Published:Updated:

மருத்துவத்திற்கான நோபல் பரிசு: அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ் (David Julius) மற்றும் ஆர்டம் பட்டாபுடியான் (Ardem Patapoutian) ஆகிய இருவர், இந்த வருடம் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1901-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய ஐந்து துறைகளின் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2021-ம் வருடத்திற்கான நோபல் பரிசுகளில் மருத்துவத் துறைக்கான (Medicine or Physiology) பரிசை இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் பகிர்ந்து பெற்றுக்கொள்கின்றனர்.

Nobel Prize
Nobel Prize
AP Photo
`ஹெச்.ஐ.வி-யைவிடவும் ஆபத்தான வைரஸ்!' ஹெப்படைட்டிஸ் சி ஆராய்ச்சி ஏன் கொண்டாடப்படுகிறது?

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ் (David Julius) மற்றும் ஆர்டம் பட்டாபுடியான் (Ardem Patapoutian) ஆகிய இருவர்தான், இந்த வருடம் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறுகிறார்கள்.

வெப்பம், குளிர் மற்றும் இயந்திர சக்தி எவ்வாறு நம் உடலின் நரம்பு மண்டலத்தில் உணர்ச்சித் தூண்டலை ஏற்படுத்துகிறது என்பது குறித்த டேவிட் மற்றும் ஆர்டமின் ஆராய்ச்சி, வலி நிவாரணி மருந்துகள் உருவாக்கத்தில் புதிய பாதையைக் காட்டும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். வெப்பநிலை மற்றும் தொடுதல் மூலமாக உடலில் நடக்கும் மாற்றங்களை, உடலை தொடாமல் அறியும் உணரிகளைக் கண்டுபிடித்ததற்காக இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பரிசை பெறுகின்றனர் .

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நோபல் பரிசு குழுவினர், ``இவர்கள் கண்டுபிடித்துள்ள உணரிகள், உடலில் தொடுதல், வெப்பநிலை ஆகியவற்றின் போது நரம்பு மண்டலம் எவ்வாறு தூண்டப்பட்டு, செயல்பட ஆரம்பிக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவும். கூடவே இந்தக் கண்டுபிடிப்பை, நாள்பட்ட வலிகள் உட்பட பல பரவலான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ள முடியும்'' எனக் கூறியுள்ளனர்.

Nobel Prize
Nobel Prize
AP Photo
நோபல் பரிசு: ஹெப்படைட்டிஸ் சி வைரஸைக் கண்டறிந்த மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு கௌரவம்!

நோபல் பரிசுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்பட்டு வரும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படுகிறது. முன்னதாக, 2020-ம் வருடம் மருத்துவத்துக்கான் நோபல் பரிசை, சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் சி (Hepatitis C) என்ற வைரஸ் குறித்த கண்டுபிடிப்பிற்காக ஹார்வி ஆல்டர், சார்லஸ் ரைஸ் மற்றும் பிரிட்டன் மைக்கேல் ஹக்டன் ஆகிய மூன்று அமெரிக்கர்கள் பெற்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு