Published:Updated:

பூமியை நோக்கி வந்த சிறுகோள்.. தடுத்து அனுப்பிய நாசாவின் DART விண்கலம்!

Dimorphos என்ற சிறுகோள்

இந்த விண்கல் 2500 அடி அகலம் கொண்ட டிடிமோஸ் என்ற சிறுகோள் ஒன்றை சுற்றி வந்தது. செப்டம்பர் 26 அன்று பூமியை நோக்கி, Dimorphos என்ற சிறுகோள் வந்து கொண்டிருந்தது. சரியாக இரவு 7:14 மணிக்கு நாசாவின் விண்கலமான DART ஆனது Dimorphos என்ற அந்த சிறுகோளின் இயக்கத்தை மாற்றியது.

பூமியை நோக்கி வந்த சிறுகோள்.. தடுத்து அனுப்பிய நாசாவின் DART விண்கலம்!

இந்த விண்கல் 2500 அடி அகலம் கொண்ட டிடிமோஸ் என்ற சிறுகோள் ஒன்றை சுற்றி வந்தது. செப்டம்பர் 26 அன்று பூமியை நோக்கி, Dimorphos என்ற சிறுகோள் வந்து கொண்டிருந்தது. சரியாக இரவு 7:14 மணிக்கு நாசாவின் விண்கலமான DART ஆனது Dimorphos என்ற அந்த சிறுகோளின் இயக்கத்தை மாற்றியது.

Published:Updated:
Dimorphos என்ற சிறுகோள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு கடந்த ஆண்டு அனுப்பி இருந்தது. பூமியை சுற்றி வரும் எதிர்கால அச்சுறுத்தல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருந்தது. கிரக பாதுகாப்புக்கான அதன் பணியை நிர்வகிக்க 'கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் (பிடிசிஓ)' ஒன்றை நாசா நிறுவி இருந்தது.

இந்த விண்கலத்தை ஏவுவதன் நோக்கம் விண்வெளியில் சுற்றும் சிறுகோள் ஒன்றை தாக்கி அதன் பாதையை மாற்றுவதே ஆகும். இந்த பணியின் பெயர் இரட்டை சிறுகோள் திசைமாற்ற சோதனை (Double Asteroid Redirection Test - DART) என்று நாசா தெரிவித்திருந்தது.

விண்வெளியில் சுற்றிவரும் டிமோர்பாஸ் என்ற குறுங்கோள் சுமார் 525 அடி அளவிலானது. இந்த விண்கல் 2500 அடி அகலம் கொண்ட டிடிமோஸ் என்ற சிறுகோள் ஒன்றை சுற்றி வந்தது. டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோள் மீது இந்த விண்கலம் மணிக்கு 24,000 கிமீ வேகத்தில் மோதும். பூமியை சிறுகோள்கள் தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் வகையில், நாசாவின் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த டிடிமோஸ் பைனரி சிறுகோள் பூமி மீது மோதுவதை தடுக்க அதை திசைதிருப்ப, நாசாவால் கடந்த மாதம் 26ம் தேதி DART விண்கலம் ஏவப்பட்டது.

கடந்த செப்டம்பர் 26 அன்று பூமியை நோக்கி, Dimorphos என்ற சிறுகோள் வந்து கொண்டிருந்த போது, சரியாக இரவு 7:14 மணிக்கு நாசாவின் விண்கலமான DART ஆனது Dimorphos என்ற அந்த விண்கலம் பூமி மீது மோத வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டது, அதன்படி சிறுகோள் மீது வெற்றிகரமாக மோதியது. அந்த சிறுகோளின் இயக்கத்தை மாற்றியது.

இதனால் அந்த சிறுகோளின் பயண திசை வெற்றிகரமாக திசை திருப்பப்பட்டதாகவும், பூமிக்கும் ஏற்படவிருந்த ஆபத்து முறியடிக்கப்பட்டதாகவும் நாசா விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

அந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் லிசியாகியூப் எனப்படும் சிறிய செயற்கைக்கோள் ஒன்று, குறுங்கோளில் இருந்து 25 முதல் 50 மைல்களுக்குள் சில நிமிடங்களில் பறக்கும். அப்போது இந்த விபத்தினால் உண்டாகும் சேதங்கள் மற்றும் மாற்றங்கள் ஆகியவற்றை படம் பிடித்துக்காட்டும். விண்வெளியில் வான் பொருளின் சுற்றுப்பாதையை முதன்முறையாக மாற்றியமைத்து சாதனை படைத்தது நாசா. இந்த சாதனை வீடியோவை நாசா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.