Published:Updated:

பனிக்கண்டமான அன்டார்ட்டிகாவில் 77 புதிய உயிரிகள்... எப்படிக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்?

அன்டார்ட்டிகா
News
அன்டார்ட்டிகா

ஒருமுறை ஆய்வு செய்ததிலேயே 77 உயிரிகள் காணப்படுகின்றன என்றால், நாம் நினைத்ததை விட இந்த இடத்தில் உயிரிப் பல்வகைமை அதிகம் என்றுதானே பொருள்?! வானம் பார்த்த கடலிலிருந்து தூரத்தில் இருந்தாலும் இத்தனை உயிரிகள் இருப்பது ஆச்சரியம்தான்.

அன்டார்ட்டிகா பற்றிய பல கட்டுரைகளில் 'பனிப்பாலைவனம்' என்ற சொல் இருப்பதைப் பார்க்கலாம். சராசரியான உயிரினங்கள் வாழ முடியாத தட்பவெப்ப நிலை, மோசமான பனிப்புயல்கள், மழை இல்லாத சூழல் ஆகியவற்றை இதற்குக் காரணமாக சொல்லலாம்.

ஆனால், இந்தப் பனிப்பாலைவனத்தில், பனிப்பாறைகளுக்குக் கீழே உள்ள கடற்பகுதியில் 77 உயிரிகள் கண்டறியப்பட்டுள்ளது விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் அன்டார்ட்டிக் சொசைட்டி, ஜெர்மனியின் ஆல்ஃப்ரெட் வாக்னர் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு குழுவாக அன்டார்ட்டிகாவில் உள்ள வெடல் கடலில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் சென்ற மாத இறுதியில் (டிசம்பர் 2021) வெளியிடப்பட்டுள்ளன.

அன்டார்ட்டிகா புதிய உயிரிகள்
அன்டார்ட்டிகா புதிய உயிரிகள்
Image: Dave Barnes, BAS

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இங்கு காணப்படும் எல்க்ஸ்ட்ராம் என்ற பனிப்பாறை மிகவும் தடிமனானது. அது கடலுக்கு மேல் உள்ள பனிப்பாறை என்பதால், அந்தப் பாறையைக் குடைந்தால்தான் கடல்நீரை அடைந்து அதில் உள்ள உயிரிகளின் மாதிரிகளை சேகரிக்க முடியும். சளைக்காமல் யோசித்த விஞ்ஞானிகள், வெந்நீரின் உதவியோடு 200 மீட்டர் தடிமனான எல்க்ஸ்ட்ராம் பனிப்பாறையைக் குடைந்திருக்கிறார்கள். ஃப்ரீசரில் வைக்கப்பட்ட கெட்டிப்பட்ட வெண்ணெய் அல்லது நெய்யிலிருந்துகொஞ்சம் எடுக்கவேண்டுமானால், சூடான ஒரு ஸ்பூனால் சுரண்டத் தொடங்கினால், அந்த சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய் உருகிவிடும், இல்லையா? அந்த அறிவியலைப் பயன்படுத்தி பனிப்பாறையில் விஞ்ஞானிகள் துளையிட்டிருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இந்தத் துளைகளின்மூலம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில்தான் இப்போது 77 வகை உயிரிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஓர் ஆய்வில் 77 வகை உயிரிகள் என்பது மிகப்பெரிய எண்ணிக்கைதான். ஆனால் இந்த எண்ணிக்கை மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களாலும் இந்த ஆய்வு முடிவுகள் முக்கியமானவை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பனிப்பாறைகளுக்குக் கீழே வசிக்கும் உயிரினங்கள் பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் அவை எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதுபற்றி அனுமானமாக சில கருதுகோள்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது, சூரிய ஒளியிலிருந்தும் வானத்தைப் பார்த்த கடற்பகுதியிலிருந்தும் தள்ளிப் போகப் போக, பனிப்பாறைகளுக்குக் கீழ் உள்ள உயிரினங்கள் குறையும் என்பதுதான். சூரிய வெளிச்சம் இல்லாவிட்டால் நுண்பாசிகள் வளராது, நுண்பாசிகள் இல்லாத கடலடி உணவுச்சங்கிலிகள் குறைவு, அப்படியே இருந்தாலும் அந்தச் சூழலில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உயிரினங்கள் வாழும் என்ற அறிவியல் புரிதலின் அடிப்படையில் இந்தக் கருதுகோள் உருவாக்கப்பட்டுள்ளது.

அன்டார்ட்டிகா
அன்டார்ட்டிகா

விஞ்ஞானிகளின் ஆச்சர்யத்துக்குக் காரணம் இதுதான் - இந்தக் கண்டுபிடிப்பு அந்தக் கருதுகோளை அடித்து உடைத்திருக்கிறது. ஒருமுறை ஆய்வு செய்ததிலேயே 77 உயிரிகள் காணப்படுகின்றன என்றால், நாம் நினைத்ததை விட இந்த இடத்தில் உயிரிப் பல்வகைமை அதிகம் என்றுதானே பொருள்?! வானம் பார்த்த கடலிலிருந்து தூரத்தில் இருந்தாலும் இத்தனை உயிரிகள் இருப்பது ஆச்சரியம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த உயிரிகள் இன்னொரு வியப்பையும் தந்திருக்கின்றன - பொதுவாக பனிப்பாறைகளுக்குக் கீழே வசிக்கும் கடல் உயிரிகள், இறந்த உடல்களைத் தின்னும் உயிரிகளாகவோ, ஒன்றையொன்று கொன்று தின்னும் ஊன் உண்ணிகளாகவோ இருப்பதுதான் வழக்கம். ஆனால் சூரிய ஒளி படும் கடலில் இருந்து குறைந்தது 3 முதல் 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தப் பகுதியில், விஞ்ஞானிகள் பல்வேறு பாசி உண்ணிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்! பாசி உண்ணும் விலங்குகள் இங்கு செழித்து வளர்கின்றன என்றால், எங்கிருந்தோ பாசிகளைக் கொண்ட நீரோட்டம் வந்து சேர்கிறது என்று கூறும் விஞ்ஞானிகள், அன்டார்ட்டிகாவின் கடல் நீரோட்டம் பற்றிய புரிதலிலும் இந்த ஆராய்ச்சி ஒரு புதிய கதவைத் திறந்திருக்கிறது என்கிறார்கள்.

அன்டார்ட்டிகா
அன்டார்ட்டிகா

"இந்த கடற்பகுதியில் உள்ள இறந்துபோன விலங்குகளின் உடல்களைக் கார்பன் டேட்டிங் செய்தபோது, அவற்றின் சராசரி வயது 5800 என்று தெரிய வந்திருக்கிறது. ஆக, இந்த இடத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளாகப் பல விலங்குகள் செழித்தபடி வளர்ந்திருக்கின்றன" என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் ஆய்வில் பங்கேற்ற விஞ்ஞானி.

ப்ரையோசோவன் என்ற ஒருவகை பாசி விலங்கு, செர்புலிட் புழுக்ககள் உள்ளிட்ட 77 உயிரிகள் இப்போது அன்டார்ட்டிகாவின் பல்லுயிர்ப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் தனித்திறமைகள் என்ன, இவை எவ்வாறு பனிப்பாறைக்குக் கீழே மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் குளிரில்கூட தாக்குப் பிடிக்கின்றன என்பது போகப் போகத்தான் தெரியும்.

காலநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகிவரும் பின்னணியில் இந்த ஆராய்ச்சி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.