Published:Updated:

விருதுநகர்: புதிய கண்டுபிடிப்புக்காக பிரதமரிடம் பாலபுரஸ்கார் விருது பெற்ற தமிழக சிறுமி!

கலெக்டர் மற்றும் தந்தையுடன் விஷாலினி

வெள்ளப் பேரிடரிலிருந்து மக்களைக் காக்கும் பலூன் வீடு கண்டுபிடித்ததற்குக் காப்புரிமையும் பெற்று சாதனை படைத்தார் தமிழக சிறுமி விஷாலினி.

விருதுநகர்: புதிய கண்டுபிடிப்புக்காக பிரதமரிடம் பாலபுரஸ்கார் விருது பெற்ற தமிழக சிறுமி!

வெள்ளப் பேரிடரிலிருந்து மக்களைக் காக்கும் பலூன் வீடு கண்டுபிடித்ததற்குக் காப்புரிமையும் பெற்று சாதனை படைத்தார் தமிழக சிறுமி விஷாலினி.

Published:Updated:
கலெக்டர் மற்றும் தந்தையுடன் விஷாலினி

வெள்ளப் பேரிடர், புயல் காலங்களில் உயிர்காக்கும் வகையில் தானியங்கி வசதியுடன் செயல்படும் உயிர்காக்கும் பலூன்வீட்டினை (Automatic Functional Life Rescue Flood House) கண்டிபிடித்த விருதுநகர் சிறுமி விஷாலினிக்கு ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையையும் பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.

மத்திய அரசின் கலை, கல்வி, கலாசாரம், வடிவமைப்பு, புதிய கண்டுபிடிப்பு, துணிச்சல், ஆராய்ச்சி, சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரதமரின் பால சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு பஞ்சாப், சண்டிகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, திரிபுரா, பீகார் மாநிலக் குழந்தைகளுடன் புதிய கண்டுபிடிப்புக்காக தமிழகத்தைச் சேர்ந்த விஷாலினிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் மற்றும் தந்தையுடன் விஷாலினி
கலெக்டர் மற்றும் தந்தையுடன் விஷாலினி

இக்குழந்தைகளுடன் கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாடினார். இதில் விருது பெற்ற 2-ம் வகுப்பு பயின்று வரும் 8 வயதே ஆன விருதுநகரை சேர்ந்த விஷாலினியும் கலந்து கொண்டது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரை சேர்ந்த பேராசிரியர் நரேஷ்குமார் - மருத்துவர் சித்ராகலா தம்பதியின் மகள் விஷாலினி ஹைதாராபாத்திலுள்ள அத்தாப்பூர் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் வெள்ளப் பேரிடர் மற்றும் புயல் காலங்களில் உயிர்காக்கும் வகையில் தானியங்கி வசதியுடன் செயல்படும் உயிர்காக்கும் பலூன் வீட்டினைக் கண்டுபிடித்து அதற்குக் காப்புரிமையும் பெற்ற்றுள்ள நிலையில் தற்போது பிரதமரின் பால புரஷ்கார் விருது பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவர் கண்டுபிடித்துள்ள இச்சாதனம் மீனவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், செல்ல பிராணிகள், முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் முக்கிய ஆவணங்களைக் காப்பாற்ற பயனுள்ளதாக இருக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சாதனம் மூலம் அதிகபட்சமாக 4 நபர்கள் நீரில் மூழ்காமல் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும். தானாகவே இயங்கும் கியர், கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன. மேலும், இதனுள் ஆட்கள் அமர்வதற்கு பெல்டுடன் கூடிய இருக்கைகள், அறையின் மேல்பகுதியின் மையத்தில் இருபுறமும் திறந்து மூட ஜிப்பர் வசதி, சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர் வைப்பதற்கான வசதி, உணவு பொருள்கள் அடங்கிய பை, குடிநீர் பை, முதலுதவி பெட்டி, வெள்ள வீட்டைக் கண்காணிப்பதற்கான ஜி.பி.எஸ், ஜி.எஸ்.எம் வசதி, ஈரப்பதம், வெப்பநிலை, அவசர அலாரம், காற்று அழுத்த கண்காணிப்பு அமைப்பு, ஒவ்வொரு பயணியும் சுவாசிக்க வெளியிலிருந்து காற்றைப் பெறும் வசதி, அனைத்து மின்னணு சாதனங்கள் இயங்க தேவையான மின்சாரத்தைச் சேமிக்க மின்கலன், மின்சாரத்தைப் பெறச் சூரிய ஒளி தகடுகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

பிரதமருடன் காணொலிக் காட்சியில்
பிரதமருடன் காணொலிக் காட்சியில்

சிறு வயதில் மிகப் பெரிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ள விஷாலினிக்கு ஏற்கெனவே மத்திய அரசால் 'இளைய காப்புரிமை' வழங்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில்தான் விஷாலினிக்கு மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடுத்துறை புதுமைப் பிரிவின் கீழ், 'ராஷ்டிரிய பால் புரஸ்கார் - 2022' விருதையும் ஒரு லட்சம் பரிசுத்தொகையினையும் வழங்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பிரதமர் பங்கேற்ற காணொலி காட்சி நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாதரெட்டி உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளுடன் விஷாலினியின் தந்தை நரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விகடன் சார்பில் விஷாலினிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, "விஷாலினியால் அதி முக்கியமான இச்சாதனத்தை எப்படி கண்டுபிடிக்க முடிந்தது?" என்று தந்தை நரேஷ்குமாரிடம் கேட்டோம்.

விஷாலினி
விஷாலினி

"பிரதமருடன் காணொளியில் பங்குபெற்று இவ்விருதை பெற்றது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஹைதாராபாத்திலுள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பை ஆன்லைன் மூலம் படித்து வருகிறார். வகுப்பு நேரம் போக இணையத்தில் பல்வேறு விஷயங்களை பார்ப்பது அவர் பொழுது போக்கு. நாட்டில் மழை வெள்ள பாதிப்பு செய்திகளை டிவியில் பார்க்கும்போதெல்லாம் ஒருமாதிரி ஆவார். அதைத்தொடர்ந்து மக்களைக் காப்பாற்ற கருவியை கண்டுபிடிக்க போவதாக சொல்வார். குழந்தை என்பதால் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அவரே இணையத்தில் மீட்புக் கருவிகளை செர்ச் செய்து பார்த்து அதற்கான பிளானை இரண்டு வருடங்களுக்கு முன் உருவாக்கியபோது எங்களுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. இது சம்பந்தமான தேடுதல், திறமை அவரிடம் இருப்பதை தெரிந்து அவரை உற்சாகப்படுத்தினோம். இறுதியாக, Automatic Functional Life Rescue Flood House-ஐ கண்டுபிடித்தார்.

இதை மத்திய அரசின் காப்புரிமைக்கு விண்ணப்பித்ததில் 2021-ல் காப்புரிமை வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் அந்த அடிப்படையில் பால புரஷ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு பிரதமர் பாராட்டும் காணொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்" என்று மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

காப்புரிமை பெற்றதில் சர்வதேச அளவில் 2வது சிறுமியாகவும், நம் நாட்டளவில் முதல் சிறுமி என்ற பெருமையையும் விஷாலினி பெற்றுள்ளார். எதிர் காலத்தில் இன்னும் பல கண்டுபிடிப்புகளை நாட்டுக்கு அளிப்பார் என்று நம்பலாம்.

அதே நேரம், விருது பெற்ற இந்தி பேசும் 6 மாநில குழந்தைகளுடன் காணொலியில் இந்தியில் கலந்துரையாடிய பிரதமர் மோடியும், அமைச்சர் ஸ்மிருதி இராணியும் தமிழகத்தைச் சேர்ந்த விஷாலினியுடன் மட்டும் கலந்துரையாடாமல் தவிர்த்ததாக சமூக ஊடகங்களில் பலர் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism