Published:Updated:

பாலூட்டிகளின் சிறுநீரிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பயோசிமென்ட்; ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சி!

பயோசிமென்ட் ( Nanyang Technological University )

தொழிற்துறை கசடுகள், பாலூட்டிகளின் சிறுநீரில் இருந்து பிரித்து எடுக்கப்படும் யூரியா ஆகியவற்றை பயன்படுத்தி பயோ சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. பின்னர் இவற்றை கால்சியம் அயனிகளுடன் கலந்து, கடினமான திடப்பொருளாக உருவாக்குகின்றனர்.

பாலூட்டிகளின் சிறுநீரிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பயோசிமென்ட்; ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சி!

தொழிற்துறை கசடுகள், பாலூட்டிகளின் சிறுநீரில் இருந்து பிரித்து எடுக்கப்படும் யூரியா ஆகியவற்றை பயன்படுத்தி பயோ சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. பின்னர் இவற்றை கால்சியம் அயனிகளுடன் கலந்து, கடினமான திடப்பொருளாக உருவாக்குகின்றனர்.

Published:Updated:
பயோசிமென்ட் ( Nanyang Technological University )

கட்டுமானப் பணிகளில் மண்ணை திடமாக்க, இதுவரை நாம் சிமென்ட் பயன்படுத்திப் பார்த்திருக்கிறோம். வழக்கமாக பயன்படுத்தி வரும் சிமென்டை தயாரிக்கும் இந்த செயல்முறையில், டன் கணக்கில் கார்பன் டைஆக்சைடு வெளியாகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், புதுவித சிமென்ட் ஒன்றை சிங்கப்பூர், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் (Nanyang Technological University) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பயோ சிமென்ட்
பயோ சிமென்ட்
twitter

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆச்சர்யம் என்னவென்றால், புதிய முறையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பயோ சிமென்ட்டை, இரண்டு வகையான கழிவுகளில் இருந்து தயாரிக்கிறார்கள். அதாவது, தொழிற்துறை கசடுகளையும், பாலூட்டிகளின் சிறுநீரில் இருந்து பிரித்து எடுக்கப்படும் யூரியாவை பயன்படுத்தியும் தயாரிக்கிறார்கள். பின்னர் இவற்றை கால்சியம் அயனிகளுடன் கலந்து, கடினமான திடப்பொருளாக உருவாக்குகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த பயோ சிமென்ட், புதுப்பிக்கக்கூடிய சிமென்ட். சாதாரண கழிவுகளில் இருந்து இந்த சிமென்ட் தயாரிக்கப்படுவதால் மண்ணை கெட்டியாகப் பிணைக்க, பாக்டீரியாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கட்டுமானப் பணிகளில் மண்ணை பல வகைகளில் மேம்படுத்த, இந்த பயோ சிமென்ட் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கட்டுமான நிலத்தை கடினப்படுத்த, கடற்கரையில் மண் அரிப்பை தடுக்க, பாலைவனப் பகுதிகளில் காற்று அல்லது தூசி அரிப்பை தடுக்க பயோ சிமென்ட் முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, உடைந்த பழமையான சிலைகளை ஒட்ட வைக்கவும், கடற்கரை ஓரங்களிலும் இந்த சிமென்டை பயன்படுத்தி உள்ளனர்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக இயக்குநர் சூ ஜியான் கூறுகையில், “பல்வேறு கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் பாரம்பர்ய சிமென்ட்டுக்கு மாற்றாக, நிலையான இந்த பயோ சிமென்ட் இருக்கும்; பயோ சிமென்ட் தயாரிப்பு செலவை குறைப்பதோடு, கழிவுகளை அகற்றும் செலவையும் குறைக்கும்’’ என்றிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism