Published:Updated:

`ரீசார்ஜபிள் உலகை உருவாக்கியவர்கள்'- வேதியியலுக்கான நோபல் பரிசை தட்டிச் சென்ற மூவர்!

ஜான்.B.குட் எனப், M.ஸ்டான்லி விட்டிங் காம், அஹிரா யோஷிநோ
ஜான்.B.குட் எனப், M.ஸ்டான்லி விட்டிங் காம், அஹிரா யோஷிநோ

ஜான்.B.குட் எனப், M.ஸ்டான்லி விட்டிங் காம், அஹிரா யோஷிநோ ஆகியோர் இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசைப் பெறுகின்றனர்.

ஆல்பிரட் நோபல் வேதியியலாளர், பொறியாளர், புத்தாக்குனர் மற்றும் ஆயுத தயாரிப்பாளர், என்று பன்முகத் திறன் கொண்டவர். அவர் தன்னுடைய உயிலில், தன் சொத்தின் பெரும் பகுதியை, பல துறைகளில் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பரிசு வழங்க ஏற்பாடு செய்திருந்தார். 1901 முதல் இன்று வரை, 118 ஆண்டுகளாக ஆல்பிரட் நோபல் நினைவாக அவர் பிறந்த இடமான ஸ்வீடனில் உள்ள stockholm-ல் அவர் பெயரிலேயே நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான்.B.குட் எனப், M.ஸ்டான்லி விட்டிங் காம், அஹிரா யோஷிநோ ஆகியோர் இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை பெறுகின்றனர்.

நோபல் பரிசு
நோபல் பரிசு

லித்தியம் அயான் குறித்த கண்டுபிடிப்புக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. லித்தியம் அயானால் உருவாக்கப்பட்ட மின்கலன்கள் தான் நாம் உபயோகிக்கும் அலைபேசி, மடிக்கணினி, முதல் மின்சார கார் வரை. குறைந்த எடை கொண்டவை, ரீசார்ஜ் பண்ணக் கூடியவை, சக்தி வாய்ந்தவை என்று பல சிறப்புகள் இவற்றுக்கு உண்டு. `ரீசார்ஜபிள் உலகை உருவாக்கி உள்ளார்கள்' என்று நோபல் பரிசுக் குழு மூவருக்கும் புகழாரம் சூட்டி உள்ளது. மேலும், தகவல் பரிமாற, படிக்க, வேலை செய்ய, பாட்டுக் கேட்க, அறிவைத் தேட என்று நாம் உபயோகிக்கும் அனைத்து போர்ட்டபிள் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கும் இவைதான் உயிர் கொடுக்கின்றன என்றும் கூறினர். இருதயத்தில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் செயல்படுவது லித்தியம் அயான் பேட்டரியால் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மின்னனு உபகரணங்களுக்கு மட்டுமல்ல, மனிதனுக்கும் உயிர் கொடுப்பது லித்தியம் அயான் பேட்டரிகளே.

`கோள்கள், பேரண்டம் குறித்த ஆய்வு' - இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூவர்

யூ.எஸ்.ஏ.வில் யூனிவர்சிட்டி ஆஃப் டெக்ஸாஸ்ஸைச் சேர்ந்த 97 வயதான ஜான்.B. குட்எனப் ,118 வருட வரலாற்றிலேயே நோபல் பரிசு பெறும் வயதான நபர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகிறார். இவர் இன்றும் தினமும் ஆராய்ச்சிக் கூடத்திற்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால் லித்தியம் அயான் பேட்டரியின் திறனை இருமடங்காக அவர் மாற்றியுள்ளார். M. ஸ்டான்லி விட்டிங் காம் அமெரிக்காவைச் சேர்ந்த இவர் லித்தியத்தின் அதிக விசையைப் பயன்படுத்தி, அதன் வெளி எலக்ட்டிரானை வெளிக் கொண்டுவர முடியும் என்று கண்டுபிடித்துள்ளார்.

`ரீசார்ஜபிள் உலகை உருவாக்கியவர்கள்'- வேதியியலுக்கான நோபல் பரிசை தட்டிச் சென்ற மூவர்!

ஜப்பானைச் சேர்ந்த அக்கிரா யோக்ஷிநோ, பாட்டரிகள் தயாரிப்பில், தூய லித்தியத்தின் பயன்பாட்டைத் தவிர்த்து, லித்தியம் அயானின் மூலமே தயாரிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார். தூய லித்தியத்தை விட லித்தியம் அயான்ஸ் பாதுகாப்பானது. இதனால்தான் குறைந்த எடை கொண்ட பேட்டரிகளைத் தயாரிக்க முடிந்தது. லித்தியம் அயான் பேட்டரி மூலம் புதுப்பிக்கத்தக்க வளங்களான சூரிய ஒளி மற்றும் காற்றிலிருந்து வரும் மின்சாரத்தையும் சேமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசாக 9 மில்லியன் குரோணார், இந்திய மதிப்பில் ரூ.6,43,15,108 இவர்கள் மூன்று பேருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. லித்தியம் அயான்ஸ் கண்டுபிடிப்பின் மூலம் மானுட வாழ்க்கைக்குப் பல நன்மைகள் செய்திருக்கும் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்.

``மூன்று ஆராய்ச்சியாளர்கள்.. வெவ்வேறு இடங்கள்.. ஒரே தலைப்பு!' - ஆக்சிஜனும் நோபல் பரிசும் #NobelPrize
அடுத்த கட்டுரைக்கு