Published:Updated:

Nobel Prize 2022: வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தெரியுமா?

பேரி ஷார்ப்லஸ், மார்டென் மெல்டா, பெர்டோசி

சர்வதேச அளவில் வேதியியல் துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 3ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முதல்நாள் (அக்டோபர் 3) 2022-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மரபியல் நிபுணரான ஸ்வாண்டே பாபோவுக்கு வழங்கப்பட்டது. இரண்டவாது நாளான நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டின் அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜூன் எப் கினாசர் மற்றும் ஆஸ்திரியாவின் அண்டன் ஸிலிங்கர் ஆகிய மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

பேரி ஷார்ப்லஸ், மார்டென் மெல்டா, பெர்டோசி
பேரி ஷார்ப்லஸ், மார்டென் மெல்டா, பெர்டோசி

அந்த வகையில் மூன்றாவது நாளான இன்று (அக்டோபர் 5ம் தேதி) வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோசி, டென்மார்க்கின் மார்டென் மெல்டால் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரி ஆகியவற்றின் வளர்ச்சிக்காகப் பணியாற்றியதற்காக இந்தப் பரிசை வென்றுள்ளனர்.

இதையடுத்து நாளை அக்டோபர் 6ம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது. அதைத் தெடர்ந்து அக்டோபர் 7ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், அக்டோபர் 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்படவுள்ளன.