Published:Updated:

Tesla: நூறு வருடங்கள் நீடிக்கக்கூடிய பேட்டரிகள்; டெஸ்லா டீமின் புதிய கண்டுபிடிப்பு!

டெஸ்லா

குறிப்பிட்ட வெப்பநிலையில் தொடர்ந்து சார்ஜ் ஏற்றும்போது இந்தப் பேட்டரிகளின் வாழ்நாள் 100 வருடங்கள் வரை நீடிக்குமாம்!

Tesla: நூறு வருடங்கள் நீடிக்கக்கூடிய பேட்டரிகள்; டெஸ்லா டீமின் புதிய கண்டுபிடிப்பு!

குறிப்பிட்ட வெப்பநிலையில் தொடர்ந்து சார்ஜ் ஏற்றும்போது இந்தப் பேட்டரிகளின் வாழ்நாள் 100 வருடங்கள் வரை நீடிக்குமாம்!

Published:Updated:
டெஸ்லா

எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் ஆட்டோமொபைலின் எதிர்காலமாக மாறி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் திறனை அதிகரிக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள பேட்டரி வடிவமைப்பு நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியது.

100 வருடங்கள் உழைக்கக் கூடிய பேட்டரிக்கான வடிவமைப்பை டெஸ்லா நிறுவனமும், பேட்டரி வடிவமைப்பில் நிபுணரான ஜெப் டானும் (Jeff Dahn) இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்தப் பேட்டரியின் வடிவமைப்பு குறித்து ஆராய்ச்சிக் கட்டுரையும் வெளியாகியுள்ளது.

கனடாவில் உள்ள டல்ஹவுசி பல்கலைகழகத்தில் (Dalhousie University) பணிபுரிந்து வரும் ஜெப், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் லித்தியம்-ஐயன் பேட்டரிகள் வடிவமைப்பில் ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டு வருபவர். இவரின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த, டெஸ்லா அமைத்த அட்வான்ஸ்ட் பேட்டரி ரிஸர்ச் பிரிவு கனடாவில் செயல்பட்டு வருகிறது.

ஜெப் டான்
ஜெப் டான்

இவர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பேட்டரி வடிவமைப்பில் நிக்கல் கலவை உபயோகிப்பதன் வழியாக பேட்டரியின் ஆற்றலையும் நீடிக்கக் கூடிய வாழ்நாளையும் அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வெப்பநிலையில் தொடர்ந்து சார்ஜ் ஏற்றும்போது, இந்தப் பேட்டரிகளின் வாழ்நாள் 100 வருடங்கள் வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேட்டரியின் ஆற்றல் அதிகரிக்கும்போது குறைவான அடர்த்தியில் அதிக தூரம் காரை இயக்குவதற்கான சாத்தியம் உண்டாகும்.

இதற்கு முந்தைய நிக்கல் பேட்டரிகளில் கோபால்ட் என்கிற தனிமம் உபயோகிக்கப்பட்டது. ஏற்கெனவே கோபால்ட் தனிமம் தீர்ந்து வருகிற நிலையில், அதனைச் சார்ந்து இருப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் கோபால்ட் இல்லாமலேயே அதற்கு இணையான அல்லது குறைந்த திறனோடு இந்த நிக்கல் கலவையை அடிப்படையாகக் கொண்ட பேட்டரிகளை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் டெஸ்லா ஆராச்சியாளர்கள். பேட்டரி துறையில் நிச்சயம் இது ஒரு புதிய பரிணாமம். 2026 வரை ஜெப் உடன் டெஸ்லாவின் ஆராய்ச்சிகள் தொடர இருக்கின்றன எனத் தெரிவிக்கிறது டெஸ்லா நிறுவனம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism