆழத்தில் தான் இருக்கும். இரவில் மட்டும் கடல் மட்டத்திற்கு அடியில் சில அடிகள் வரை மேலே வரும். இந்த டிசம்பர் மாதம் ஆர்டிக் கடலில் அலைகளின் வேகம் மிக அதிகமாகவே இருந்தது. குறிப்பாக டிசம்பர் 1 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 16 ஆம் தேதிகளில் அதிகமாகவே இருந்தது. அந்த சீற்றத்தைத் தாங்க முடியாத இந்த கோபெபாட்கள் கரைக்கு இழுத்துவரப்பட்டிருக்கலாம்." என்றார்.

Metridia longa என்ற நுண்ணுயிரி
Metridia longa என்ற நுண்ணுயிரி

இப்படி உயிரினங்களிடமிருந்து வெளிச்சம் வருவது 'பயோலுமினெசன்ஸ்' (Bioluminescence) என அழைக்கப்படுகிறது. இப்படி ஒளிர்வதற்கு அதன் உடம்பில் ஏற்படும் இரசாயன எதிர்வினைகளே காரணம். அதற்கு இந்த உயிரினங்களின் உடம்பில் இருக்கும் 'லூசிஃபெரின்' (Luciferin) என்னும் ஒருவகை இரசாயனமே காரணம். இந்த ஒளிரும் தன்மையைப் பிற உயிரினங்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள இவை பயன்படுத்தப்படுகிறது. ஆர்டிக்கில் ஒதுங்கிய இந்த நுண்ணுயிரிகள் அங்கு நடந்து சென்றவர்களின் காலடிகளால் தொந்தரவு செய்யப்பட்டதால் ஒளியை உமிழ்ந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ரஷ்யாவின் இந்த வெள்ளைக் கடலின் கடற்கரையில் கிட்டத்தட்ட 80 வருடங்களாக இந்த உயிரியல் ஆய்வகம் செயல்பட்டு வந்தாலும் அதன் அருகிலேயே இப்படி ஒளிரும் பனி கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.